471.9 மில்லியன் டொலர்கள் சுனாமி நிதி காணாமல் போனமை தொடர்பில் அரசாங்கம் பதில் கூற வேண்டும்.
சுனாமி ஏற்பட்டு 5 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் 471.9 மில்லியன் டொலர்கள் சுனாமி நிதி காணாமல் போனமை தொடர்பில் அரசாங்கம் பதில் கூற வேண்டும் என ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் கோரியுள்ளது.
உடனடியாகக் கணக்காய்வுகளை மேற்கொண்டு, இந்த நிதி என்னவானது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என அந்த நிறுவனம் கோரியுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள, ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ருக்ஷானா நாணயக்கார
“சுனாமி கட்டமைப்புகளுக்காக 2,126,771.858 டொலர்கள் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.
இதனையடுத்து 1,075,375,348 டொலர்கள் இலங்கைக்குக் கிடைத்தன. இதில் 603,443,908 டொலர்கள் செலவிடப்பட்டுள்ள நிலையில் 471,931,440 டொலர்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அரசாங்கம் இந்த நிதிக்கு என்ன நடந்தது என்பதை வெளிக்கொணர வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
காணாமல் போன கணக்குகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வினவியபோது, அவர்கள் உரிய பதில் வழங்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆழிப்பேரலை ஏற்பட்ட காலப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பாரிய நிவாரண நிதிகளை அந்தக் காலக்கட்டத்தில் ஆளும் தரப்பில் இருந்தோரே ஊழல் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Response to "471.9 மில்லியன் டொலர்கள் சுனாமி நிதி காணாமல் போனமை தொடர்பில் அரசாங்கம் பதில் கூற வேண்டும்."
แสดงความคิดเห็น