இடம்பெயர்ந்தோர் உட்பட அனைத்து தமிழ் மக்களும் சுதந்திரமாக வாக்களிப்பார்கள் - ஊடக உரிமையாளர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு.
இலங்கையில் செயற்படும் ஒலி ஒளி இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் உரிமையாளர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்றையதினம் சந்தித்து கலந்துரையாடினார்.அலரி மாளிகையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் ஊடக உரிமையாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்கள் என்னிடம் ஒப்படைத்த பணியை கடந்த நான்கு வருடத்தில் செவ்வனே நிறைவேற்றியுள்ளேன் எனத்தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி சமீபத்தில் உலக பொருளாதார நெருக்கடியினால் பல முன்னணி நாடுகள் உட்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டன. ஆயினும் திறமையான பொருளாதார நடவடிக்கை காரணமாக இலங்கையின் பொருளாதாரம் வளாச்சியடைந்துள்ளது. பிரிந்து போயிருந்த எமது தேசம் இன்று ஒன்றாக்கப்பட்டுள்ளது. ஆறு வருடங்கள் ஆட்சி செய்வதற்கு அதிகாரம் உள்ளபோதும் நான்கு வருடத்தில் மக்கள் ஆணையினை மீண்டும் பெறுவதற்கு ஆயத்தமாக உள்ளேன். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெயர்ந்தோர் உட்பட அனைத்து தமிழ் மக்களும் சுதந்திரமாக வாக்களிக்க முடியும் எனத்தெரிவித்தார்.
மேற்படி ஊடக உரிமையாளர்களுடனான சந்திப்பில் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஜனாபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஊடக அமைச்சின் செயலாளர் கணேகல ஆகியோரும் பங்குகொண்டனர்.







0 Response to "இடம்பெயர்ந்தோர் உட்பட அனைத்து தமிழ் மக்களும் சுதந்திரமாக வாக்களிப்பார்கள் - ஊடக உரிமையாளர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு."
แสดงความคิดเห็น