jkr

லிபரான் அறிக்கை கசிவு: ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும்-ஜெயலலிதா


சென்னை: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷனின் அறிக்கை வெளியி்ல் கசிந்தற்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்தான் முழுப் பொறுப்பு என்று என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 17 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய அறிக்கையை ஒரு வழியாக மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. இன்றைய சூழ்நிலையில், இந்த ஆணையத்தின் முடிவுகள் படிப்பதற்கு மட்டுமே பயன்படக் கூடியதாக இருக்கும்.

இந்த ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பிறகு, ஒரு முறை அல்ல, பல முறை மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள், மதத்தில் அரசியல் புகுத்தப்பட்டதன் காரணமாக பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழி முறைகள் லிபரான் அறிக்கையில் கூறப்படவில்லை.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் ஏதும் குறிப்பிடப்படவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், பல கோடி ரூபாயை செலவழித்து 48 நீட்டிப்புகளின் மூலம் சுமார் 17 ஆண்டு காலத்திற்கு பிறகு பெறப்பட்ட அறிக்கை, உறுதியான பயனை அளிக்காமல் வெறும் சூட்டையும், தூசியையும் தான் கிளப்பி விட்டிருக்கிறது.

லிபரான் ஆணைய அறிக்கையில் அடங்கியுள்ள பொருள்களைக் காட்டிலும், அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில பகுதிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளுக்கு எப்படி கசிந்தன என்பதுதான் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விறுவிறுப்பான சூடான விவாதம்.

உண்மையைச் சொல்லப்போனால் அறிக்கை கசிவு குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கூச்சல் குழப்பத்தினால்தான் நாடாளுமன்றத்தில் அறிக்கை அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டது.

இந்தத் தருணத்தில், லிபரான் விசாரணை ஆணைய அறிக்கை கசிவிற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அறை கூவல் விடப்பட்டிருப்பது முற்றிலும் நியாயமான ஒன்றாகும். ஆனால், அறிக்கை கசிவில் தனக்கு பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்.

அறிக்கை கசிவு துரதிஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ள சிதம்பரம், உள்துறை அமைச்சகத்திற்கு வெளியேதான் கசிவு ஏற்பட்டிருக்கிறது என்று கூறவும் முனைந்திருக்கிறார்.

சென்செக்ஸ் குறியீடு அபரிமிதமாக உயர்ந்த போது, அதற்கு காரணம் மத்திய நிதி அமைச்சராக தானே என்று மார்தட்டிக் கொண்டார். தன்னுடைய பொருளாதாரக் கொள்கைதான் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டார்.

ஆனால் வீழ்ச்சி ஏற்பட்டபோது, வசதியாக சந்தை மீது பழியை போட்டு ஒதுங்கிவிட்டார். இதே முறையைத்தான் லிபரான் அறிக்கை கசிவிலும் கடைபிடித்திருக்கிறார் சிதம்பரம்.

நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியுள்ள லிபரான் அறிக்கை கசிவு பிரச்சனை, கரும்பு விலை அவசரச் சட்டம், ஸ்பெக்ட்ராம் ஊழல், மீனவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கக் கூடிய கடல் மீன் தொழில் வரைவுச் சட்டம், முல்லைப் பெரியாறு மற்றும் இதர முக்கியமான மக்களைக் பாதிக்கும் பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டது.

உண்மை நிலை என்ன வென்றால், முக்கியமான பிரச்சனைகளிலிருந்து 1992 பாபர் மசூதி இடிப்பு பிரச்சனைக்கு இந்த நாட்டின் கவனத்தை இந்த அறிக்கை கசிவு திசை திருப்பியிருக்கிறது.

தாக்குதலுக்கு உள்ளாக வேண்டியிருக்குமோ என்ற அச்சம் மற்றும் தர்மசங்கடமான நிலையிலிருந்து மாறி, ஓங்கி குரல் கொடுக்கும் நிலைக்கு தன்னை ஆளாக்கிக் கொண்டுள்ள மத்திய அரசு மட்டும்தான் இந்த அறிக்கை கசிவின் மூலம் பயனடைந்துள்ளது.

இது சூழ்ச்சியுடன் வேண்டுமென்றே திட்டமிட்டு வெளியிடப்பட்ட கசிவு லிபரான் அறிக்கையின் ஒரே ஒரு நகல் மத்திய உள்துறை அமைச்சரிடம் மட்டும்தான் இருந்தது. எனவே, இந்த கசிவிற்கு சிதம்பரம்தான் முழுப் பொறுப்பு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

எனவே, இந்த கசிவுக்கு பொறுப்பேற்று சிதம்பரம் பதவி விலக வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

சிதம்பரம் மீது உல்பா புகார் :

இந் நிலையில் வடகிழக்கு மாநி​ல பிரச்ச​னை​க​ளுக்​கு தீர்வு காண்​ப​தில் உள்​துறை அமைச்​சர் சிதம்​ப​ரம் ஆர்​வம்
காட்ட​​வில்லை என உல்பா​ குற்​றம் சாட்​டியுள்​ளது.

'தனி​நாடு கோரிக்​கை​யை​யும்,​ ஆயு​தப் போராட்​டத்​தை​யும் கைவிட்​டால்​தான் எந்​த​வொரு அமைப்​பு​ட​னும்
பேச்​சு நடத்த முடி​யும். ஆனால்,​ உல்​பா​வுக்கு எதி​ரான நட​வ​டிக்​கை​களை குறைத்​துக் கொள்ள மாட்​டோம்' என்று மா​நி​லங்​க​ள​வை​யில் கடந்த செவ்​வாய்க்​கி​ழமை பேசும்போது, உள்துறை அமைச்சர் சிதம்​ப​ரம் குறிப்​பிட்டார்.

இதுகுறித்து உல்பா அமைப்​பின் தலை​வர் அர​விந்த ராஜ்​கோவா வெளி​யிட்ட அறிக்​கை​யில், 'பி​ரச்ச​னைக்கு ராணு​வத் தீர்​வைத்​தான் மத்​திய அரசு விரும்​பு​கி​றது என்​றால் அது குறித்து நாடா​ளு​மன்​றத்​தில் அறி​விக்க வேண்​டும்.

பேச்​சு​வார்த்தை நடத்த வேண்​டும் என நாங்​கள் கெஞ்​ச​வில்லை. வன்​மு​றை​யைக் கைவிட்டு,​ சம​மான அந்​தஸ்​து​டன் அர​சி​யல் தீர்வு காணவே விரும்​பு​கி​றோம்.

ஆ​னால்,​ அமை​தி​யான தீர்​வைக் காண வேண்​டும் என்​ப​தில் மத்​திய அர​சுக்கு ஆர்​வம் இல்லை என்​ப​தையே அமைச்​சர் சிதம்​ப​ரத்​தின் பேச்சு காட்​டு​கி​றது என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "லிபரான் அறிக்கை கசிவு: ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும்-ஜெயலலிதா"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates