யுத்தக்குற்றம் தொடர்பில் தன்னிடம் விளக்கம் கோரலாம்.. ஜனாதிபதி அமெரிக்காவுக்கு தெரிவிப்பு
முப்படைத்தளபதி சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா விளக்கம் கேட்கப் போவதாக வெளியான தகவல் தொடர்பில் யுத்தக்குற்றம் தொடர்பாக அமெரிக்கா எதனையும் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அதனை தம்மிடம் கேட்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் தெரிய வருகையில் கூட்டுப்படை தலைமையதிகாரி சரத்பொன்சேகாவை அமெரிக்கா விசாரணை செய்யப் போவதாக வெளியான தகவல் இலங்கையில் அரசியல் தரப்பில் முக்கிய பிரச்சினையாக எழுந்துள்ளது. இந்தநிலையில் இதுதொடர்பில் ஜனாதிபதி நேற்று முக்கிய அமைச்சர்களுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளார். இதன்போது யுத்தக்குற்றம் தொடர்பாக எவராவது குறிப்பாக அமெரிக்கா எதனையும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதனை தம்மிடம் கேட்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். முப்படைகளினதும் தளபதி என்ற அடிப்படையில் தாமே அதற்கு பதில் சொல்ல முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை இந்தக் கலந்துரையாடலின் போது சரத்பொன்சேகாவை அமெரிக்கா விசாரணைகளுக்கு உட்படுத்த விடாமல் இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இராஜதந்திரி மட்டத்தில் இதுதொடர்பான முனைப்புகளை மேற்கொள்வதற்கும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரத் பொன்சேகாவை தமது தரப்புக்கு மாற்றுவதற்கும் ஜனாதிபதியின் தரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Response to "யுத்தக்குற்றம் தொடர்பில் தன்னிடம் விளக்கம் கோரலாம்.. ஜனாதிபதி அமெரிக்காவுக்கு தெரிவிப்பு"
แสดงความคิดเห็น