கி.மா.ச கீழுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகள் மத்திய அரசு பொறுப்பேற்றமைக்கு ஆட்சேபம்
கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் கீழுள்ள சில ஆயுள்வேத வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமைக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அம்பாறை ஆயுள்வேத வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஆயுள்வேத மருந்தகம் ஆகியன கிழக்கு மாகாண சபையிடமிருந்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து மாகாண முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அவசர கடிதங்களையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
ஏற்கனவே கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த குறிப்பிட்ட ஆயுள்வேத வைத்தியசாலைகள் தொண்டர் நிறுவனங்களின் உதவியுடன் கட்டிட வசதிகள் உட்பட பல்வேறு வசதிகளைப் பெற்றிருந்ததையும் அக்கடிதத்தில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
"கிழக்கு மாகாணத்திற்கு என பலம் வாய்ந்த அரசியல் சபை உருவாக்கப்பட்டு அதிகாரப் பரவலாக்கம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப் பெற்றுவரும் நிலையில் இப்படியான நடவடிக்கையொன்றிற்கு மாகாண சபை நிர்வாகம் துணை போயிருப்பது கவலைக்குரியது ."என்றும் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தெரிவிக்கின்றார்.
0 Response to "கி.மா.ச கீழுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகள் மத்திய அரசு பொறுப்பேற்றமைக்கு ஆட்சேபம்"
แสดงความคิดเห็น