வெற்றிநிச்சயமாகும் வீதத்தை கூறமுடியாது -அரசாங்கம் அறிவிப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொது வேட்பாளர். அவருக்கு சமாந்தரமான வேட்பாளர் எவரும் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் சவாலும் இல்லை என்று ஊடக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனõதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா பொது வேட்பாளராக களமிறங்கவிருக்கின்றார். அதற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) ஆதரவளிக்கின்றனர் இந்த நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
பொது வேட்பாளர் எம்மிடமே இருக்கின்றார் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இருக்கின்ற கட்சிகள் இருக்கின்ற பெரிய முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாகும் .ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சமாந்தரமான வேட்பாளர் இல்லை எந்த சவாலும் இல்லை, வெற்றி நிச்சயம் ஆனால் வீதத்தை கூறமுடியாது.ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த சிந்தனையில் மீதமிருக்கின்ற வேலைத்திட்டங்களே கொள்கையை முன்னெடுக்கப்படவிருக்கின்றது புலிகளை அழித்தொழித்த கட்சி மட்டுமல்லாது நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுசெல்கின்ற கட்சியாகும் இந்நிலையில் ஆணைக்குழுக்கள் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன தேர்தல் நீதியானதும் நேர்மையானதுமாக நடைபெறும்.
சட்டரீதியில் தேர்தல் நடத்தப்படல்வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவரும் எம்.பியுமான கருஜயசூரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையாளர் வாக்களிக்காத சுயாதீன நபர், வாக்களிப்பிற்கு ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தவேண்டும் என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டமையினால் கடந்த தேர்தல்களில் பெருந்தொகையான வாக்குகளை இழந்துவிட்டோம்.
அவர் எம்முடன் இருக்கும் போதும் தேர்தல்கள் நடத்தப்பட்டன அதன் போது ஒன்றுமே பேசவில்லை எனினும் தூக்கத்தில் கதைப்பதை போல ஆணைக்குழுக்களை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றார். ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிராமிய,நகர உரிமைகள் யாவும் பறிபோய் விட்டன . அக்கட்சி பாதாள குழிக்குள் இழுத்துச்செல்லப்படுகின்ற நிலையில் கட்சி உறுப்பினர்கள் விரைவில் எம்முடன் இணைவார்கள் என்றார்.
0 Response to "வெற்றிநிச்சயமாகும் வீதத்தை கூறமுடியாது -அரசாங்கம் அறிவிப்பு"
แสดงความคิดเห็น