அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவும் அபாயம் உலக சுகாதார ஸ்தாபனம்.
ஐரோப்பிய நாடுகளில் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய தேவை உள்ளதாக ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டாக்டர் மார்கிரட் சான் நேற்று இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அவர் கூறியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரை உலகில் 11,500 பேர் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இது போன்று வேறு பல தொற்றுகளுக்கும் உள்ளாகி வருடாந்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரையானோர் உயிரிழப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பன்றிக் காய்ச்சல் தொற்றுக்குள்ளானவர்கள் உரிய வகையில் மருந்துகளை உட்கொள்ளாததாலும் போதியளவு விழிப்புணர்வு இல்லாததாலுமே அநேக மரணங்கள் நிகழ்கின்றன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இந்த எச்சரிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன
0 Response to "அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவும் அபாயம் உலக சுகாதார ஸ்தாபனம்."
แสดงความคิดเห็น