இடம்பெயர்ந்த தமிழ் மக்களை உபசரித்த முறை பற்றி திருப்தி கொள்ளவில்லை -ஜெனரல் சரத்பொன்சேகா
இடம்பெயர்ந்த தமிழ் மக்களை அரசாங்கம் உபசரித்த முறையையிட்டு தாம் திருப்தி கொள்ளவில்லை என முன்னாள் முப்படைகளின் பிரதானி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். பல்வேறு தியாகங்களை மேற்கொண்டு மீட்கப்பட்ட சுமார் 3லட்சம் மக்களும் விரைவில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் தாம் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் நலன்கருதியே சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிலிருந்து நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை இல்லாது செய்யவிருப்பதாகவும், அத்துடன் அரசியலமைப்பு சபையொன்றையும் உருவாக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளர். கடந்தகால யுத்த வெற்றிக்கு அரசியல் தலைமையும், இராணுவத்தினர் மற்றம் பொதுமக்களின் ஒன்றிணைந்த பங்களிப்பே காரணமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலில் அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிடுவதாக கூறிய அவர், எந்த அரசியல் கட்சியின்கீழ் போட்டியிடுவேன் என்பதை பின்னர் அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
0 Response to "இடம்பெயர்ந்த தமிழ் மக்களை உபசரித்த முறை பற்றி திருப்தி கொள்ளவில்லை -ஜெனரல் சரத்பொன்சேகா"
แสดงความคิดเห็น