கூட்டமைப்பு எம்.பி.க்கள் அமைச்சர்களாக மாறவேண்டும்: ஜனாதிபதி அழைப்பு
எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் அமைச்சர்களாக மாற வேண்டும். அதற்கேற்ற வகையில் செயற்பட அரசாங்கம் தயாராகவுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரை சந்தித்து பேசிய போதே ஜனாதிபதி அமைச்சர்களாக மாறும்மாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்த தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இருவரும், நாம் பதவி பட்டங்களுக்காக அரசியலில் ஈடுபடவில்லை.
தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே நாம் செயற்படுகின்றோம் என்று கூறியுள்ளனர்.
0 Response to "கூட்டமைப்பு எம்.பி.க்கள் அமைச்சர்களாக மாறவேண்டும்: ஜனாதிபதி அழைப்பு"
แสดงความคิดเห็น