கண்ணிவெடி அகற்றப்படாத இடங்களிலேயே மக்கள் மீள் குடியமர்த்தப்படுகின்றனர் : சரத் பொன்சேகா குற்றச்சாட்டு
உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளான மக்கள் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத இடங்களிலேயே குடியமர்த்தப்பட்டு வருவதாக எதிர்கட்சிப் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை கந்தளாயில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளார்.
முன்னதாக இடம்பெயர்ந்த மக்களை, நிலக்கண்ணி வெடிகளைக் காரணம் காட்டி குடியமர்த்தாது வந்த அரசாங்கம், தற்போது அதனைப் பொருட்படுத்தாது குடியமர்த்தி வருகிறது.
இது அரசாங்கத்தின் அப்பட்டமான தேர்தல் பிரசாரம் என அவர் இதன் போது குற்றம் சுமத்தினார்.
இதேவேளை அரசாங்கத்தினால் இதுவரையில் குடியமர்த்தப்பட்ட மக்கள் அனைவரும், தமக்கான அடிப்படை உட்கட்டுமான வசதிகள் எவையும் இன்றி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கம் முன்னதாக அறிவித்த வகையில் எதிர்வரும் ஜனவரி 31ம் திகதிக்கு முன்னதாக இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், திட்டமிட்டப்படி ஜனவரி 31ம் திகதிக்கு முன்னதாக அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் மீள் குடியமர்த்தும் என மனித உரிமைகள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Response to "கண்ணிவெடி அகற்றப்படாத இடங்களிலேயே மக்கள் மீள் குடியமர்த்தப்படுகின்றனர் : சரத் பொன்சேகா குற்றச்சாட்டு"
แสดงความคิดเห็น