jkr

விடுதலைப்புலிகள் மீது சேறடிக்கும் இரா.சம்பந்தன்


இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக தான் விடுதலைப்புலிகளிடம் நீண்ட நேரம் வாதிட்டதாகக் கூறும் இரா. சம்பந்தன், அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்காவிட்டால், நிச்சயமாக தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் சென்றிருக்கலாம் என்றும், மக்களின் வாழ்விலும் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் மேலும் அவர் கூறினார்.

இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கின்ற போது இந்த விடயத்தை எல்லாரும் மனதில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலின் முக்கிய வேட்பாளர்களைச் சந்தித்து பல விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக கூறிய இரா. சம்பந்தன் அவர்கள், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தாம் இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்றும் கூறினார்.

இது இவ்வாறிருக்க, விடுதலைப்புலிகளின் தாயகம், தேசியம், தன்னாட்சி எனும் கோட்பாட்டையும், விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தையும் ஏற்றமையினாலேயே இவர்கள் தேர்தலி்ல் நின்ற போது மக்கள் வாக்களித்ததும், இவர் இன்று பேசுவதற்கு சந்தர்ப்பத்தையும் வழங்கிய அம்மக்களை இரா.சம்பந்தன் மறந்து விட்டார் என்றும், இவரின் இன்றைய இக்கருத்துக்களினால் எதிர்வரும் காலங்களில் இவர் மக்களால் ஒதுக்கப்படும் நிலமை ஏற்படும் என்றும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

30,000ற்கும் மேற்பட்ட மாவீரர்களையும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களையும் இழந்து நிற்கும் தமிழினம், சிறீலங்காவினால் ஏற்படுத்தப்பட்ட கடந்தகால இரத்தக்கறை படிந்த வரலாற்றை என்றுமே மறந்துவிடமாட்டார்கள் என்றும் மேலும் தெரிவிக்கின்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "விடுதலைப்புலிகள் மீது சேறடிக்கும் இரா.சம்பந்தன்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates