சுமார் 3லட்சம் வன்னி அகதிகளுக்கு வாக்குரிமையைப் பிரயோகிக்க முடியாமல் போகலாம்-கபே! // தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்தவர்களிடமிருந்து ஏராளமான வி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 3லட்சம் வன்னி அகதிகளுக்கு தமது வாக்குரிமையைப் பிரயோகிக்க முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் கபே அமைப்புத் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையாளரும் ஜனாதிபதி வேட்பாளர்கள் 22பேரும் சேர்ந்து அந்த அகதிகளின் வாக்குரிமையைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. “கபே” அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னகோன் இது தொடர்பாகக் கூறியவை வருமாறு: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலையொட்டி வன்னி அகதிகளில் சுமார் 20ஆயிரம் பேர் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். மீதி அகதிகள் இன்னும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் சுமார் மூன்று லட்சம் அகதிகளின் வாக்குரிமை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் தற்போதுள்ள பெரிய பிரச்சினை இந்த வாக்குரிமையைப் பாதகாப்பதுதான். இது தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை பற்றித் தெளிவில்லை. அந்த அகதிகளைப் பதிவுசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது, வாக்களிக்க வைப்பதற்கு இடங்கள் எவ்வாறு தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றன என்பவையெல்லாம் இன்னும் தெளிவாகவில்லை. இப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளர்கள் வாய்திறக்கவில்லை என்றே சொல்லலாம். அரசியல் கட்சிகளும் மௌனமாகவுள்ளன. தேர்தல் ஆணையாளரும், 22 வேட்பாளர்களும் ஒன்றிணைந்து கலந்தாலோசித்து அந்த அகதிகளின் வாக்குரிமையைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தல் வன்முறைகளை விடவும் இப்பிரச்சினை பெரும் பிரச்சினையாகவுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி அகதிகளின் வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
0 Response to "சுமார் 3லட்சம் வன்னி அகதிகளுக்கு வாக்குரிமையைப் பிரயோகிக்க முடியாமல் போகலாம்-கபே! // தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்தவர்களிடமிருந்து ஏராளமான வி"
แสดงความคิดเห็น