பின் லேடனைக் கைது செய்ய பாகிஸ்தான் உதவ வேண்டும் : கோர்டன் பிறவுண்
அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின் லேடனைக் கைது செய்வதற்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண் குறிப்பிட்டுள்ளார்.
ஒஸாமாவைக் கண்டு பிடிப்பதில் பாகிஸ்தானிய அரசாங்கம் மேலும் காத்திரமான முறையில் செயற்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒஸாமா பின் லேடனை கைது செய்யவோ அல்லது கண்டு பிடிக்கவோ முடியவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"பின் லேடன் மற்றும் அவரது பிரதித் தலைவர் அய்மான் சவாரி ஆகியோரைக் கைது செய்வது தொடர்பில் கூடுதலான அக்கறை செலுத்தப்பட வேண்டும்.
ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
2001ஆம் ஆண்டில் அமெரிக்கப் பாதுகாப்பு படையினர் ஒஸாமாவை நெருங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் ஒஸாமா பின் லேடன் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னெடுக்கும் அதே அணுகுமுறை அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்றார்.
இத் தொடர்பாக பாகிஸ்தானிய பிரதமருக்கும் பிரித்தானிய பிரதமருக்கும் இடையில் எதிர்வரும் வியாழக்கிழமை ஒன்று நடைபெறவுள்ளது.
0 Response to "பின் லேடனைக் கைது செய்ய பாகிஸ்தான் உதவ வேண்டும் : கோர்டன் பிறவுண்"
แสดงความคิดเห็น