வேட்டைக்காரன் வெற்றி சுவிஸ் இளையோர் பேரவைக்கு செருப்படி!1
வேட்டைக்காரன்’ திரைப்படத்தை வெற்றிப்படமாக்கியதற்காக, சன் குழுமத் தலைவர் கலாநிதிமாறனை சந்தித்த விஜய், தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்விஜய் நடித்துள்ள ‘வேட்டைக்காரன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து படத்தின் நாயகன் விஜய், தன்னுடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் சன் டிவி அலுவலத்துக்கு நேற்று சென்றார். பின்னர் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனை அவர் சந்தித்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். பதில் மரியாதையாக விஜய்க்கு கலாநிதி மாறன் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து விஜய் கூறுகையில், “என்னுடைய படங்களிலேயே மிகப் பெரிய ஓபனிங்கை வேட்டைக்காரன் தந்திருக்கிறது. அதற்காக கலாநிதி மாறனுக்கு நன்றி தெரிவித்தேன்” என்று கூறினார்.
வேட்டைக்காரன் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ‘சுறா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் சன்குழுமம் வாங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது
0 Response to "வேட்டைக்காரன் வெற்றி சுவிஸ் இளையோர் பேரவைக்கு செருப்படி!1"
แสดงความคิดเห็น