வவுனியா, பூந்தோட்டத்தில் சுனாமி அனர்த்த ஞாபகார்த்த நிகழ்வு- (புகைப்படங்கள் இணைப்பு)
வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தில் பூந்தோட்டம் ஆலய பரிபாலன சபையினரும், வவுனியா நகரசபையினரும் இணைந்து கடந்த 26ம் திகதி சுனாமி அனர்த்த 5ம் ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வினை நடத்தியிருந்தனர்.. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், சிவநாதன் கிஷோர், வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், உபதலைவர் எம்.எம்.ரதன், வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் புளொட் அமைப்பின் முக்கியஸ்தருமான ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி), நகரசபை உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட அரஅதிபர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தியதுடன், அஞ்சலி உரைகளையும் ஆற்றியிருந்தனர்.
வன்னி நிலப்பரப்பில் புலிகள் கண்ணிவெடிகளை விநோதமான முறையில் புதைத்திருக்கிறார்கள் என்று கண்ணிவெடி அகற்றம் சுவிஸ் நிறுவனப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழமையாக கண்ணிவெடிகளைப் புதைக்க ஒரு வியூகம் இருப்பதாகவும் ஆனால் அதனை பின்பற்றாமல் புலிகள் வினோதமான முறையிலும் கண்ணிவெடிகள் எங்கு இருக்கலாம் என்று சற்றம் ஊகிக்க முடியாத இடத்திலும் கண்ணிவெடிகளை புதைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சுவிஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் வன்னியில் பெரியதம்பனை முதல் பண்டிவிரிச்சான் வரை கண்ணிவெடிகளை தாம்; அகற்றி இருப்பதாக தெரிவித்துள்ளனர். குரோவேசியா தயாரிப்பான தானியங்கி இயந்திரத்தைக் கொண்டு கண்ணிவெடிகளை முன்நாள் இந்தியப் படையதிகாரி ஒருவர் அகற்றி வருகின்றார் இவர் சுவிஸ் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணிபுரிகிறார் அவர் மேலும் தெரிவிக்கையில் புலிகள் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள்ளும் கவசவாகனங்களை தாக்கியழிக்கும் கண்ணிவெடிகளை புதைத்திருப்பதாக தெரிவித்தார். வடகிழக்கில் சுமார் 1லட்சத்து 50ஆயிரம் கண்ணிவெடிகளை புதைக்கப்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இராணுவத்தினர் புதைத்த கண்ணிவெடிகளும் உள்ளடங்கும் இதுவரை சுமார் 4589 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதாக கூறுகிறார்.