jkr

க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள் : ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2009ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. பரீட்சைக்குத் தோற்றிய ஒரு லட்சத்து 99 ஆயிரம் பரீட்சார்த்திகளில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாவதற்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை, உயிரியல் விஞ்ஞானம் பாடத்தில் தமிழ்மொழி மூலம் தோற்றிய கொழும்பு வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி மைதிலி சிவபாதசுந்தரம் 2. 9388 இசட் புள்ளிகளைப் பெற்று அகில இலங்கையில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். மேலும், யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த அன்ரன் ஜோன் நிராஜ் பௌதிகவியலில் 3. 2498 இசட் புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ள மாணவ, மாணவிகளின் விபரங்கள் வருமாறு:

கலைப் பிரிவு

கலைப் பிரிவில் தோற்றிய மாத்தறை, ராகுல வித்தியாலயத்தைச் சேர்ந்த பசிந்துநாமல் ஜெயவர்த்தன 2. 5705 இசட் புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்திலும் கொழும்பு, சிறிமாவோ பண்டாரநாயக்க மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மிஹிரி ஹிருதினி 2. 5507 இசட் புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும் கண்டி புஸ்பதான மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சமிலா சம்பத்மாலி கருணாரத்ன 2. 5198 இசட் புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

வர்த்தகப் பிரிவு

வர்த்தகப் பிரிவில் காலி மகிந்த வித்தியாலயத்தைச் சேர்ந்த பசன்மலிந்த கெட்டபே ஆராச்சி 2. 8354 இசட் புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்திலும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த சங்கமித்த மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மோத்தா மெரங்கா லக்னா ஹம்சானி 2. 7402 இசட் புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும் ஹெம்மாத்தகம நாகராகிரி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கெட்டபேரி கண்டே உடகெதர ஹல்சா மதுசானிக்கா 2. 6967 இசட் புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர்

உயிரியல் விஞ்ஞானம்

உயிரியல் விஞ்ஞான பாடத்தில் தோற்றிய கொழும்பு விசாகா மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மதுஷி மகேசிகா ரணதுங்க 2. 9109 இசட் புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும் கொழும்பு நாலந்த வித்தியாலயத்தைச் சேர்ந்த கரவிட்டகே பசிந்து மதுசங்க பெரேரா 2. 8496 இசட் புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்திலும்

பௌதீக விஞ்ஞானம்

பௌதீக விஞ்ஞானப் பிரிவில் தோற்றிய கொழும்பு ஆனந்தா மகாவித்தியாலய மாணவர் நிபுண ரந்துனு சமரசேகர 3. 3439 இசட் புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்திலும் கொழும்பு நாலந்த வித்தியாலயத்தைச் சேர்ந்த முகதங்கே கியந்தபினு அமரதுங்க 3. 2037 இசட் புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்திலும் தெரிவாகி பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்புக்களையும் பெற்றுள்ளனர். இதேவேளை, 2009ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை www.doenet.lkஎன்ற இணையத் தளத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள் : ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates