மன்னார் மாவட்ட மக்களுக்கான பணிகளை நேரடியாக வருகை தந்து நடைமுறைப்படுத்தவுள்ளேன் - பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.!

மன்னார் புனித சேவியர் ஆண்கள் கல்லூரியில் கடந்த 27.11.2009 அன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்படி கல்லூரிக்கு அமைச்சர் அவர்கள் வழங்கிய பல்வேறு நிதி உதவிகளை நினைவு கூர்ந்து அவரைக் கௌரவிக்கும் முகமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த காலத்தில் அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட கல்லூரி மைதானத்தை
செப்பனிடுவதற்காக 10 லட்சம் ரூபா நிதிஉதவி, பாடசாலை மாணவர்கள் தென்கொரியா சென்று மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக 6 இலட்சம் ரூபா உதவி மற்றும் கல்லு{ரிக்கென அரச காணியொன்றை பெற்றுக்கொடுத்தமை போன்ற உதவிகளை குறிப்பிட்டு உரையாற்றிய கல்லூரி அதிபரின் உரையினை செவிமடுத்த அமைச்சர் அவர்கள் இடம்பெயர்ந்த நிலையில் மீளக்குடியேறி இக்கல்லூரியில் கல்விகற்று வரும் 350 மாணவர்களுக்கான கழுத்துப்பட்டிகளை வாங்குவதற்கான உதவிவகளை வழங்குவதாகவும் தொண்டராசிரியர்களுக்கு ஆசிரிய உதவியாளர் நியமனங்கள் இன்னும் ஒருவார காலத்திற்குள் கிடைக்குமென்றும் மேலும் கல்லூpக்குத் தேவையான கணணி இயந்திரங்களை கூடிய விரைவில் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார். ஆத்துடன் விளையாட்டுப் போட்டிகளிலும் உயர்தர கல்வித்துறையிலும் சிறந்த மாணவர்களுக்கு அமைச்சர் அவர்கள் நிதயுதவிகளையும் வழங்கினார்.
கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை சீரமைப்பதற்கான நீர் விசிறும் கருவியை அமைச்சர் அவர்கள் இயக்கி ஆரம்பித்து வைத்ததும் குறிப்பிடத்தக்கது









0 Response to "மன்னார் மாவட்ட மக்களுக்கான பணிகளை நேரடியாக வருகை தந்து நடைமுறைப்படுத்தவுள்ளேன் - பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.!"
แสดงความคิดเห็น