தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று நண்பகல் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதற்கான அறிவிப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ளார்.
இந்த தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது நான்கு ஆண்டு ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் விடயத்தில், உரிய முனைப்புகளை மேற்கொள்ளவில்லை என்ற அடிப்படையில் அவரை ஆதரிக்கவில்லை எனக்குறிப்பிட்ட அவர், தேர்தலை பகிஷ்கரித்தால், அதன் மூலம் மீண்டும் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.
எனவே அவர் மீண்டும் பதவிக்கு வருவதை தடுக்கக்கூடியவர் சரத் பொன்சேகா என்ற அடிப்படையிலேயே அவருக்கு ஆதரவளிக்க முன்வந்ததாக சம்பந்தன் தெரிவித்தார்.
இந்தநிலையில் மஹிந்த ராஜபக்சவை விட பொன்சேகா தமிழர்களின் பிரச்சினையை நன்கு உணர்ந்திருப்பதாக சம்பந்தன் குறிப்பிட்டார்.
இது தொடர்பான மேலும் செய்திகள்:-
ஆட்சி மாற்றத்துக்கு மக்களைக் கோர கூட்டமைப்பு நேற்று ஏகமனதாக முடிவு: பொன்சேகாவை ஆதரிக்கவும் தீர்மானம்
தான் ஜனாதிபதியானால்....பொன்சேகா ஒப்பமிட்டு சம்பந்தனிடம் கையளித்துள்ள ஆவணம்
பொன்சேகாவை, சம்பந்தன் சந்தித்து 10 அம்சத்திட்ட ஆவணம் கையளிப்பு
அழைப்பு விடுக்காதபோதும் ஸ்ரீகாந்தா, கிஷோர், சிவாஜிலிங்கம் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு அனுமதி
இரா.சம்பந்தன் அவர்களும், அண்மைய சர்ச்சையும்
0 Response to "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு"
แสดงความคิดเห็น