jkr

பிரபாவின் பெற்றோர், சூசையின் மனைவி ஆகியோரையும் இராணுவமே காப்பாற்றியது: வெள்ளை கொடியுடன் வந்தவர்களை இராணுவம் சுட்டுக் கொண்டதாக குற்றம் சாட்டுவது துரோகமானது


இலங்கை இராணுவம் மிலேச்சத்தனமான இராணுவமல்ல. மிலேச்சத்தனம் இராணுவமாக இருந்தால் பிரபாகரனின் தாயார், சூசையின் மனைவி, ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் காப்பாற்றப்பட்டிருக்க மாட்டார்கள்.

இலங்கை இராணுவம் வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை கொலை செய்த இராணுவமாக உலகிற்கு காட்ட முனைவது துரோகத்தனமானதாகும். இதனை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். மிலேச்சத்தனமான இராணுவம் என்பதை உலக நாடுகளும் ஏற்றுக் கொள்ளாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் பல்கலைக்கழக கல்விமான்கள், டாக்டர்கள், சட்டத்தரணிகள், பெருந் தோட்ட முகாமையாளர்கள், புத்திஜீவிகள் மத்தியில் செவ்வாய்க் கிழமை இரவு (22.12.2009) புத்திஜீவிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் ஜனாதிபதி தமதுரையில், நான் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களை விட்டு விட்டு ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் சபை ஆகியவற்றின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் கடமையில் ஈடுபட வேண்டியுள்ளது. இந்த நிலைக்கு முன்னாள் தளபதியே காரணமாகும்.

ஏன் இப்படி ஒரு துரோகத்தினை புரிந்தார் என்று தெரியவில்லை. இது ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளை பெறுவதற்க¡கவா? அல்லது வெளிநாட்டு சக்திகளின் சதி காரணமாகவா? என தெரிய வில்லை. எந்த வெளிநாட்டு சக்திகளுக்கும் நாம் அடிபணியப் போவதில்லை.

யுத்தத்தினை நிறுத்துமாறு பல நாடுகள் கோரிக்கைவிடுத்தன. பல தலைவர்கள், ஜனாதிபதிகள், பிரதமர்கள் என்னுடன் தொலைபேசியில் உரையாடினார்கள்.

சில நாட்டு தலைவர்கள் சிலரை தூதுவிட்டார்கள். நான் உண்மையை தெளிவுபடுத் தினேன். சுதந்திரத்திற்கு முன் அவர்களது காலணித்துவ நாடுகளில் ஒன்றாக நாம் விளங் கினோம். ஆனால் இப்போது இலங்கை உங்கள் காலணித்துவ நாடு இல்லை என தெளிவாக கூறினேன்.

ஆனால் சாதாரண தமிழ் மக்களுக்கு தீங்கு விளைவிக்க வேண்டாம் என பல தடவைகள் எமது இராணுவத்திற்கு உத்தரவிட்டேன்.

எமது இராணுவமும் எனது உத்தரவை ஏற்று சாதாரண மக்களைக் காப்பாற்றினார்கள். இதனை உலகம் அறியும்.

யுத்தத்திற்கு எதிராக யுத்தம் செய்யக்கூடிய பலத்தினையும், யுத்தத்தினை கொண்டு நடத்தக்கூடிய மனவலிமையையும் மன உறுதியினையும் நான் ஏற்படுத்தினேன். முழு உலகமும் பயந்திருந்த பயங்கரவாதத் தினை முற்றாக ஒழித்தோம்.

எனக்கு இந்நாட்டினை கையளிக்கும் போதும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொருளாதாரத்தினை பற்றி மக்கள் கேட்கவில்லை.

பயங்கரவாதத்தினை அழிக்குமாறே மக்கள் கேட்டனர்.

அதனையே நான் செய்தேன். இனி சுதந்திரமான இலங்கையின் பொருளா தாரத்தை முன்னேற்றுவோம்.

யுத்த காலத்திலும் நீர்மின்திட்டங்கள், துறைமுக திட்டங்கள், விமான நிலையம் நிர்மாணத்துடன், கமநெகும, மகநெகும போன்ற வீதி, கிராம அபிவிருத்தி வேலைகளையும் செய்துள்ளோம். நாட் டுக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை, கடன் பிரச்சினை ஆகியவற்றை தீர்த்து ள்ளோம். சகல கடன்களையும் செலுத்தி யுள்ளோம்.

ஈரானுடன் பேசி ஏழுமாத வட்டியில்லா கடன் மூலம் பெற்றோல் தேவையை நிறைவேற்றினோம். லிபியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் எமக்கு உதவின.

எல்லாவற்றிற்கு மேலாக இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை சமநிலைப்படுத்தி வைத்திருந் தோம். யாருடைய கட்டலைக்கு அடிபணி யாது பொருளாதாரத்திலும், யுத்தத்திலும் வெற்றிகண்டோம்.

வடகிழக்கு மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை.

அவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடங்கள் முன்கூட்டியே நான்கு வருட முடிவில் நடத்துகிறேன். வட கிழக்கு தமிழ் மக்களும் தமது ஜனாதிபதியை தெரிவு செய்ய உரிமை யுடையவர்கள்.

அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளேன்.

மிஹின் ஏயார் பற்றி பேசுகின்றனர். அன்று அமெரிக்கா ஆயுத உதவி செய்தபின் அந்த ஆயுதங்களுக்கு தேவையான ரவைகள், குண்டுகள் அமெரிக்கா தந்து தவிய போது அதனை எடுத்து வர மிஹின் எயாரையே அனுப்பினேன். ஜோர்ஜ் புஷ் நிர்வாகமும் இதற்கு உதவியது.

எமது விமானப்படை சரியான இலக்குகளை தாக்கியது. கப்பற்படை ஆயுத கப்பல்களை அழித்தது. இவையே இராணுவ வெற்றிக்கு காரணமாகும்.

இன்று இராணுவ படையையும், வெற்றிகொண்ட 58 வது படையினரையும் முன்னாள் தளபதி காட்டிக்கொடுக்க முயற்சிப்பது எந்தவகையில் நியாயமாகும். இராணுவ வெற்றிக்கு, அதன் செயற் பாடுகளுக்கு இராணுவ தளபதி முதல் கடைசி இராணுவ வீரர்வரை பங்களித் துள்ளனர். அவர்களை காட்டிக்கொடுப்பது துரோகமில்லையா?

கண்டியில் நடைபெற்ற எதிரணி கூட்ட த்தில் எனது குடும்பத்தைப்பற்றி திட்டித் தீர்த்துள்ளனர். எனது பிள்ளைகளை திட் டியுள்ளதோடு சாபமிட்டுள்ளனர். எனது குடும்பத்துக்கு சாபமிடுவது நியாயமா?

ஏழு தடவைகள் எனது குடும்பத்திற்கு இடிவிழ வேண்டும் என ஒரு கட்சித் தலைவர் சாபமிட்டுள்ளார்.

எனது மகன் போர்படை வீரராக வந்தமை பிழையானதா? ஏனைய குடும்பத்திலுள்ளவர்கள் யுத்தம் புரியும் போது எமது இராணுவத்திற்கு இளை ஞர்கள் தேவைப்பட்ட போது எனது மகனையும் படையில் சேர்த்தது மூலம் நான் முன்மாதிரியாக நடந்து காட்டி யுள்ளேன். இதற்கு சாபமிடுவது சரியா?

எனது சகோதரர்கள் பற்றி மிகவும் கேவலமாக பேசியுள்ளனர். ராஜபக்ஷ சகோதரர் கம்பனி என கூறியுள்ளனர். நான் சொத்துச் சேர்த்ததாக கூறியுள்ளனர். கண்டி நகர சிட்டி செண்டர் காணியில் கட்டப்படும் ஹோட்டல்கள் கொழும்பு 8pகுருநாகல் காணி ஆகியவற்றை நானும் எனது சகோதரர்களும் வாங்கி யுள்ளதாக கூறியுள்ளனர். இதனைநிரூபிக்க முடியுமா. எனது சகோதரர் பசில் ராஜபக்ஷ ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்களை பிரகடனப்படுத்த வேண்டும். அவரது சொத்து பிரகடனத்தினை பார்க்க முடியும். நானும் சொத்து சேர்க்கவில்லை. எனது சகோதரர் கோட்டாபேக்கும் சொத்துகள் இல்லை.

இவை அரசியலின் கீழ்த்தரமான பிரசாரங்களாகும். எமது குடும்பம் சகோதரர் கம்பனிதான். ஏனெனில் 1936 இல் எனது மூத்த தாத்தா உறுப்பினர் அவர் இறந்தபின் அவரது மகனான என்னுடைய தாத்தா உறுப்பினர். அவருக்கு பின் என் தகப்பனார் உறுப்பினர். 1945 ஆம் ஆண்டு சட்டநிறுவன சபையில் எனது அப்பா போட்டியின்றி தெரிவானவர். அதன்பின் நான், எனது சகோதரர்கள் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறோம்.

இதற்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை விசுவாசமே காரணமாகும். நீங்கள் புத்தி ஜீவிகள். உங்களுக்கு யுத்தம், வெற்றி, பொருளாதார, சவால்கள், எதிர்கால சவால் கள் பற்றியெல்லாம் தெரியும். நான் இறுதிவரை தாய்நாட்டுக்கு விசு வாச முடையவனாகவே இருப்பேன். சகல மக்களையும் காப்பாற்றுவேன். யாருக்கும் துரோகமிலைக்கமாட்டேன். இராணுவத்தை காட்டிக்கொடுக்க மாட்டேன்.” என்னை சிறைப்படுத்துவதாக கூறியுள்ளனர்.

எனக்கு ஏற்கனவே சிறை அனுபவம் உண்டு. ஜே.ஆர். ஜெயவர்தன என்னை 3 மாதம் சிறையிலிட்டார். இதுதவிர சுனாமியின் போது “ஹெல்ப் அம்பாந்தோட்டை நிதியை மோசடி செய்ததாக கூறினார்கள்.

ஆனால் ஜனாதி பதித் தேர்தலில் அம்பாந்தோட்டையிலேயே அதிகம் வாக்குகளை பெற்றார் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பிரபாவின் பெற்றோர், சூசையின் மனைவி ஆகியோரையும் இராணுவமே காப்பாற்றியது: வெள்ளை கொடியுடன் வந்தவர்களை இராணுவம் சுட்டுக் கொண்டதாக குற்றம் சாட்டுவது துரோகமானது"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates