அவுஸ்திரேலியாவை உலுக்கிய இரு இலங்கைத் தமிழர்களின் வங்கிக் காசட்டை மோசடி
இங்கிலாந்தைச் சேர்ந்த 36 வயதுடைய இளங்கோவன் கணேஷமூர்த்தி மற்றும் கணடாவைச் சேர்ந்த 31 வயதுடைய ருக்ஷாந் செல்வராஜா ஆகிய இருவருமே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டவர்களாவர்.
மேற்கு அவுஸ்த்திரேலிய மாநிலமான பேர்த்திலுள்ள சுமார் 20 இற்கும் மேற்பட்ட மக்டொனால்ட் உணவு விடுதிகளில் "டிரைவ் இன்" பகுதியால் உள்நுழைந்து பணியாளர் வேறு வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் தறுணத்தைப் பார்த்திருந்து தமது மோசடி "எfட்பொஸ்" இயந்திரத்தை அங்கிருக்கும் இயந்திரத்திற்காகப் பிரதியீடு செய்த இவர்கள், பின்னர் "புளூ டூத்" பொறிமுறை மூலம் தமது மோசடி இயந்திரத்தில் உரசப்படும் காசட்டைகளின் விவரங்களை தமது பிரத்தியேகக் கணணிக்கு தரவிறக்கம் செய்துவிடுகிறார்கள்.
இவ்வாறு தரவிறக்கம் செய்யப்படும் அப்பாவிகளின் காசட்டை இலக்கம் மற்றும் இரகசிய குறியீட்டு எண் என்பவற்றைப் பாவித்து போலியான வங்கிக் காசட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. பின்னர் இக் காசட்டைகளைக் கொண்டு உலகெங்குமுள்ள "ஏ.டி.எம்" இலத்திரணியல் காசு இயந்திரங்களினூடாகப் பெருமளவு பணம் எடுக்கப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்பட்ட பணத்தின் அளவு சுமார் 5 மில்லியன் அவுஸ்த்திரேலிய டாலர்களைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தனியொரு வன்கிக் காசட்டை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட அதிகூடிய பனத்தினளவு சுமார் 7000 அவுஸ்த்திரேலிய டாலர்கள் என்று போலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதே வகையிலான மோசடி ஒன்று பிரபல வங்கி ஒன்றின் "ஏ.டி.எம்" ஊடாகவும் நிகழ்ந்திருக்கிறது. அந்த இலத்திரனியல் காசு இயந்திரம் இயக்கப்படும் ஒவ்வொரு தறுவாயும் அதில் பதியப்படும் இலக்கங்கள் மற்றும் கடனட்டை இலக்கங்கள் ரகசியமாகத் தரவிறக்கப்பட்டு பின்னர் வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் பெறப்பட்டுள்ளத்து. வங்கி இயந்திர தட்டச்ச்ய் பட்டையை ஒத்ததாக இருக்கும் இந்த மோசடிக் கும்பலின் தட்டச்சு மட்டையும் இலகுவாக பணியாளர்கள் மற்றும் கஷ்டமர்களின் கண்களில் மண்ணைத் தூவி விடுகின்றன. இதனால் அண்மைக்காலத்தில் இந்த குறிப்பிட்ட வங்கி "ஏ.டி.எம்" கலைப் பாவித்த ந்வாடிக்கையாளர்களைத் தமது வங்கி நிதி அறிக்கையை சரிபார்க்கும்படி போலிசாரால் கேட்க்பட்டுள்ளனர்.
0 Response to "அவுஸ்திரேலியாவை உலுக்கிய இரு இலங்கைத் தமிழர்களின் வங்கிக் காசட்டை மோசடி"
แสดงความคิดเห็น