அடம்பனில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடம்பன் பகுதியில் இன்று மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் தலைமையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் பகிர்தளிக்கப்பட்டன.
இந்நிகழ்வினை இராணுவத்தினரே ஏற்பாடு செய்திருந்தனர்.மாந்தை மேற்கு பகுதியில் உள்ள மக்களில் இராணுவத்தினரால் தெரிவு செய்யப்பட்ட 325 பேருக்கு இத்துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் 300 துவிச்சக்கர வண்டிகளும், ஐ.ஓ.எம் அமைப்பின் அனுசரணையில் 25 துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் வங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில் மீள்குடியேற்றப்பட்ட இம்மக்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.தெரிவு செய்யப்பட்டவர்களுள் ஆசிரியர்கள், மாணவர்கள், குடும்பத் தலைவர்கள், கிராம சேவகர்கள் போன்றோர் அடங்குகின்றனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் றிசாட் பதியுதீன், மன்னார் மாவட்ட அரச அதிபர் ஏ.நிக்கொலாஸ் பிள்ளை, இராணுவ உயர் அதிகாரிகள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட்ரதனி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்தவிக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 Response to "அடம்பனில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு"
แสดงความคิดเห็น