ஆப்கானிலிருந்து 2017 ல் யு.எஸ். படைகள் வெளியேறிவிடும் : வெள்ளை மாளிகை
ஆப்கானிஸ்தானிலிருந்து வருகிற 2017 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறிவிடும் என வெள்ளை மாளிகை பேச்சாளர் ராபர்ட் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகளுக்கு உதவியாக மேலும் 30,000 படை வீரர்களை அனுப்புவதற்கான அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வருகிற செவ்வாய்க் கிழமையன்று அறிவிக்க உள்ளார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நிலைகொண்டிருப்பது முடிவில்லா நிலையாக தொடரக்கூடாது என்று ஒபாமா வலியுறுத்தி வருவதாகவும், வருகிற 2017 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறிவிடும் என வெள்ளை மாளிகை பேச்சாளர் ராபர்ட் கிப்ஸ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க படைகள் சென்று ஒன்பது ஆண்டுகளாகிவிட்டன.இன்னும் எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளுக்கு நாங்கள் அங்கே இருக்கப்போவதில்லை.
அமெரிக்க ப்டைகள் அங்கு ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள்தான் இருக்க முடியும்.இதனை மக்கள் புரிந்துகொள்வது முக்கியமானது என்று கிப்ஸ் மேலும் தெரிவித்தார்.
0 Response to "ஆப்கானிலிருந்து 2017 ல் யு.எஸ். படைகள் வெளியேறிவிடும் : வெள்ளை மாளிகை"
แสดงความคิดเห็น