கிளிநொச்சியில் இருந்து தங்கம் கடத்தி டபிள்கப் வாகனம் மதவாச்சியில் முடக்கம்? உயர்மட்ட அறிப்பை தொடர்ந்து வாகனம் விடுவிப்பு!

கிளிநொச்சியில் இருந்து தங்கம் கடத்தி வந்த வாகனம் ஒன்று மதவாச்சி சோதனை சாவடியில் இடைமறிக்கப்பட்டது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் டபிள்கப் நீல நிறவாகனம் மதவாச்சி சோதனை சாவடியில் வைத்து பொலிஸாரால் மறிக்கப்பட்ட வாகனம் மேலிடத்து உத்தரவுக்கு அமைய பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஈநியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தங்கம் கடத்தி வந்ததாக தெரிவிக்கப்படும் மேற்படி வாகனம் மதவாச்சியில் வைத்து பொலிஸ் குழு ஒன்றினால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதா என்று மதவாச்சி பொலிஸாரிடம் கேட்டதற்கு அப்படி ஒரு சம்பவம் இடம்பெறவில்லையே என்று தெரிவித்துள்ளனர்.
லங்கா ஈநியுஸ் செய்தி நிறுவனம் வாகனத்தின் விபரம் இலக்க தகடு விபரம் எல்லாவற்றையும் தெரிவித்தபோது, அப்படியொரு வாகனம் சந்தேகத்தின் பெயரில் மறிக்கப்பட்டதாகவும் அவ் வாகனத்தில் இருந்து எந்தவொரு தடையங்களும் சிக்கவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read Users' Comments (0)







