jkr
แสดงบทความที่มีป้ายกำกับ இரா.சம்பந்தன் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ இரா.சம்பந்தன் แสดงบทความทั้งหมด

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று நண்பகல் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதற்கான அறிவிப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது நான்கு ஆண்டு ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் விடயத்தில், உரிய முனைப்புகளை மேற்கொள்ளவில்லை என்ற அடிப்படையில் அவரை ஆதரிக்கவில்லை எனக்குறிப்பிட்ட அவர், தேர்தலை பகிஷ்கரித்தால், அதன் மூலம் மீண்டும் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே அவர் மீண்டும் பதவிக்கு வருவதை தடுக்கக்கூடியவர் சரத் பொன்சேகா என்ற அடிப்படையிலேயே அவருக்கு ஆதரவளிக்க முன்வந்ததாக சம்பந்தன் தெரிவித்தார்.

இந்தநிலையில் மஹிந்த ராஜபக்சவை விட பொன்சேகா தமிழர்களின் பிரச்சினையை நன்கு உணர்ந்திருப்பதாக சம்பந்தன் குறிப்பிட்டார்.

இது தொடர்பான மேலும் செய்திகள்:-

ஆட்சி மாற்றத்துக்கு மக்களைக் கோர கூட்டமைப்பு நேற்று ஏகமனதாக முடிவு: பொன்சேகாவை ஆதரிக்கவும் தீர்மானம்

தான் ஜனாதிபதியானால்....பொன்சேகா ஒப்பமிட்டு சம்பந்தனிடம் கையளித்துள்ள ஆவணம்

பொன்சேகாவை, சம்பந்தன் சந்தித்து 10 அம்சத்திட்ட ஆவணம் கையளிப்பு

அழைப்பு விடுக்காதபோதும் ஸ்ரீகாந்தா, கிஷோர், சிவாஜிலிங்கம் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு அனுமதி

இரா.சம்பந்தன் அவர்களும், அண்மைய சர்ச்சையும்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சம்பந்தன் - ஜனாதிபதி நேற்றிரவு அலரி மாளிகையில் சந்திப்பு


தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் நேற்றிரவு அலரி மாளிகையில் சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறும் வகையில் இதற்கான அழைப்பு ஜனாதிபதியினால் விடுக்கப்படடிருந்ததாக தெரிய வருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கு மட்டும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் அவருடன் சென்றிருந்தார்.

குறிப்பாக இச்சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு அதரவு வழங்குமாறு கோரியதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாட்டை அக்கட்சியைச் சார்ந்தவர்கள் எடுத்துக் கூறியதாகவும் தெரியவருகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

விடுதலைப்புலிகள் மீது சேறடிக்கும் இரா.சம்பந்தன்


இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக தான் விடுதலைப்புலிகளிடம் நீண்ட நேரம் வாதிட்டதாகக் கூறும் இரா. சம்பந்தன், அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்காவிட்டால், நிச்சயமாக தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் சென்றிருக்கலாம் என்றும், மக்களின் வாழ்விலும் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் மேலும் அவர் கூறினார்.

இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கின்ற போது இந்த விடயத்தை எல்லாரும் மனதில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலின் முக்கிய வேட்பாளர்களைச் சந்தித்து பல விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக கூறிய இரா. சம்பந்தன் அவர்கள், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தாம் இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்றும் கூறினார்.

இது இவ்வாறிருக்க, விடுதலைப்புலிகளின் தாயகம், தேசியம், தன்னாட்சி எனும் கோட்பாட்டையும், விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தையும் ஏற்றமையினாலேயே இவர்கள் தேர்தலி்ல் நின்ற போது மக்கள் வாக்களித்ததும், இவர் இன்று பேசுவதற்கு சந்தர்ப்பத்தையும் வழங்கிய அம்மக்களை இரா.சம்பந்தன் மறந்து விட்டார் என்றும், இவரின் இன்றைய இக்கருத்துக்களினால் எதிர்வரும் காலங்களில் இவர் மக்களால் ஒதுக்கப்படும் நிலமை ஏற்படும் என்றும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

30,000ற்கும் மேற்பட்ட மாவீரர்களையும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களையும் இழந்து நிற்கும் தமிழினம், சிறீலங்காவினால் ஏற்படுத்தப்பட்ட கடந்தகால இரத்தக்கறை படிந்த வரலாற்றை என்றுமே மறந்துவிடமாட்டார்கள் என்றும் மேலும் தெரிவிக்கின்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தன் போட்டி?


எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியிடக் கூடுமென பிரபல ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனநயாக மக்கள் முன்னணியுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்னும் ஒரு வார காலத்தில் அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.

மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து தீர்மானம் எடுக்கப்படும் என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளர் தொடர்பிலும் தமிழ் மக்கள் அதிக நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்னும் ஒரு சில தினங்களில் ஜனாதிபதித் தேர்தலில் தமது தீர்மானத்தை அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்னசிங்கத்திடம் கேட்ட போது, ஜனாதிபதித் தேர்தலில் இரா. சம்பந்தன் போட்டியிடுவது குறித்த தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

யுத்தம் முடிந்த பின்னரும் அவசரகால சட்டத்தை நீடிப்பது நியாயமானதல்ல-இரா. சம்பந்தன்


யுத்தம் முடிவுக்கு வந்து விட்ட பின்னரும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது நியாயமானதல்ல. இதனையாரும் நியாயப்படுத்தவும் முடியாது. யுத்தம் முடிந்து விட்டதால் அவசரகாலச் சட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். சர்வதேச சட்டங்களுக்கு முரணாகவே மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் நாட்டில் நல்லாட்சியோ, ஜனநாயக ஆட்சியோ, நாகரிகமான ஆட்சியோ நடைபெறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு .உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்தம் முடிந்துள்ள நிலையில் பிரேரணையை நீடிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உள்ளூர், சர்வதேச சட்டதிட்டங்களுக்கு முரணாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உறவினர்களோ, ஊடகவியலாளர்களோ, அன்றேல் மக்கள் பிரதிநிதிகளோ பார்க்க இயலாது. அவர்களை பார்வையிடுவதற்கான அனுமதியும் வழங்கப்படுவதில்லை.இடம்பெயர்ந்து வாழ்பவர்களுடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்த முடியாத நிலைமையே இருக்கின்றது. இவை உள்நாட்டு, வெளிநாட்டு சட்ட திட்டங்களுக்கு முரணாகவே இருக்கின்றன. அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா, இந்தியா உட்பட சர்வதேச சமூகம் கோரி நிற்கின்றது.

அத்துடன், ஐ.நா.வும் ஏகமனதாக கேட்டுக்கொண்டுள்ளது. முகாமில் இருக்கின்ற மக்கள் தங்களுடைய சொந்த தீ“ர்மானங்களை தாங்களே எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.உறவினர்களுடன் சேர வேண்டுமா? நாண்பர்களுடன் சேர வேண்டுமா? என்பதை அவர்களே முடிவு எடுக்க வேண்டும். இடைத்தங்கல் முகாம்களில் இருந்து கொண்டே உடைந்த தமது வீடுகளை திருத்திக்கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்கலாம். அவர்கள் அங்கு மீண்டும் தொழில் வாய்ப்புகளை ஆரம்பிக்கக்கூடும். அந்த உரிமை மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் அனுபவிக்கும் உரிமை அந்த மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில மாதங்களுக்குள் அந்த மக்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. வாக்குரிமையானது இறைமையின் ஓர் அங்கமாகும்.வவுனியாவிலுள்ள முகாம்களை விடவும் இடைத்தங்கல் முகாம்களின் நிலையானது மிகமோசமானது என்பதனால் மக்களை தடுத்து வைத்திருப்பது உகந்தது அல்ல. சாதாரண மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை அந்த மக்களும் அனுபவிக்க வேண்டும். மிருகங்களை போல தடுத்து வைக்கப்பட்டிருப்பதனை ஏற்கமுடியாது. இதுவே சர்வதேசத்தின் முறைப்பாடாக இருக்கின்றது.இடம்பெயர்ந்தவர்களுக்கு 5000 ரூபாவும் உணவுப் பண்டங்களும் பொருட்களும் வழங்கப்படுகின்றன. ஏனைய உதவிகள் வழங்கப்படுவதில்லை. கௌரவமாக வாழ்ந்தவர்கள் இன்று அகதிகளாக்கப்பட்டுள்ளனர். உழைக்கும் மார்க்கத்தை இழந்துவிட்டனர் என்பதானல் மார்க்கங்களை ஏற்படுத்தி கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். சர்வதேச தொண்டு நிறுவனங்களை சு“தந்திரமாக அப்பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதியளிக்க வேண்டும். அவர்களின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.அவர்கள் செல்வதை தடுக்க வேண்டாம். இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் உதவிகளை வழங்கியுள்ளன. பல நாடுகள் வழங்குவதற்கு முன்வந்துள்ளன. இவர்கள் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு முன்வரவில்லை, மக்களுக்கே வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் எந்த வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை என்று அறிகின்றேன். அவற்றை செய்யாவிட்டால் உதவிகளே கிடைக்காமல் போகும். ஜனாதிபதி 50 வீதம் வாக்குகளைப்பெற்று ஆட்சியிலிருக்கின்றார். கூட்டமைப்பில் 22 உறுப்பினர்கள் இருக்கின்றோம். நாம் கூறுவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதில்லை.இங்கு நாகரிகமான ஆட்சியோ, நல்லாட்சியோ, ஜனநாயக ஆட்சியோ இடம்பெறவில்லை என்பதனாலும் யுத்தம் நிறைவடைந்து விட்டமையினாலும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதனை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

இதேவேளை, 10 ஆயிரம் பேர் முதல் 15ஆயிரம் பேர்வரை விசேட தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியாமல் உறவினர்கள் தவிக்கின்றன. எனவே, விசேட தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் தொடர்பான விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் அது அரசாங்கம் செய்யும் பாரிய குற்றமாகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அரசின் உதவியுடன் கிழக்கில் சிங்கள குடியேற்றம்- சம்பந்தன்!

திருகோணமலை உள்ளிட்ட கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறுபான்மை இனத்திற்குச் சொந்தமான காணிகளையும், அரச காணிகளையும் பெரும்பான்மையினர் சட்டவிரோதமான முறையில் அரசிலுள்ள சிலரின் ஒத்துழைப்புடன் கைப்பற்றி வருகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டியது.

இந்தச் சட்டவிரோதக் குடியேற்றம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும் இல்லையேல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்க்க முடியாத சில முடிவுகளை எடுக்கவேண்டி வரும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கிழக்கில் திருகோணமல் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சட்டவிரோதக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. பெரும்பான்மையினர் சிறுபான்மையினரின் காணிகளையும், அரச காணிகளையும் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றி குடியேறி வருகின்றனர். திருகோணமலை மொறவௌ, வேப்பங்குளம், தம்பலகாமம் பிரதேசங்களுக்கு உட்பட்ட பாலமோட்டை, பத்தினிபுரம், குச்சவெளி பிரதேசபைக்கு உட்பட்ட இறக்கக்கண்டி உள்ளிட்ட பல இடங்களில் இந்தச் சட்டவிரோதக் குடியேற்றம் இடம்பெறுகிறது.

மேற்படி இடங்கள் அனைத்தும் சிறுபான்மையினருக்குச் சொந்தமானவை. அவர்களை விரட்டிவிட்டு இவ்வாறு அபகரிக்கப்படுகின்றன. அரசில் உள்ள ஒரு பிரிவினர் இதற்குப் பின்னால் உள்ளனர்.
சம்பூரில் திரும்பி வந்து வாழ முடியவில்லை சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் திரும்பிவந்து வாழ முடியாமல் உள்ளனர். அந்தப் பகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருப்பதே இதற்குக் காரணம். இந்த இடங்களில் சிறுபான்மை மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்தனர். பாடசாலைகள்இ கோயில்கள் உள்ளிட்ட அதிக கட்டடங்கள் அங்கு இருந்தன. அவை அனைத்தும் இப்போது அழிக்கப்பட்டுவிட்டன. நன்கு திட்டமிடப்பட்ட இந்தச் சட்டவிரோத குடியேற்றம் உடன் நிறுத்தப்படாவிட்டால்இ சிறுபான்மை இனத்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர். இது ஓர் அடிப்படை மனித உரிமை மீறலாகும். சிறுபான்மை இன மக்களைத் தொடர்ந்தும் அங்கிருந்து விரட்ட பெரும்பான்மையினர் முயற்சி செய்கின்றனர். சட்டம் பாரபட்சமாக நடத்தப்படுகின்றது. பெரும்பான்மையினருக்கு சட்டம் வேறுவிதமாகப் பயன்படுத்தப்படுகிறது. திருகோணமலை உள்ளிட்ட கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறுபான்மை இனத்திற்குச் சொந்தமான காணிகளையும்இ அரச காணிகளையும் பெரும்பான்மையினர் சட்டவிரோதமான முறையில் அரசிலுள்ள சிலரின் ஒத்துழைப்புடன் கைப்பற்றி வருகின்றனர். இந்தச் சட்டவிரோதக் குடியேற்றம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்க்க முடியாத சில முடிவுகளை எடுக்கவேண்டி வரும். என்று இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வன்னிப் படுகொலைகளை மூடிமறைக்கவா? அரசு கண்ணிவெடியகற்றும் பணிக்கு வெளிநாட்டவர்களை அனுமதிக்க மறுக்கிறது -இரா.சம்பந்தன் கேள்வி


மூடி மறைப்பதற்கு முயற்சி செய்கின்ற அரசு, அதற்காகவே அங்கு கண்ணிவெடி அகற்றும் பணிகளில் வெளிநாட்டவர்கள் ஈடுபட அனுமதி மறுக்கின்றது என்று தமிழ் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசர காலச்சட்ட நீடிப்புப் பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு, அகதிகளின் நிலைமை இப்போது பரிதாபகரமாகவுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகப் போகின்றது. இதனால் அவர்களின் நிலைமை மேலும் மோசமாகப்போகின்றது. அரசு இந்த விடயத்தில் கூடியகவனம் செலுத்தவேண்டும். ஆனால், அரசு இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கண்ணிவெடிகள் அகற்றி முடிக்கப்படாமையே மீள்குடியேற்றம் தாமதமாவதற்குக் காரணம் என்று அரசு கூறுகின்றது. கண்ணிவெடிகள் அகற்றுவதில் அரசு உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. சர்வதேசநாடுகள் கண்ணிவெடிகள் அகற்றும் பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளன. ஆனால், அரசுக்கு அதற்கு அனுமதி வழங்கவில்லை. வன்னியில் பொதுமக்கள் கொலைசெய்யப்பட்டமை சர்வதேசத்திற்குத் தெரிந்துவிடும் என்பதால்தான் அரசு அனுமதி வழங்கவில்லை. கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை இப்போது தான் ஆரம்பிக்கப்பட்டுள்து படையினரை மட்டும்தான் அரசு கண்ணிவெடி அகற்றலில் பயன்படுத்துகின்றது. முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இப்போதுதான் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என நாம் அறிகிறோம். செப்டெம்பர் மாத முற்பகுதியில்கூட மேற்படி பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றும்பணி ஆரம்பிக்கப்படவில்லை. இதைத் துரிதப்படுத்த வெளிநாட்டவர்கள் ஈடுபடுத்தப்படவேண்டும் என்று நாம் கூறுகின்றோம். தமிழர்கள் இந்த நாட்டைவிட்டு ஓடவேண்டும் என்ற அரசு விரும்புகிறதா? கண்ணிவெடிகள் புதைக்கப்படாத இடத்தைக் கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எல்லா நிலத்தையும் ஒன்றிணைத்து கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. அதுதான் தாமதத்திற்குக் காரணம். கண்ணிவெடிகள் புதைக்கப்படாத நிலத்தைக் கண்டுபிடிக்க அரசு தனியாக நடவடிக்கை எடுத்தால் அந்த இடத்தில் இப்போதே மக்களை குடியமர்த்தலாம். அரசு அவ்வாறான நடவடிக்கைகள் எவற்றையும் பின்பற்றவில்லை. அகதிகள் அவரவர் சொந்த இடங்களிலேயே மீள்குடியமர்த்தப்படுவார்களா என்று நான் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் கேட்டபோது, அவர் ஆம் என்று பதிலளித்தார். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக 30 வீதமான மக்கள் வேறு இடங்களில்தான் குடியமர்த்தப்படுவர் என்று டொக்டர் ஜெகான் பெரேரா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஜெகான் பெரேரா நல்ல முறையில் தகவல் திரட்டித் தருபவர். அவரது கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த விடயம் தொடர்பில் அரசு தெளிவுபடுத்தவேண்டும். நாம் தமிழர் என்பதற்காகவே அரசு இப்படிச் செய்கிறது. ஏன் எம்மை இப்படி அடக்கி ஒடுக்குகின்றது. தமிழர்கள் இந்த நாட்டைவிட்டு ஓடவேண்டும் என்று அரசு விரும்புகிறதா? எம்மை இப்படி அடக்கி ஒடுக்க வேண்டாம். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates