லாப் சமையல் எரிவாயு 60 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
லாப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
எனினும் செல் சமையல் வாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும், செல் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று தொடர்ந்தும் 1550 ரூபாவுக்கு விற்கப்படும் எனவும் அறிவி;க்கப்படுகின்றது.
செல் சமையல் எரிவாயுவை 280 ரூபாவினாலும் லாப் சமையல் எரிவாயுவை 84 ரூபாவினாலும் அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபையினரிடம் குறிப்பிட்ட நிறுவனங்கள் கோரிக்கை விடுத்த போதிலும் விலைச் சூத்திரத்தின்படி இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
0 Response to "லாப் சமையல் எரிவாயு 60 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்."
แสดงความคิดเห็น