jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ แสดงบทความทั้งหมด

விடுதலைப்புலிகளை ஒழித்தது போன்று ஊழல் மோசடிகளையும் ஒழிப்பேன் :-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ


இலங்கை இன்று வறிய நாடல்ல. அது மத்திய தர வருமானம் உள்ள நாடாகுமென உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது ஆச்சரியமிக்க வெற்றியாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். விடுதலைப்புலிப் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தது போன்று, 27ஆம் திகதிக்குப் பின்னர் ஊழல் மோசடிகளையும் ஒழிப்பேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை பிலியந்தலை சோமவீர சந்திரசிறி மைதானத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், இதுவரையில் உலக நாடுகளின் வறிய நாடுகள் பட்டியலில் இருந்த நாங்கள் இன்று உலகில் மத்தியதர வருமானம் பெறும் பட்டியலில் இடம்பிடித்துள்ளோம். இதனை சர்வதேச நாணயநிதியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, உண்மையான மாற்றம் எமது மேடையிலேயே இருக்கிறது. எனவே, இதனை அனுபவிக்க ஆயத்தமாவோம்.

ஊடகச் சுதந்திரம் மனித உரிமைகள், நாட்டில் சுதந்திரம் தொடர்பாகக் குரல்கொடுப்பவர்களென தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோர் இன்று ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர். இவ்வாறு இன்று பலர் தோன்றியுள்ளனர். இவர்கள் அனைவரது கைகளிலும் இரத்தம் தோய்ந்துள்ளது. இரத்த வாடை வீசுகின்றது. எனவே, அச்சுறுத்துவதென்பது இவர்களுக்கு பெரியதொரு விடயமல்ல. மனித உரிமைகளை, ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாக்க இந்த மஹிந்த ராஜபக்ஷ அர்ப்பணிப்பு செய்வான்.

இந்த நாட்டை அபிவிருத்தி செய்து, உலகிலேயே உத்தமமான நாடு என்ற பெயரை பெற்றுக் கொடுப்பதற்கு எம்மோடு கைகோர்த்துக் கொள்ளுங்கள். குரோதம் கொண்ட அரசியல் பரப்புவதைக் கைவிட்டு, அன்பைப் பரப்பும் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம். சமாதானமான தேர்தலுக்குப் பின்பு நாட்டில் இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்காது ஜனநாயக ஆட்சிக்கு வழிவகுப்போம். இதற்காக ஒன்றிணைவோம். ஐ.தே.கட்சியில் எஞ்சியுள்ளோரையும் எம்மோடு இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

நாட்டில் சிறந்த சுகாதார சேவை, கல்வி முறைமையை உருவாக்குவதற்கு நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும். சிங்கப்பூரைப் போன்று முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்காகப் பாடுபடுவோம். ஒழிக்கப்பட்ட பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. எம்மிடம் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் ஒன்றுள்ளது. இதற்காக 27ஆம் திகதியிலிருந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இச்செய்தியை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். 27ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் விருப்புவாக்கு முறைமை இருக்காது, விருப்பு வாக்குகளுக்காக சண்டையிட்டுக் கொள்ளும் நிலைமை உருவாகாது. விருப்புவாக்கு முறைமையை இரத்துச் செய்வேன் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தேர்தலில் வெற்றி பெற்ற முதல் வருடத்தில் 2 இலட்சம் பேருக்கு வெளிநாட்டு வேலை:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!


பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் பெற்று தேர்தல் பிரசாரம் நடத்துவோம் என்று கூறுபவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுப்பதென்பது அதிசயமான விடயமல்ல என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.கேகாலை நகரில் நேற்று (21ம் திகதி ) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி; நாட்டைக் காட்டிக்கொடுப் போரை எதிர்வரும் 26ம் திகதி மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (21ம் திகதி ) கேகாலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.அமைச்சர்கள் அதாவுத செனவிரட்ன, ரஞ்சித் சியம்பலாபிடிய, விஷ்வ வர்ணபால, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட அமைச்சர்கள், மாகாண முதல்வர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

கிராமத்தில் பிறந்த எனக்கு கிராம மக்களின் பிரச்சினைகள் என்னவென்று நன்றாகத் தெரியும். கிராமப்புறங்களை மேம்படுத்தும் செயற்திட்டங்களை நாம் நிறைவேற்றுவோம். அத்துடன் தேர்தல் முடிந்ததும் முதல் வருடத்திலேயே இரண்டு இலட்சம் பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண் டுள்ளோம்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டின் அதிகாரத்தை மக்கள் எனக்கு வழங்கினர். நாம் இந்த குறுகிய காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்.

ரணில் – பிரபாகரன் ஒப்பந்தக் காலத்திலேயே இந்த நாட்டை நான் பொறுப்பேற்றேன். அச்சமயம் இனம், மதம், குலம், கட்சி என நாடு பேதப்பட்டுக் கிடந்தது. பயங்கரவாதிகளை பயங்கரவாதிகள் என்று சொல்ல தலைவர்கள் தயங்கிய யுகம் அது. அந்த யுகத்தை நாம் மாற்றியமைத்தோம்.

பிரபாகரன் தமது இனத்துக்காகவே யுத்தம் செய்கிறார் என எமது தலைவர்கள் கூறினார்கள்.

எனினும் பிரபாகரன் ஒரு பயங்கரவாதி, பிரிவினைவாதி என்று நாம் சர்வதேசத்திற்குக் காட்டினோம். அதனால்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் செய்தோம்.

நாம் யுத்தம் மட்டும் செய்யவில்லை. நாட்டின் பல பகுதிகளிலும் துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் விமான நிலையம் என பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து எமது இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

அத்துடன் 45 ஆயிரம் பட்டதாரிகளுக்குத் தொழில் வழங்கி ஆறு இலட்சமாகவிருந்த அரச ஊழியர்களை 12 இலட்சமாக அதிகரித்தோம். நாடு முழுவதும் அபிவிருத்திப் பணிகள் புதிய பாதைகள், பாலங்கள் என எமது அபிவிருத்தி தொடர்கின்றது.

‘ஆங்கிலப் பயிற்சி’ நெனசல அறிவகம் ஆகியவற்றை ஆரம்பித்து முறையாக முன்னெடுத்தோம். நாம் இவற்றையெல்லாம் தேர்தலுக்காக செய்யவில்லை. தேர்தலா - நாடா என வந்தபோது நான் நாட்டையே அப்போதும் முன்னிலைப்படுத்திச் செயற்பட்டேன். இப்போதும் அதனையே முன்னிலைப்படுத்தியுள்ளோம். நாம் மேற்கொண்ட திட்டங்கள் நாட்டின் எதிர்கால பொருளாதாரத்திற்கு உறுதுணையாக அமைவது உறுதி.

மஹிந்த சிந்தனையின் முதற்கட்ட நடவடிக்கைகள் போன்றே இரண்டாம் கட்ட நடவடிக்கைகளும் ஒன்றிணைந்த இலங்கையிலேயே முன்னெடுக்கப்படும் என்பது உறுதி. நாம் எதைச் செய்தாலும் ஒன்றிணைந்த இலங்கைக்குள்ளேயே அதனைச் செய்வோம்.

சம்பந்தன் - பொன்சேகாவுக்கு இடையிலான இரகசிய உடன்படிக்கை ஒன்றிணைந்த நாட்டை உட்படுத்தியதல்ல. நாட்டைச் சீரழிக்கும் உடன்படிக்கை அது.

அதனால் தான் என்னிடம் வந்த சம்பந்தனிடம் முடியாது என்று ஒரேயடியாகக் கூறிவிட்டேன்.

அதனால் தான் சுயநிர்ணய உரிமை வழங்குதல், இராணுவ முகாம்களை அகற்றுதல், சிறையிலுள்ள புலிகளை விடுதலை செய்தல் போன்ற விடயங்களை மேற்கொள்ள முடியாது என நான் அடித்துக் கூறிவிட்டேன்.

நாம் பயணிக்கும் பாதை தெளிவானது, நாட்டை முன்னேற்றும் பயணம் அது. அதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பமாகும். ஆசியாவில் சிறந்த நாடாக இலங்கையை உருவாக்க நாம் இணைந்து செயற்படுவோம். வெற்றிலையின் வெற்றி நம் அனைவரினதும் வெற்றி. அது நாட்டின் வெற்றி என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

முப்பது வருடங்கள் இல்லாத அபிவிருத்திகள் தற்போது நடைபெறுகின்றன : ஜனாதிபதி


நாட்டில் கடந்த 30 வருடங்கள் இல்லாத அபிவிருத்திகள், வடக்கின் வசந்தம் செயல் திட்டத்தின் கீழ் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மதவாச்சியிலிருந்து மன்னாருக்கான ரயில் போக்குவரத்துச் சேவையினை ஆரம்பிப்பதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இன்று சனிக்கிழமை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மில்ரோய் எஸ்.பெர்ணான்டோ, புத்திர சிகாமணி, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, ஜனாதிபதியின் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, டெலோ அமைப்பைச் சேர்ந்த உதயகுமார் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது :

"எமது நாடானது சகல சமூகங்களுக்கும் சொந்தமானது. தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என்ற பேதம் இங்கில்லை. அனைத்து மக்களும் எமது இலங்கை தேசத்தின் பிள்ளைகளே. இம்மக்களது அனைத்து விதமான தேவைகளையும் பெற்றுக் கொடுப்பதோடு, அவர்கள் சுதந்திரமாக வாழக் கூடிய சுதந்திரமும் உருவாகியுள்ளது.

சிறுபான்மை மக்கள் என்று எவருமில்லை. எல்லோரும் சமமானவர்கள் என்பதை நான் உறுதிப்படுத்தியுள்ளேன். முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்ற இடங்களில் இருக்க வேண்டியது எமது தாய் நாடே. அதனை எவருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது.

மன்னார் மாவட்டம் பின்தங்கிய, அபிவிருத்தி குறைந்த, ஒதுக்கப்பட்ட பிரதேசமல்ல. அனைத்து துறைகளிலும், அபிவிருத்திகளிலும் முன்னேற்றம் அடைந்து வரும் பிரதேசம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதேபோன்ற அபிவிருத்திகள் எதிர்காலத்தில் உங்களை வந்தடையவுள்ளது.

எனது நான்கு வருட ஆட்சிக் காலத்தில் நாட்டை மீட்டெடுத்தேன். இன்று நீங்கள் கடலுக்கு மீன் பிடிக்க சுதந்திரமாக போகலாம். விவசாயம் செய்யலாம். தொழில்களுக்குச் செல்லலாம். ஏன், அச்சமின்றி எங்கும் பயணிக்கலாம். இதை நான் உங்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

நான் அன்று கடற்தொழில் அமைச்சராக இருந்த போது, வங்காளையில் மீன்பிடி கூட்டுத்தாபனத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் விவசாயத்துறையினை மேம்படுத்தி வருகின்றோம். அதற்கான நீர்ப்பாசனத் திட்டங்களைப் புனரமைப்பு செய்துள்ளோம்.

அதே போன்று, விவசாயிகளைப் பாதுகாத்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம். இப்பிரதேச மாணவ சமூகம் கல்வித் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எனது அவாவாகும்.

அரசாங்கத்தினதும் ஏனைய துறைகளினதும் உயர் பதவிகளை இப்பிரதேச மக்கள் வகிக்க வேண்டும். அதற்காகப் பிரார்த்தனை புரிகின்றேன். தொழிலற்ற, கல்வி கற்ற இளைஞர், யுவதிகளுக்குத் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளேன். பட்டதாரிகள் தொழில்களை பெறவுள்ளனர்.

நான் ஒரு போதும் பொய் வாக்குறுதி அளித்ததில்லை. அளிக்கப் போவதுமில்லை. செய்வதை தான் சொல்வேன். சொல்வதை தான் செய்வேன்.

இந்த நாட்டில் இனவாதம் இருக்க முடியாது. அது எமக்கு பெரும் ஆபத்தையுயும், அழிவையுமே ஏற்படுத்தும். தமிழ்ப் பேசும் மக்கள் எமது மக்கள். நாம் அவர்களை நேசிக்கின்றோம். நீங்களும் என்னை நேசிக்கின்றீர்கள. இது தான் யதார்த்தம். நீங்கள் கௌரவமாக வாழ்வதற்கான உத்தரவாதத்தை நான் தருகின்றேன். அதனை பாதுகாக்க வெண்டியது எனது கடமையும் பொறுப்புமாகும்.

எதிர்வரும் 26ஆந் திகதி உங்கள் வாக்குகளை எனக்கு அளிப்பீர்கள் என்று நம்புகின்றேன். வெற்றிலைச் சின்னம், வெற்றியின் சின்னம். வெற்றிலைச் சின்னம் உங்களின் சின்னம். 27 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதியாக உங்களைச் சந்திக்க வருவேன்."

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாட்டை காட்டிக் கொடுக்க இடமளியோம்-ஜனாதிபதி!


உயிர்களை அர்ப்பணித்து பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டிருக்கும் தாய் நாட்டை திருட்டுத் தனமாக உடன்படிக்கைகளின் ஊடாக மீண்டும் காட்டிக் கொடுக்க இடமளியோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மொனறாகலையில் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மொனறாகலை மாவட்ட ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் மொனறாகலை பிரதேச சபை பொதுமக்கள் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த எல்லா தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அமோக வெற்றியைப் பெற்றுத் தந்த மாவட்டங்களில் மொனறாகலையும் ஒன்றாகும். அந்த வகையில் இந்த சன சமுத்திரம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அமோக வெற்றியைப் பெற்றுத் தரும் என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது. ஆனால் நாம் இந்த வெற்றியைப் பேணிப் பாதுகாக்கவென உச்ச அளவில் செயற்படுவோம்.

மொனறாகலை மாவட்டத்திற்கு ஒரு பக்கம் கிழக்கு மாகாணம், மறுபக்கம் சப்ரகமுவ , ஊவா மாகாணங்கள் அமைந்திருக்கின்றன. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க பூமி. இங்கு ஒரு இலட்சம் வயல் நிலங்கள் இருந்துள்ளன என்று வரலாற்றில் பதிவாகியுள்ளது. என்றாலும் கடந்த கால செயற்பாடுகளால் அவை குறைந்துள்ளன. ஆன போதிலும் இப்பகுதி மீண்டும் வளமான விவசாய பூமியாகக் கட்டியெழுப்பப்படும்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாட்டை மீட்டுத் தருவேன் என்று வாக்குறுதி வழங்கினேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றி நாட்டை விடுவித்திருக்கின்றேன். மிகவும் அர்ப்பணிப்புடன் விடுவிக்கப்பட்டிருக்கும் நாட்டைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். இரகசிய ஒப்பந்தங்களின் ஊடாக நாட்டை மீண்டும் காட்டிக் கொடுக்க நாம் இடமளியோம்.

முப்படைகளையும் பொலிஸ் துறையையும் சேர்ந்த 27 ஆயிரம் பேர் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துத்தான் இந்த நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்திருக்கின்றார்கள். இந்த நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. நாட்டில் ஊழல், மோசடிகளை ஒழித்துக்கட்டும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். அதேநேரம் நாட்டைப் பாரியளவில் துரிதமாக அபிவிருத்தி செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம்.

வீதி, மின்னுற்பத்தி, துறைமுக நிர்மாணங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இவை யுத்தம் ஒரு பக்கம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மறுபக்கம் மேற்கொள்ளப்பட்டன.மொனறாகலை ஆஸ்பத்திரி 4000 லட்சம் ருபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றது. இதற்கு தேவையான சகல வேலைத் திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம், விமான நிலையம் என்பன அமைக்கப்பட்டதும் அதன் பயனை நீங்கள் அடைந்துகொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

உங்களதும், உங்களது எதிர்கால சந்ததியினரதும் நலன்களை கருத்தில் கொண்டுதான் நாட்டை அபிவிருத்தி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். 2015ம் 2020ம் ஆண்டுகளை இலக்காக வைத்துத்தான் இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.ஆகவே எதிர்வரும் 26ம் திகதி ஐ. ம. சு. மு. யை ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றி பெறச் செய்து, நாட்டைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என்றார்.இக் கூட்டத்தில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, சுமேதா ஜீ ஜயசேன, ஜகத் புஷ்பகுமார, எம்.பி. விமல் வீரவன்ச உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் உரையாற்றினார்கள்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கூட்டமைப்பு எம்.பி.க்கள் அமைச்சர்களாக மாறவேண்டும்: ஜனாதிபதி அழைப்பு


எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் அமைச்சர்களாக மாற வேண்டும். அதற்கேற்ற வகையில் செயற்பட அரசாங்கம் தயாராகவுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரை சந்தித்து பேசிய போதே ஜனாதிபதி அமைச்சர்களாக மாறும்மாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இருவரும், நாம் பதவி பட்டங்களுக்காக அரசியலில் ஈடுபடவில்லை.

தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே நாம் செயற்படுகின்றோம் என்று கூறியுள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பிரபாவின் பெற்றோர், சூசையின் மனைவி ஆகியோரையும் இராணுவமே காப்பாற்றியது: வெள்ளை கொடியுடன் வந்தவர்களை இராணுவம் சுட்டுக் கொண்டதாக குற்றம் சாட்டுவது துரோகமானது


இலங்கை இராணுவம் மிலேச்சத்தனமான இராணுவமல்ல. மிலேச்சத்தனம் இராணுவமாக இருந்தால் பிரபாகரனின் தாயார், சூசையின் மனைவி, ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் காப்பாற்றப்பட்டிருக்க மாட்டார்கள்.

இலங்கை இராணுவம் வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை கொலை செய்த இராணுவமாக உலகிற்கு காட்ட முனைவது துரோகத்தனமானதாகும். இதனை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். மிலேச்சத்தனமான இராணுவம் என்பதை உலக நாடுகளும் ஏற்றுக் கொள்ளாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் பல்கலைக்கழக கல்விமான்கள், டாக்டர்கள், சட்டத்தரணிகள், பெருந் தோட்ட முகாமையாளர்கள், புத்திஜீவிகள் மத்தியில் செவ்வாய்க் கிழமை இரவு (22.12.2009) புத்திஜீவிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் ஜனாதிபதி தமதுரையில், நான் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களை விட்டு விட்டு ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் சபை ஆகியவற்றின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் கடமையில் ஈடுபட வேண்டியுள்ளது. இந்த நிலைக்கு முன்னாள் தளபதியே காரணமாகும்.

ஏன் இப்படி ஒரு துரோகத்தினை புரிந்தார் என்று தெரியவில்லை. இது ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளை பெறுவதற்க¡கவா? அல்லது வெளிநாட்டு சக்திகளின் சதி காரணமாகவா? என தெரிய வில்லை. எந்த வெளிநாட்டு சக்திகளுக்கும் நாம் அடிபணியப் போவதில்லை.

யுத்தத்தினை நிறுத்துமாறு பல நாடுகள் கோரிக்கைவிடுத்தன. பல தலைவர்கள், ஜனாதிபதிகள், பிரதமர்கள் என்னுடன் தொலைபேசியில் உரையாடினார்கள்.

சில நாட்டு தலைவர்கள் சிலரை தூதுவிட்டார்கள். நான் உண்மையை தெளிவுபடுத் தினேன். சுதந்திரத்திற்கு முன் அவர்களது காலணித்துவ நாடுகளில் ஒன்றாக நாம் விளங் கினோம். ஆனால் இப்போது இலங்கை உங்கள் காலணித்துவ நாடு இல்லை என தெளிவாக கூறினேன்.

ஆனால் சாதாரண தமிழ் மக்களுக்கு தீங்கு விளைவிக்க வேண்டாம் என பல தடவைகள் எமது இராணுவத்திற்கு உத்தரவிட்டேன்.

எமது இராணுவமும் எனது உத்தரவை ஏற்று சாதாரண மக்களைக் காப்பாற்றினார்கள். இதனை உலகம் அறியும்.

யுத்தத்திற்கு எதிராக யுத்தம் செய்யக்கூடிய பலத்தினையும், யுத்தத்தினை கொண்டு நடத்தக்கூடிய மனவலிமையையும் மன உறுதியினையும் நான் ஏற்படுத்தினேன். முழு உலகமும் பயந்திருந்த பயங்கரவாதத் தினை முற்றாக ஒழித்தோம்.

எனக்கு இந்நாட்டினை கையளிக்கும் போதும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொருளாதாரத்தினை பற்றி மக்கள் கேட்கவில்லை.

பயங்கரவாதத்தினை அழிக்குமாறே மக்கள் கேட்டனர்.

அதனையே நான் செய்தேன். இனி சுதந்திரமான இலங்கையின் பொருளா தாரத்தை முன்னேற்றுவோம்.

யுத்த காலத்திலும் நீர்மின்திட்டங்கள், துறைமுக திட்டங்கள், விமான நிலையம் நிர்மாணத்துடன், கமநெகும, மகநெகும போன்ற வீதி, கிராம அபிவிருத்தி வேலைகளையும் செய்துள்ளோம். நாட் டுக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை, கடன் பிரச்சினை ஆகியவற்றை தீர்த்து ள்ளோம். சகல கடன்களையும் செலுத்தி யுள்ளோம்.

ஈரானுடன் பேசி ஏழுமாத வட்டியில்லா கடன் மூலம் பெற்றோல் தேவையை நிறைவேற்றினோம். லிபியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் எமக்கு உதவின.

எல்லாவற்றிற்கு மேலாக இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை சமநிலைப்படுத்தி வைத்திருந் தோம். யாருடைய கட்டலைக்கு அடிபணி யாது பொருளாதாரத்திலும், யுத்தத்திலும் வெற்றிகண்டோம்.

வடகிழக்கு மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை.

அவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடங்கள் முன்கூட்டியே நான்கு வருட முடிவில் நடத்துகிறேன். வட கிழக்கு தமிழ் மக்களும் தமது ஜனாதிபதியை தெரிவு செய்ய உரிமை யுடையவர்கள்.

அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளேன்.

மிஹின் ஏயார் பற்றி பேசுகின்றனர். அன்று அமெரிக்கா ஆயுத உதவி செய்தபின் அந்த ஆயுதங்களுக்கு தேவையான ரவைகள், குண்டுகள் அமெரிக்கா தந்து தவிய போது அதனை எடுத்து வர மிஹின் எயாரையே அனுப்பினேன். ஜோர்ஜ் புஷ் நிர்வாகமும் இதற்கு உதவியது.

எமது விமானப்படை சரியான இலக்குகளை தாக்கியது. கப்பற்படை ஆயுத கப்பல்களை அழித்தது. இவையே இராணுவ வெற்றிக்கு காரணமாகும்.

இன்று இராணுவ படையையும், வெற்றிகொண்ட 58 வது படையினரையும் முன்னாள் தளபதி காட்டிக்கொடுக்க முயற்சிப்பது எந்தவகையில் நியாயமாகும். இராணுவ வெற்றிக்கு, அதன் செயற் பாடுகளுக்கு இராணுவ தளபதி முதல் கடைசி இராணுவ வீரர்வரை பங்களித் துள்ளனர். அவர்களை காட்டிக்கொடுப்பது துரோகமில்லையா?

கண்டியில் நடைபெற்ற எதிரணி கூட்ட த்தில் எனது குடும்பத்தைப்பற்றி திட்டித் தீர்த்துள்ளனர். எனது பிள்ளைகளை திட் டியுள்ளதோடு சாபமிட்டுள்ளனர். எனது குடும்பத்துக்கு சாபமிடுவது நியாயமா?

ஏழு தடவைகள் எனது குடும்பத்திற்கு இடிவிழ வேண்டும் என ஒரு கட்சித் தலைவர் சாபமிட்டுள்ளார்.

எனது மகன் போர்படை வீரராக வந்தமை பிழையானதா? ஏனைய குடும்பத்திலுள்ளவர்கள் யுத்தம் புரியும் போது எமது இராணுவத்திற்கு இளை ஞர்கள் தேவைப்பட்ட போது எனது மகனையும் படையில் சேர்த்தது மூலம் நான் முன்மாதிரியாக நடந்து காட்டி யுள்ளேன். இதற்கு சாபமிடுவது சரியா?

எனது சகோதரர்கள் பற்றி மிகவும் கேவலமாக பேசியுள்ளனர். ராஜபக்ஷ சகோதரர் கம்பனி என கூறியுள்ளனர். நான் சொத்துச் சேர்த்ததாக கூறியுள்ளனர். கண்டி நகர சிட்டி செண்டர் காணியில் கட்டப்படும் ஹோட்டல்கள் கொழும்பு 8pகுருநாகல் காணி ஆகியவற்றை நானும் எனது சகோதரர்களும் வாங்கி யுள்ளதாக கூறியுள்ளனர். இதனைநிரூபிக்க முடியுமா. எனது சகோதரர் பசில் ராஜபக்ஷ ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்களை பிரகடனப்படுத்த வேண்டும். அவரது சொத்து பிரகடனத்தினை பார்க்க முடியும். நானும் சொத்து சேர்க்கவில்லை. எனது சகோதரர் கோட்டாபேக்கும் சொத்துகள் இல்லை.

இவை அரசியலின் கீழ்த்தரமான பிரசாரங்களாகும். எமது குடும்பம் சகோதரர் கம்பனிதான். ஏனெனில் 1936 இல் எனது மூத்த தாத்தா உறுப்பினர் அவர் இறந்தபின் அவரது மகனான என்னுடைய தாத்தா உறுப்பினர். அவருக்கு பின் என் தகப்பனார் உறுப்பினர். 1945 ஆம் ஆண்டு சட்டநிறுவன சபையில் எனது அப்பா போட்டியின்றி தெரிவானவர். அதன்பின் நான், எனது சகோதரர்கள் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறோம்.

இதற்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை விசுவாசமே காரணமாகும். நீங்கள் புத்தி ஜீவிகள். உங்களுக்கு யுத்தம், வெற்றி, பொருளாதார, சவால்கள், எதிர்கால சவால் கள் பற்றியெல்லாம் தெரியும். நான் இறுதிவரை தாய்நாட்டுக்கு விசு வாச முடையவனாகவே இருப்பேன். சகல மக்களையும் காப்பாற்றுவேன். யாருக்கும் துரோகமிலைக்கமாட்டேன். இராணுவத்தை காட்டிக்கொடுக்க மாட்டேன்.” என்னை சிறைப்படுத்துவதாக கூறியுள்ளனர்.

எனக்கு ஏற்கனவே சிறை அனுபவம் உண்டு. ஜே.ஆர். ஜெயவர்தன என்னை 3 மாதம் சிறையிலிட்டார். இதுதவிர சுனாமியின் போது “ஹெல்ப் அம்பாந்தோட்டை நிதியை மோசடி செய்ததாக கூறினார்கள்.

ஆனால் ஜனாதி பதித் தேர்தலில் அம்பாந்தோட்டையிலேயே அதிகம் வாக்குகளை பெற்றார் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதி இன்று கண்டிக்கு விஜயம்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின்னர் கண்டிக்கு விஜயம் செய்துள்ளார்.இதன் போது கண்டி தலதா மாளிகையில் 3000 மகாசங்க தேரர்கள் ஆசிர்வாதம் வழங்கினர்.

அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டி செல்வ விநாயகர் ஆலயம், மற்றும் மீராம் முஸ்லிம் பள்ளிவாசல் ஆகிய சமயத் தலங்களுக்கும் விஜயம் செய்தார்.

கண்டி ஆயர் டாக்டர் வியான பர்னாண்டோவிடமும் அங்குள்ள மற்றும் பல தேரர்களிடமும் நல்லாசி பெற்றார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புதுமாத்தளன் பிரதேசத்துக்கு ஜனாதிபதி இன்று விஜயம்


வடக்கில் இறுதி மோதல் இடம்பெற்ற பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியை இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்துவைத்தார்.

பயங்கரவாதத்தை அழிப்பதற்குப் பங்காற்றிய சகலரையும் நினைவுகூரும்வகையில் இந்த நினைவுத் தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் உட்பட சிரேஷ்ட படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இன்று காலை அந்தப் பிரதேசத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வன்னி நடவடிக்கையில் பங்குபற்றிய படை வீரர்களைச் சந்தித்ததுடன் அப்பிரதேசத்தையும் சுற்றிப் பார்வையிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஒழுக்கமிகு சமுதாயத்தை உருவாக்குவோமென்கிறார் ஜனாதிபதி

Photobucket
கொழும்பு லும்பினி வித்தியாலயத்தின் 80வது வருடப் பூர்த்தியை முன்னிட்டு இன்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் கல்வித் துறை பின்னடைவு கண்டிருந்ததை தாம் அறிவதாகவும் கல்விக்காக அதிக கவனம் செலுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் வடக்கின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக அதிக நிதி செலவிடப்பட்டதாகவும் இரண்டாவதாக கல்விக்கும் சுகாதாரத்திற்கும் நிதி செலவிடப்பட்டதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

தேக ஆரோக்கியமுள்ள எதிர்கால சந்ததி ஒன்று இருக்கவேண்டுமென்ற காரணத்தினாலும் நாட்டை நேசிக்கின்ற சமுதாயமொன்று இருக்கவேண்டுமென்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உலக நாடுகளுடன் போட்டியிடக் கூடிய எதிர்கால சந்ததியினரே நாட்டுக்குத் தேவை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , சிறந்த சமூகத்தை நாட்டில் உருவாக்கும் பொறுப்பு அனைவருக்குமுண்டெனவும் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வெள்ளை வான் கடத்தல் குறித்து விசாரிப்பதற்கு விசேட குழு- ஜனாதிபதி தகவல்;


வெள்ளை வான் கடத்தல்கள், ஊடக அடக்குமுறை குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

"அரசாங்கம் என்ற ரீதியில் இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கான பொறுப்பினை நான் ஏற்றுக் கொள்கின்றேன். என்னைப் பொறுத்தவரை நாட்டு மக்கள் சகலரும் ஒன்றுதான். யாருக்காவது பிரச்சினையிருந்தால் அதனை தீர்ப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன்" என்றும் அவர் கூறினார்.

அலரி மாளிகையில் நேற்று ஊடக நிறுவனங்களின் செய்தி ஆசிரியர்களைச் சந்தித்து பேசிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது;

"மக்களின் விருப்பத்திற்கேற்ப ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நான் தீர்மானித்துள்ளேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. இன்று அந்த மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்படும்.

ஜனாதிபதி தேர்தலை அமைதியான முறையில் நடத்த ஊடகங்கள் உதவ வேண்டும். எம்மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் சில தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பில் வீடொன்றை கட்டினால் அதனை நானோ அல்லது பஷில் ராஜபக்ஷவோ அல்லது கோத்தபாய ராஜபக்ஷவோ கட்டுவதாகவே சேறுபூசப்படுகின்றது.

தேர்தலில் சாதகமான பிரசார நடவடிக்கைகளில் நாம் ஈடுபடவுள்ளோம். நாட்டை ஒற்றுமைப்படுத்திய நாம் அதனை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்ய வேண்டும்.

முப்படைத் தளபதிகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்புடனேயே யுத்தத்தில் வெற்றி பெற்றோம். இதில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தால் யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்கு முடியாது. யுத்த வெற்றியானது சகலரதும் வெற்றியாகும். இது ஒருவரது வெற்றியல்ல.

யுத்தம், பொருளாதாரம், அபிவிருத்தி என்பவற்றுக்கு நான் தலைமைத்துவம் கொடுத்தேன். இவற்றை நான் மட்டும் செய்ததாக கூறவில்லை.

கேள்வி: கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் யுத்தத்தை வெற்றி கொள்வதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தீர்கள். இம்முறை மக்களுக்கு உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எத்தகைய வாக்குறுதிகளை வழங்கப் போகின்றீர்கள்?

பதில்: இம்முறை நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

கேள்வி: அரசாங்கத்தில் அமைச்சரவை மிகவும் பெரிதாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஜனாதிபதி தேர்தலில் வென்ற பின்னர் அமைச்சரவையைg குறைக்க நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்: அரசாங்கத்தின் அமைச்சரவை பெரியதென்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் அமைச்சர்கள், எம்.பி.க்களின் சம்பளத்தை மட்டுமே பெறுகின்றனர். வாகனம், பாதுகாப்பு, அதிகாரம் என்பவை மட்டும்தான் அமைச்சர்களிடம் காணப்படுகின்றன.

உறுதியான அரசாங்கம் இருந்திருந்தால் இவ்வாறு அமைச்சரவையை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருக்க மாட்டாது. எமது அரசாங்கத்தில் சபாநாயகரை கூட நாம் தெரிவு செய்ய முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் எமது ஒரே குறிக்கோளான நாட்டை ஒன்றுபடுத்துவதற்காக நாம் யுத்தத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டோம்.

யுத்தத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதில் நாம் வெற்றி பெறாவிடில் எதிரணியினர் என்மீது குற்றச்சாட்டினை சுமத்தியிருப்பர். சகோதரர்களுடன் இணைந்து யுத்தத்தில் தோல்வி கண்டுவிட்டதாக என்மீது குற்றஞ்சாட்டியிருப்பர். இதற்கெல்லம் தயாராகவே நான் யுத்தத்தில் ஈடுபட்டேன்.

வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் ஊடக அடக்குமுறை போன்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன. இவற்றையும் அரசாங்கம் என்ற ரீதியில் நான் பொறுப்பேற்று விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அரசாங்கம் ஸ்திரமானதாக இல்லாமையினாலேயே பிரதான குறிக்கோளை அடைவதற்காக அமைச்சரவையினை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கேள்வி: ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: அரசாங்கம் என்ற ரீதியில் இத்தகைய சம்பவங்களுக்கு நான் பொறுப்பேற்கின்றேன். இத்தகைய சம்பவங்களுடன் இராணுவம் அல்லது பொலிஸாரை குற்றஞ்சாட்டுவது முறையல்ல.

இச்சம்பவங்களுடன் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை பரிசீலிப்பிதற்கு விசேட குழுவை நியமித்துள்ளேன். விசாரணையின் பின்னர் யாராவது இத்தகைய செயலில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.

கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை முன்வைத்தால் ஜனாதிபதித் தேர்தலில் உங்களை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்க தயார் என்று மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன அறிவித்துள்ளன. இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: என்னைப் பொறுத்தவரையில் நாட்டு மக்கள் சகலரும் ஒன்றுதான். நாட்டை ஆதரிக்கும் பிரிவினர் நாட்டுக்கு எதிராக செயற்படும் பிரிவினர் என இரண்டு பிரிவாகவே நான் மக்களை பார்க்கிறேன்.

நாட்டிலுள்ள யாருக்காவது பிரச்சினை இருந்தால் அது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தயாராகவே இருக்கின்றேன்.

இடம்பெயர்ந்த மக்களை சிறைச்சாலைகளுக்குள் வைத்துக் கொண்டு வாக்குகளை பலவந்தமாக நாம் பெறப்போவதாக கூறியவர்கள் இவர்களேயாவர்.

இத்தகையவர்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது. வடகில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்த மக்கள், இராணுவத்தினரைக் கூட கண்டதில்லை. வெளிநாடுகளில் இலங்கையை காணத எமது சந்ததியினர் போல் இவர்களும் இங்கிருந்தனர். தாங்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லது சித்திரவதை செய்யப்படுவார்கள் என்ற மனநிலை அவர்கள் மத்தியில் ஊட்டப்பட்டிருந்தது.

கேள்வி: நிறைவேற்று அதிகார முறைமை ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் அதிகாரம் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருக்கின்றதா?

பதில்: நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்க வேண்டியது அவசியம்தான்.

கேள்வி: முன்னாள் கூட்டுப்படை தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆயுத இறக்குமதியில் ஊழலில் ஈடுபட்டமை குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது உண்மையா?

பதில்: ஊழல் குறித்து விசாரிப்பதற்கு சுயாதீனமான நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால், இத்தகைய ஊழல் நடைபெற்றதா என்பது குறித்து எனக்கு தெரியாது. நாம் அது குறித்து விசாரிக்க வேண்டும். எனது மகனின் பெயரில் நிறுவனம் ஒன்றை வைத்துக் கொண்டு அந்த நிறுவனத்திற்கு கேள்விப் பத்திரங்களை நான் வழங்க முடியாது.

இது குறித்து பரிசீலித்துதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் தளபதி மீது விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்புசெயலாளருக்கும் உரிமை இல்லை. இதற்கென சுயாதீன நிறுவனம் ஒன்று உள்ளது. கேள்வி: வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களிப்பதற்கு இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்படும் எனக் கூறுகின்றீர்கள். இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்?

பதில்: வாக்களிப்பதற்கு தகுதியிருந்தால் வாக்களிக்கலாம். கூடிய வரையில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்குவோம். புத்தளத்தில் இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் இருந்தபடி கடந்த தேர்தல்களில் வாக்களித்துள்ளனர். இவ்வாறு மக்கள் வாக்குகளை அளிக்க முடியும்.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், 20 இலட்சம் மக்கள் தேசிய அடையாள அட்டையின்றி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாக்களிப்பதற்கு அடையாள அட்டை அவசியமானதாக காணப்படுகின்றது. இந்த நிலையில் என்ன நடவடிக்கையினை எடுத்துள்ளீர்கள்? பதில்: ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் நீங்களா அல்லது சரத் பொன்சேகாவா பொது வேட்பாளர்?

பதில்: பொது வேட்பாளர் நான் தான். 28 கட்சிகள் என்னை ஆதரிக்கின்றன.

கேள்வி: மஹிந்த சிந்தனையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டனவா?

பதில்: அதில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டன.

கேள்வி: பிரபாகரனுக்கு எதிரான யுத்தத்தினை நடத்துவதற்காக சகோதரரை பாதுகாப்பு செயலாளராகவும் இராணுவ, விமானப்படை, கடற்படை தளபதிகளை புதிதாகவும் நீங்கள் நியமித்திருந்தீர்கள். இவர்களில் எவரையாவது இப்பதவிக்கு நியமித்தமை குறித்து தற்போது கவலையடைகின்றீர்களா?

பதில்: பல உபதேசங்களை வழங்கி யுத்தத்திற்கு நான் தலைமைத்துவம் வழங்கினேன்.

கேள்வி: சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படாமை குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பன சுயாதீனமானவையாக இல்லை. இந்தக் குழுக்களுக்கு பிரதமர் ஒருவரையும் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரையும் அமைச்சர் தொண்டமான் ஒருவரையும் முஸ்லிம் காங்கிரஸ் ஒருவரையும் நியமிக்கும் நிலை காணப்படுகிறது. இவ்வாறாயின் இதில் எத்தகைய சுயாதீனம் காணப்படுகின்றது. எனவே, சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பவை சுயாதீனமாக அமைய வேண்டும்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இடம்பெயர்ந்தோர் உட்பட அனைத்து தமிழ் மக்களும் சுதந்திரமாக வாக்களிப்பார்கள் - ஊடக உரிமையாளர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு.

இலங்கையில் செயற்படும் ஒலி ஒளி இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் உரிமையாளர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்றையதினம் சந்தித்து கலந்துரையாடினார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் ஊடக உரிமையாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்கள் என்னிடம் ஒப்படைத்த பணியை கடந்த நான்கு வருடத்தில் செவ்வனே நிறைவேற்றியுள்ளேன் எனத்தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி சமீபத்தில் உலக பொருளாதார நெருக்கடியினால் பல முன்னணி நாடுகள் உட்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டன. ஆயினும் திறமையான பொருளாதார நடவடிக்கை காரணமாக இலங்கையின் பொருளாதாரம் வளாச்சியடைந்துள்ளது. பிரிந்து போயிருந்த எமது தேசம் இன்று ஒன்றாக்கப்பட்டுள்ளது. ஆறு வருடங்கள் ஆட்சி செய்வதற்கு அதிகாரம் உள்ளபோதும் நான்கு வருடத்தில் மக்கள் ஆணையினை மீண்டும் பெறுவதற்கு ஆயத்தமாக உள்ளேன். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெயர்ந்தோர் உட்பட அனைத்து தமிழ் மக்களும் சுதந்திரமாக வாக்களிக்க முடியும் எனத்தெரிவித்தார்.

மேற்படி ஊடக உரிமையாளர்களுடனான சந்திப்பில் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஜனாபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஊடக அமைச்சின் செயலாளர் கணேகல ஆகியோரும் பங்குகொண்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

எதிர்வரும் 2010 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல்


பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு முன்னர் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு அவர் பணித்துள்ளார்.எனினும் தேர்தல் நடைபெறும் தினம் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.டபிள்யூ. எம் தேஷபிரிய எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு இன்று வெளியிடப்படும்


எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் என்பது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு இன்று திங்கட்கிழமை நள்ளிரவில் வெளியாகும் என்று தெரிய வருகிறது. பெரும்பாலும் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் என்றும் எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி தேர்தல் நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பின் பின்னர் தேர்தல் நடைபெறும் தினம் மற்றும் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணையாளர் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பு கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய சம்மேளனத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் சம்மேளனத்தில் அறிவிக்கப்படவில்லை. அதேவேளை கடந்த வாரம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் அமைப்பாளர்களை சந்தித்து பேச்சு நடத்திய ஜனாதிபதி விரைவில் பிரதான தேர்தல் ஒன்றுக்கு தயாராகுமாறு கோரியிருந்தார். அதனையடுத்தே இன்று திங்கட்கிழமை தேர்தல் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதி வேட்பாளர்ருக்கு எதிர்கட்சியினர் பிச்சை எடுக்கிறார்கள்


நான் யாருக்கும் பயப்பட மாட்டோம் மறைந்த எமது தலைவர்கள் யாருக்கும் பயந்து கொண்டு தீர்மானங்களை எடுக்கவில்லை நானும் அப்படித்தான் சர்வதேச அலுத்தங்களுக்கு நான் என்றும் பயப்படபோவதில்லை என்று கூறிய ஜனாதிபதி எதிர்கட்சியினர் ஜனாதிபதி வேட்பாளருக்கு பிச்சை எடுக்கிறார்கள் என கிண்டலாக தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 19வது தேசிய மாநாடு கெத்தாராமையில் சற்று முன்னர் முடிவடைந்தது. அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறுகையில்

இன்று நாட்டிலிருப்பது அரசியல் எதிர்கட்சியல்ல நாட்டிற்கு எதிரான எதிர்கட்சி ஜனாயக்கத்துக்காக மக்களுக்காக பாடுபடக்கூடிய எதிர்கட்சியினர் நாட்டிற்கு தேவை நாட்டை காட்டி கொடுப்பவர்கள் நமக்கு வேண்டாம் .

நாம் எந்த சவாலையும் முறியடிக்க காத்திருக்கிறோம் நாட்டின் எதிர்காளமே நமக்கு தேவை என தெரிவித்தார்.

ஜனாதிபதி தமிழிலும் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தேர்தல் குறித்து விரைவில் அறிவிப்பேன் - ஜனாதிபதி


ஜனாதிபதி தேர்தலையா, பொதுதேர்தலையா முதலில் நடாத்துவது என்பதையும் அதற்கான தினம் பற்றியும் தாம் விரைவில் அறிவிப்பதாக ஜனாதிபதி சற்றுமுன்னர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 19வது தேசிய மாநாடு கெத்தாராமையில் சற்று முன்னர் முடிவடைந்தது. எதிர் வரும் தேர்தல் குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் ஜனாதிபதி மேற்படி கருத்தை தெரிவித்தார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கண்ணிவெடிகளை அகற்றியதும் மீள்குடியேற்றம் : 'ஜனஹமுவ' நிகழ்வில் ஜனாதிபதி


"நிவாரணக் கிராமங்களில் இன்னமும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரே இருக்கின்றனர். இவர்களின் உயிருக்கு நானே பொறுப்பு. எனவே கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே குறிப்பிட்ட பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்ற முடியும்" என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவத்தார்.

'ஜனஹமுவ' மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

"இந்நாட்டை மக்கள் என்னிடம் கையளித்தபோது, நாடு இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. இதனை ஐக்கியப்படுத்துவது மக்களினது எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

புலிப் பயங்கரவாதிகளின் இராணுவக் கட்டமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. எதிர்காலப் பரம்பரைக்கேற்ற வகையில் நாட்டை உருவாக்கியுள்ளோம். எமது நடவடிக்கைகள் தேர்தலை நோக்காகக் கொண்டதல்ல. மாறாக, நாட்டின் அபிவிருத்தியைக் குறியாகக் கொண்டது.

கிழக்கின் உதயம் தோன்றியுள்ள அதேவேளை, வடக்கின் வசந்தம் தொடர்பிலான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் தற்போது போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஜனவரி மாதம் சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பில் தெளிவாக அறிவித்திருக்கின்றோம். சர்வதேச நாணய நிதியம் மட்டுமல்ல, வேறு எந்த அமைப்பும் எமக்கு எந்தவித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. அதேபோல், உழைக்கும் வர்க்கத்தினரின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டாம் என்று கூறவும் இல்லை.

சரத் குறித்துக் கூற எதுவுமில்லை

சரத் பொன்சேகா குறித்து எதுவும் கூறுவதற்கில்லை. அவர் இராணுவத்தின் உயர் அதிகாரியாவார். அதுமட்டுமே எனக்குத் தெரியும்.

எமது நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டிருப்பதாக பல கதைகள் கூறப்பட்டன. முழு உலகிலுமே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், எமது நாட்டின் சிறந்த முகாமைத்துவம் காரணமாக உலக சவால்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளாது செயற்பட முடிந்தது.

நான் பிரான்ஸில் இருந்தோ அல்லது இங்கிலாந்தில் இருந்தோ வரவில்லை. ஆகவே, எனக்கு இங்குள்ள நிலைமைகளை நன்கறிய முடியும். யுத்தத்தை வெற்றி கொள்ள முடியாது என்ற நிலையை மாற்றியமைத்து, அதனை நாம் முடிவுக்குக் கொண்டு வந்தோம்.

அரசாங்கம் என்கின்ற வகையில், எந்தவொரு போராட்டத்திற்கும் முகம் கொடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். தற்போது ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அரசியல் தேவை கருதிய குழுவொன்றினாலேயே இயக்கப்படுகின்றது.

யுத்த காலத்தின் போது நாம் கிளிநொச்சியை நெருங்கிய சந்தர்ப்பத்தில், தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இதுபோன்ற அழுத்தங்கள், நெருக்குதல்கள் எமக்கு வந்தன. இதனை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும். ஊழியர்கள் மட்டுமல்லாது, அனைவருமே தமது தாய்நாடு தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

மே மாதம் 19ஆம் திகதி தான் யுத்தம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் சுமார் 3 லட்சம் வரையிலான மக்கள் எமது பிரதேசத்திற்கு வருகை தந்தனர். யுத்த காலத்தில் பெருமளவிலான மக்கள் இங்கு வருகை தரக் கூடும் என அறிந்திருந்தமையால், சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கான தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்திருந்தோம்.

ஆனால், ஒரேயடியாக 3 லட்சம் மக்கள் வருகை தந்தமையால் அவர்களுக்கான தேவைகளையும் நிறைவேற்ற வேண்டியதாயிற்று. அதனையும் நாம் செய்தோம்.

பிரபாகரனின் பெற்றோர்

இது குறித்து பலவிதமாகப் பேசப்படலாம். இவ்வாறு வருகை தந்தவர்களோடு, பயங்கரவாதிகளும் ஊடுருவினர். இவர்களில் தான் பிரபாகரனின் பெற்றோரும் தமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகளும் அடங்கியிருந்தனர்.

அரசாங்கத்தை நம்பி வந்த மக்களை அவர்களது பிரதேசங்களில் மீள்குடியேற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனை இப்போது நாம் மேற்கொண்டு வருகிறோம். இற்றை வரையில் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ளோம்.

மீட்கப்பட்ட பிரதேசங்களில் கண்ணிவெடிகள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே, கண்ணிவெடிகளுக்குள் மக்களை தள்ளிவிட முடியாது. மீண்டும் ஒரு பயங்கரவாத நிலைமை உருவாவதற்கு இடமளிக்கவும் முடியாது.

அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தங்குமிட வசதிகள், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. உள்நாட்டின் அழுத்தம் காரணமாகவோ அல்லது சர்வதேச நெருக்குதல் காரணமாகவோ நாம் இதனை மேற்கொள்ளவில்லை" என்றார்.

இந்தச் சந்திப்பில், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜீ.எல். பீரிஸ், ரிஷாத் பதியுதீன், மைத்திரிபால சிறிசேன, பந்துல குணவர்த்தன, சம்பிக்க ரணவக்க, அதாவுல்லா, முரளிதரன் மற்றும் விமல் வீரவன்ஸ எம்.பி., பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, திறைசேயின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதி - மக்கள் சந்திப்பு : இன்றிரவு நேரடி அஞ்சல்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஜனாதிபதி-மக்கள் சந்திப்பு, (ஜனாதிபதி ஜனஹமுவ) நிகழ்ச்சி அலரி மாளிகையில் இன்று இரவு 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, ஏ. எல். எம். அதாவுல்லா, பந்துல குணவர்தன, சம்பிக்க ரணவக்க, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், எம்.பி. விமல் வீரவன்ச ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, நிதியமைச்சு மற்றும் திறைசேரி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

தொலைக்காட்சி மற்றும் வானொலியில் இந்நிகழ்ச்சி நேரடியாக ஒளி, ஒலிபரப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழ் மக்களின் இதயங்களையும் படையினர் வெற்றிகொள்ள வேண்டும்: ஜனாதிபதி


யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவ வீரர்களால் தமிழ் மக்களின் இதயங்களை வெற்றி கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை முழு உலகத்துக்கும் வெளிக்காட்டுவதற்கு இன்று சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நாட்டை மீட்கும் சவாலை ஒப்படைத்த இராணுவத்திடமே நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் சவாலையும் ஒப்படைக்கின்றோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அதேவேளை, தேசத்தின் சுதந்திரத்தைக் கட்டிக்காப்பதற்காக பல்வேறு தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் மேற்கொண்டு அயராத சேவையை வழங்கி வரும் பாதுகாப்பு தரப்பினருக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நேற்றுக்காலை வன்னிக்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி உள்ளிட்ட பாதுகாப்பு குழுவினர், முழங்காவில் பிரதேசத்தில் அமைந்துள்ள 651ஆவது படையணியின் தலைமையகத்தில் வன்னி மனிதாபிமானப் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு படைத் தலைமையகங்களைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களைச் சந்தித்தனர். இதன் பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறுகையில்,

"படையினர் தமது சம்பளத்தையோ அல்லது கொடுப்பனவுகளையோ அதிகரிக்குமாறு ஒருபோதும் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டதில்லை. நாட்டுக்காக பாரியதொரு தியாகத்தைச் செய்துள்ள பாதுகாப்புத் தரப்பினரின் சம்பளத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த மூன்று வருடங்கள் மட்டுமல்லாது 30 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் எமது முப்படையினர் நாட்டின் விடுதலைக்காக துணிச்சல் மிக்க போரில் ஈடுபட்டனர். அதற்காகத் தமது பெற்றோர், சகோதரர்கள் மற்றும் பிள்ளைகளிடமிருந்து பிரிந்து சென்று மழை, வெயில் என்று பாராமல் நாட்டுக்காக அவர்கள் செய்த சேவை அளப்பரியது.

யார் காட்டிக் கொடுத்தாலும் யார் அவமானப்படுத்தினாலும் நாட்டின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த மற்றும் துணிச்சல்மிக்க அர்ப்பணிப்பை வெளிக்காட்டிய முப்படைகளின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது நன்றியினை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

இராணுவ வீரர்களின் தைரியம், வீரம் மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பில் எமது அரசாங்கம் நம்பிக்கை வைத்த அளவில் வரலாற்றில் வேறு எந்த அரசாங்கங்களும் நம்பிக்கை வைக்கவில்லை. அந்த நம்பிக்கையின் காரணமாகவே இராணுவ வீரர்கள் யுத்த களத்தில் உண்மையான வீரர்களாக தைரியத்துடன் போரிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பயங்கரவாதம் முடிந்துவிட்டது என்பதற்காக நாங்கள் ஓய்வுடன் இருக்க முடியாது. பல்வேறு சதித்திட்டங்கள் நாட்டில் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில் இராணுவ வீரர்கள் மீட்டுக் கொடுத்த நாட்டை யாரும் காட்டிக் கொடுப்பதற்கு இடமளிக்க முடியாது" என்றார்.

ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கிளிநொச்சி படைத்தலைமையகத்தின் கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் அத்துல ஜயவர்தன, முல்லைத்தீவு படைத் தலைமையகத்தின் கட்டளையிடும் அதிகாரி நந்தன உடவத்த, 651ஆவது படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அத்துருசிங்க உள்ளிட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஜனாதிபதியுடனான இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

வன்னிக்கான இந்த விஜயத்தின் போது படையினரால் மீட்கப்பட்ட முழங்காவில் அரச வைத்தியசாலையையும் நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், துணுக்காய் பிரதேசத்தில் மீளக் குடியேற்றப்பட்டுள்ள பொதுமக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதி வன்னி விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை வன்னிக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு சென்ற ஜனாதிபதி இராணுவத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

யுத்தக்குற்றம் தொடர்பில் தன்னிடம் விளக்கம் கோரலாம்.. ஜனாதிபதி அமெரிக்காவுக்கு தெரிவிப்பு


முப்படைத்தளபதி சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா விளக்கம் கேட்கப் போவதாக வெளியான தகவல் தொடர்பில் யுத்தக்குற்றம் தொடர்பாக அமெரிக்கா எதனையும் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அதனை தம்மிடம் கேட்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் தெரிய வருகையில் கூட்டுப்படை தலைமையதிகாரி சரத்பொன்சேகாவை அமெரிக்கா விசாரணை செய்யப் போவதாக வெளியான தகவல் இலங்கையில் அரசியல் தரப்பில் முக்கிய பிரச்சினையாக எழுந்துள்ளது. இந்தநிலையில் இதுதொடர்பில் ஜனாதிபதி நேற்று முக்கிய அமைச்சர்களுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளார். இதன்போது யுத்தக்குற்றம் தொடர்பாக எவராவது குறிப்பாக அமெரிக்கா எதனையும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதனை தம்மிடம் கேட்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். முப்படைகளினதும் தளபதி என்ற அடிப்படையில் தாமே அதற்கு பதில் சொல்ல முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை இந்தக் கலந்துரையாடலின் போது சரத்பொன்சேகாவை அமெரிக்கா விசாரணைகளுக்கு உட்படுத்த விடாமல் இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இராஜதந்திரி மட்டத்தில் இதுதொடர்பான முனைப்புகளை மேற்கொள்வதற்கும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரத் பொன்சேகாவை தமது தரப்புக்கு மாற்றுவதற்கும் ஜனாதிபதியின் தரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates