மன்னார் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடினர்.

மன்னார் பிராந்திய ஆங்கில கற்கைநெறி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற இச்சந்திப்பில் உரையாற்றிய வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் வன்னியின் நான்கு மாவட்டங்களில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளை இணைத்து வன்னிக்கான வேலையற்ற பட்டதாரிகள் சங்கமொன்றை அமைக்கவுள்ளதாகவும் அதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உதவ வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
நீண்டகாலமாக வேலைவாய்ப்பு எதுவுமற்ற நிலையில் தாம் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சமூர்த்தி உதவித்திட்டத்;தில் தமக்கான வேலைவாய்ப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி உதவுவதுடன் இவ்விடயத்தில் ஏனைய மாவட்டங்களை விட மன்னார் மாவட்ட பட்டதாரிகளுக்கு முன்னுரிமையளிக்க வேண்டுமெனவும் அங்கு உரையாற்றிய வேலையற்ற பெண் பட்டதாரி ஒருவர் தெரிவித்தார்.
அனைத்து பட்டதாரிகளினதும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கால அவகாசத்தை கேட்டுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
கடந்த காலங்களில் கிடைத்த பல அரிய வாய்ப்புக்களை எமது தமிழ் தலைமைகள் தவறவிட்டதன் விளைவுகளைச் சுட்டிக்காட்டியதுடன் சந்தர்ப்பங்கள் கிட்டும்;போது அதனை முறையாகப் பயன்படுத்த வேண்டுமெனவும்; நல்ல வாய்ப்புக்களைத் தேடிச் செல்வதற்கான வழிமுறைகளையும் தெரிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமது சுயலாப எதிர்ப்பு அரசியலுக்காக மக்களின் இரத்தத்தை சூடேற்றும் வகையில் வீர வசனம் பேசி எமது மக்களை போரின் அவலத்துக்குள் தள்ளிவிட்ட தமிழ் கூட்டமைப்பினர் தாம் செய்த துரோகத்தனத்துக்காக தமிழ் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்






0 Response to "மன்னார் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடினர்."
แสดงความคิดเห็น