jkr

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது : பிரிட்டன் கோரிக்கை


2011 ஆம் ஆண்டின் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை பிரித்தானியா முன்வைக்கவுள்ளது.

பிரித்தானிய பிரதமர் கோடன் பிரவுண் இன்று மேற்கிந்திய ரினிடாட்டில் ஆரம்பமாகவுள்ள, பொதுநலவாய மாநாட்டில் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஏற்கனவே பொதுநலவாய நாடுகளின் செயலாளர்,கமலேஸ் சர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் ரட்டுடனும் கோடன் பிரவுண் பேச்சு நடத்தியுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் பொதுநலவாய நாடுகளின் மாநாடு பெறுமதிமிக்க ஒன்று எனத் தெரிவித்துள்ள அவர், தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது பொதுமக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டமை காரணமாகவே இந்த மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையைத் தான் முன்வைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜதந்திர தரப்புகளின் தகவல்களின்படி, இலங்கையின் இந்த மாநாட்டை நடத்தக்கூடாது என்பதில் பிரித்தானியா முனைப்புடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், பொதுமக்களுக்குப் பாரிய இழப்புகள் ஏற்பட்டன. இதன் போது பொதுமக்களின் பாதிப்புகளைக் குறைக்குமாறும் ஐக்கிய நாடுகளின் பிரசன்னத்தை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகரிக்குமாறும், பிரித்தானியா கோரிக்கையை முன்வைத்திருந்தது.

எனினும் அதனை, இலங்கை அரசாங்கம் ஏற்று செயற்படவில்லை என்பதே கோடன் பிரவுணின் குற்றச்சாட்டாக உள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது : பிரிட்டன் கோரிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates