கடவுளின் குழந்தைகள் நிறுவனத்தினர் விஷேட தேவையுடைய ஒரு தொகுதிப் பிள்ளைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
கடவுளின் குழந்தைகள் நிறுவனத்தினால் இடம்பெயர்ந்து செட்டிகுளம் மெனிக்பாம் முகாமிலிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த விஷேட தேவையுடைய ஒரு தொகுதிப் பிள்ளைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கடவுளின் குழந்தைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி ஆனந்தகுமார் வடமராட்சியிலுள்ள பிரபல பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்ததுடன் அவர்களிற்கான கல்வி வசதி அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாகவும் இப்பிள்ளைகள் முதற்கட்டமாக புலோலியில் தங்கவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் இப்பிள்ளைகளின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும் என பெற்றோர்களிடம் தெரிவித்ததுடன் கடவுளின் குழந்தைகள் நிறுவனத்தில் ஒப்படைத்தாலும் தாம் அடிக்கடி புலோலிக்குச் சென்று பிள்ளைகளைப் பார்வையிடவுள்ளதாகவும் தெரிவித்தார். இப்பிள்ளைகள் எதிர்காலக் கல்வியிலும் உடல்நிலையிலும் சிறந்து விளங்குவதைத் தாம் கவனத்தில் எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை இப்பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதியளித்ததற்கு இணங்க பெற்றோர்கள் கடவுளின் குழந்தைகள் நிறுவனத்தினருடன் தமது பிள்ளைகளை அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Response to "கடவுளின் குழந்தைகள் நிறுவனத்தினர் விஷேட தேவையுடைய ஒரு தொகுதிப் பிள்ளைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!"
แสดงความคิดเห็น