jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ஆப்கானிஸ்தான் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ஆப்கானிஸ்தான் แสดงบทความทั้งหมด

ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் .., அதிபர் மாளிகையை கைப்பற்ற முயற்சி




காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். 4 மணிநேர துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்துள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அந்நாட்டு அதிபர் ஹமீது கர்சாய் கூறியுள்ளார். காபூல் நகரங்களில் அதிபர் மாளிகை கட்டடம், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சகம் புகழ்பெற்ற செரீனா ஓட்டல் , சென்ட்ரல் பாங்க், உள்ளிட்ட பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேற்கூறிய பகுதிகளில் பல்வேறு கட்டடங்கள் தீப்பற்றி எரிகிறது. பல இடங்களில் பயங்கரவாதிகளுடன் , பாதுகாப்பு படையினர் பயங்கர துப்பாக்கி சண்டை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் விவரம் இன்னும் கிடைக்கவில்லை. ஆப்கனில் அமெரிக்க மற்றும் ஐ.நா., படையினர் சுமார் 37 ஆயிரம் பேர் அங்குமுகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கனில் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க புலனாய்வு துறை அதிகாரிகள் 7 பேர் சமீபத்தில் கொல்லப்பட்டனர். அமெரிக்க தூதரகம், ஐ.நா., அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவதே தலிபான்களின் இலக்காக இருந்து வந்திருக்கிறது. அங்கிருந்து அமெரிக்க படையினரை திரும்ப அழைக்கவும், ஒரளவு படையினரை குறைப்பதையும் அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிட்டாலும் இது வரை இந்த விஷயத்தில் தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்க முடியவில்லை.

இந்நிலையில் இன்று காபூல் நகரில் தலிபான் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். செரீனா ஓட்டல் அருகே முதலில் ஒரு கார் குண்டு வெடித்தது. தொடர்ந்து வணிக வளாகம் மற்றும் பாங்க் , அமைச்சரவை அலுவலகங்களில் பயங்கரவாதிகள் அதிரடி துப்பாக்கியுடன் நுழைந்துள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், , பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

ஆங்காங்கே குண்டு வெடிக்கும் சப்தம் : அதிபர் கர்சாய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கவிருந்த வேளையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிபர் மாளிகையை கைப்பற்ற பயங்கரவாதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தலிபான் அமைப்பு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ஆங்காங்கே குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டதாகவும் , பலர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பல கட்டடங்கள் எரிவதாகவும் நேட்டோ படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மும்பை போல தாக்குதல் : எத்தனை கட்டடங்கள் எரிகிறது , எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற முழு விவரம் இன்னும் வரவில்லை. பல கட்டடங்களில் பயங்கரவாதிகள் நுழைந்து கைப்பற்றியுள்ளதாகவும் ஏறக்குறைய மும்பையில் நடந்த தாக்குதல் போல இந்த அணுகுமுறையை பயங்கரவாதிகள் செயல்படுத்தியுள்ளதாக அங்கு முகாமிட்டுள்ள பிரபல இணையதள நிருபர் கூறியுள்ளார்.

அதிபர் கர்சாய் பேட்டி : அங்கு நடந்துள்ள சம்பவம் குறித்து அதிபர் கர்சாய் கூறியிருப்பதாவது: பயங்கரவாதிகள் அதிபர் மாளிகைக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். இந்த சதி முறியடிக்கப்பட்டு விட்டது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நேரத்தில் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் அங்கு நுழைந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். முன்னதாக பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். 4 மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்து விட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஆப்கானிலிருந்து 2017 ல் யு.எஸ். படைகள் வெளியேறிவிடும் : வெள்ளை மாளிகை


ஆப்கானிஸ்தானிலிருந்து வருகிற 2017 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறிவிடும் என வெள்ளை மாளிகை பேச்சாளர் ராபர்ட் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகளுக்கு உதவியாக மேலும் 30,000 படை வீரர்களை அனுப்புவதற்கான அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வருகிற செவ்வாய்க் கிழமையன்று அறிவிக்க உள்ளார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நிலைகொண்டிருப்பது முடிவில்லா நிலையாக தொடரக்கூடாது என்று ஒபாமா வலியுறுத்தி வருவதாகவும், வருகிற 2017 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறிவிடும் என வெள்ளை மாளிகை பேச்சாளர் ராபர்ட் கிப்ஸ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க படைகள் சென்று ஒன்பது ஆண்டுகளாகிவிட்டன.இன்னும் எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளுக்கு நாங்கள் அங்கே இருக்கப்போவதில்லை.

அமெரிக்க ப்டைகள் அங்கு ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள்தான் இருக்க முடியும்.இதனை மக்கள் புரிந்துகொள்வது முக்கியமானது என்று கிப்ஸ் மேலும் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஆப்கானில் 9 ஐநா அதிகாரிகள் சுட்டுக் கொலை : தீவிரவாதிகள் அட்டகாசம்


ஆப்கானிஸ்தான் தலை நகரம் காபூலில் மைய பகுதியிலுள்ள ஐ.நா. சபை விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டதில் ஐ.நா. அதிகாரிகள், ஊழியர்கள் 9 பேர் பலியா னார்கள். 9 பேர் காயம் அடைந்தனர்.

தனியாருக்குச் சொந்தமான ஒரு ஹோட்டலையே ஐநா அதிகாரிகள் விருந்தினர் மாளிகையாக மாற்றியிருந்தனர். இங்கு ஐ.நா. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கி இருந்தனர். இவர்களுடன் பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் அதிகாரிகளும் தங்கி இருந்தனர்.

இந்த விடுதிக்கு ஏற்கனவே தீவிரவாதிகள் குறிவைத்து இருந்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆனால் பலத்தபாது காப்பையும் மீறி இன்று காலை 7.00 மணியளவில் தலிபான் தற்கொலைப் படை தீவிரவாதிகள் 3 பேர் இந்தமாளிகைக்குள் புகுந்தனர். அப்போது ஐ.நா. அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட 100 பேர் அங்கு இருந்தனர்.

தீவிரவாதிகளைப் பார்த்ததும் அவர்களை நோக்கி பாது காப்புபடையினர் சுட்டனர். பதிலுக்கு தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி விட்டு உள்ளே அதிரடியாக புகுந்தனர்.

கையில் இயந்திரத் துப்பாக்கிளை ஏந்தி வந்த அவர்கள் எதிரில் வந்தவர்களை எல்லாம் கண்மூடித்தனமாகச் சுட்டனர்.

தீவிரவாதிகள் புகுந்து விட்டதை அறிந்ததும் ஐ.நா. அதிகாரிகளும், ஊழி யர்களும் அறைக்குள் ஓடிச் சென்று மறைந்து கொண்டனர். ஆனால் தீவிரவாதிகள் வெடிகுண்டு ஒன்றை வீசி, கதவுகளை உடைத்து, உள்ளே சென்று அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். சிலரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர்.

தீவிரவாதிகள் தாக்குதலில் ஐ.நா. அதிகாரிகள், ஊழியர்கள் 9 பேர் பலியானார்கள். 9 பேர் காயமடைந்தனர்.

வெடிகுண்டு வீசி தாக்கியதால் கட்டிடத்தில் ஒரு பகுதியில் தீப்பிடித்து கொண்டது. இதனால் அந்தபகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது.

தாக்குதல் நடந்த இடத்துக்கு கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டன. அவர்கள் அந்த இடத்தைச் சுற்றி வளைத்து நின்று தாக்கினர். இருதரப்புக்குமிடையே கடும் மோதல் இடம்பெற்றது.

நீண்ட நேர மோதலுக்குப் பிறகு 3 தீவிரவாதிகளையும் படையினர் சுட்டு வீழ்த்தினர். அதன் பிறகு விருந்தினர் மாளிகை பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இந்தத் தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்று தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாரித் செய்தி நிறுவனம் ஒன்றுடன் தொடர்பு கொண்டு பேசிய போது, "ஆப்கானிஸ் தான் அதிபர் தேர்தலுக்கு உதவியதால் ஐ.நா. விருந்தினர் மாளிகையைத் தாக்கி இருக்கிறோம். இது எங்கள் முதல் தாக்குதல். மேலும் தாக்குதல்கள் தொடரும்" என்று கூறினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஆப்கானில் இடம்பெற்ற யுத்த குற்றச் செயல்கள் குறித்து சர்வதேச விசாரணை


ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகs சுமத்தப்படும் குற்றச் சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் திரட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. நோட்டோ படைவீரர்கள் மற்றும் தலிபான் தீவிரவாதிகளினால் யுத்தக் குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பல தரப்பினர் கோரி வருவதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் தலைவர் லுயிஸ் மெர்னொ குறிப்பிட்டுள்ளார்.எனினும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையோ அல்லது ஆப்கானிஸ்தானோ கோரிக்கை விடுத்தால் மட்டுமே விசாரணைகளை முன்னெடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இன ஒடுக்குமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதென குறித்த நாடுகள் தெரிவிக்கும் பட்சத்திலேயே சர்வதேச நீதிமன்றம் இதில் தலையீட முடியும் எனவும் குறிப்பிடப்படுகிறது.யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக சர்வதேச தொண்டு நிறுவனங்கள் முறைப்பாடு செய்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கல் தெரிவிக்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates