மன்னார் நகரசபை மண்டபத்தில் பாடசாலைகளுக்கான கல்வி உபகரணங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கினார்!
மன்னார் மாவட்டத்தின் வௌ;வேறு வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பாடசாலை அதிபர்களிடம் உபகரணங்களை கையளித்தார்.
அப்;பாடசாலைகளில் நிலவும் கல்வி உபகரணங்களின் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு அமைச்சரினால் தமிழ் பாடசாலைகளுக்கு 1.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
பாடசாலைகளுக்கான கணனிகள் புத்தகங்கள்; வெண்பலகை மற்றும் தளபாடங்கள் என்பன அடங்கலான கல்வி உபகரணங்கள் மன்னார் மாவட்ட கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைக்களுக்கென வழங்கப்பட்டன.
ஒவ்வொரு பாடசாலைக்கு தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன் தளபாடங்கள் என்ற வகையில் 50 தொடக்கம்100 வரையான பிளாஸ்டிக் கதிரைகளையும் இரும்பு அலுமாரிகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப் பாடசாலைகளுக்கு வழங்கினார்.
மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற இந்த உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

0 Response to "மன்னார் நகரசபை மண்டபத்தில் பாடசாலைகளுக்கான கல்வி உபகரணங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கினார்!"
แสดงความคิดเห็น