சென்னை விமான நிலையத்துக்கு குண்டு மிரட்டல்

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்
விடுத்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலின் முதலாமாண்டு நிறைவு தினமான நேற்று சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், விமான நிலையத்திற்கு ஒரு மர்ம நபர் போன் செய்து, விமான நிலையத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடக்கப்போகிறது என மிரட்டல் விடுத்துவிட்டு, உடனடியாக இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால், கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, விமான நிலையம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு உஷார் நிலையில் இருந்தது. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை.
விமான நிலையத்துக்கு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொலைபேசி அழைப்பு மூன்று இலக்கம் கொண்ட ஒரு எண்ணில் இருந்து வந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
0 Response to "சென்னை விமான நிலையத்துக்கு குண்டு மிரட்டல்"
แสดงความคิดเห็น