jkr

மன்னார் மாவட்ட மாதர் சங்கங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு

மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாதர் சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கடந்த 27ம் திகதி ஆங்கில கற்கை நெறி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தமது சங்கத்தில் அங்கத்தவர்களாக நீண்டகாலமாக இணைந்து செயலாற்றிவரும் உறுப்பினர்கள் வருமானம் மற்றும் தொழிலின்மை காரணமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இடைநடுவில்; விடப்பட்ட திட்டங்களை நடைமுறைபடுத்துவது தொடர்பாகவும் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.

அமைச்சரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களை உரிய காலத்தில் அமுல் படுத்துதல் சங்கத்திடம் போதிய நிதி வசதியில்லாமை மற்றும் சங்கங்களை பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் மாதர் சங்க பிரதிநிதிகள் அமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.

அனைத்து பிரதிநிதிகளதும் கருத்துக்களை செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பரந்த அளவில் திறம்பட ஏககாலத்தில் திட்டங்களை முன்னெடுப்பதற்கான போதிய அரசியல் பலமின்மையின் உண்மைத் தன்மையை பிரதிநிதிகளுக்கு விளக்கிக் கூறினார்.

ஒரே ஒர பராளமன்ற ஆசனத்துடன் குடாநாட்டுக்கு வெளியேயுள்ள மக்களுக்கும் சேவையாற்ற தமக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை பிரதிநிதிகளுக்கு சுட்டிக் காட்டிய அமைச்சர் இந்த ஒரு ஆசனத்திற்கு பதிலாக மேலும் சில ஆசனங்கள் இருந்திருக்குமாயின் தற்போதையை விட பலமடங்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுத்திருக்க முடியும் என்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

மக்களின் வாக்குப் பலத்துடன் பெரும் எண்ணிக்கையான பாரளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட கூட்டமைப்பினர் மக்களிடம் இருந்ததையும் இல்லாமற் செய்ததுடன் மக்களை நடு வீதியில் தவிக்கவிட்டு வெளிநாடுகளில் தமது குடும்பங்களுடன் புகலிடம் தேடிக் கொண்டவரலாற்றையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய கசப்பான அனுபவங்களை சரியாகச் செரிமானம் செய்து கொண்டு எதிர்வரும் தேர்தலில் இச் சுயநலவாதிகளுக்கு தகுந்த பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டார்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மன்னார் மாவட்ட மாதர் சங்கங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates