ஆசிப் அலி சர்தாரி மீது ஊழல் வழக்குகள் தொடரப்படும் சாத்தியம்
பாகிஸ்தானில் ஊழல் வழக்குகள் தொடர்பில் வழங்கப்பட்டு வந்த பொது மன்னிப்பு காலம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவருடைய முக்கிய சகாக்கள் மீது வழக்குகள் தொடரப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, ஜனாதிபதி என்ற முறையில் சில காலமாக ஊழல் தண்டனைகளில் இருந்து தப்பி வந்தார். ஆனால் தற்போது அவருக்கு பிரச்சினை ஏற்படலாம் என்று ஒரு சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பாகிஸ்தானில் நிலவி வரும் தலிபான்களின் கிளர்ச்சி மற்றும் அரசியல் சீர்திருத்தம் இல்லாத நிலையால், ஆசிப் அலி சர்தாரியின் மக்கள் செல்வாக்கு மந்தமாகவே இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
0 Response to "ஆசிப் அலி சர்தாரி மீது ஊழல் வழக்குகள் தொடரப்படும் சாத்தியம்"
แสดงความคิดเห็น