நவம்பர் 27 இன்றைய தினம் கொலைகாரர்களின் தினம்:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
நவம்பர் 27 இன்றைய தினம் கொலைகாரர்களின் தினம் என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமான இன்று மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இன்றைய தினம் கொலைகாரர்களின் தினம்.ஆனால் உயிர் நீத்த போராளிகள் மக்களுக்காகவே உயிர் நீத்துள்ளனர். இவர்களை மன்னிக்க முடியும்.ஆனால் இதனை ஏவிவிட்டவர்கள் தற்போது இல்லை.இவர்கள் அனைவரும் தங்களை தியாம் செய்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது மன்னார் மாவட்டத்திலுள்ள் 7பாடசாலைகளுக்கு 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்களையும் அமைச்சர் பகிர்ந்தளித்தார்.இதில் சமூகசேவைகள் அமைச்சின் உயர் அதிகாரிகளும்,மடு வலயக் கல்விப் பணிப்பாளர்,7 பாடசாலைகளினதும் அதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து மன்னார்-தலைமன்னார் பிரதான விதியிலுள்ள சிங்கள பாடசாலையில் தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினார்
0 Response to "நவம்பர் 27 இன்றைய தினம் கொலைகாரர்களின் தினம்:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா"
แสดงความคิดเห็น