jkr

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக ரூபவதி கேதீஸ்வரன் நியமனம்


கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த திருமதி ரூபவதி கேதீஸ்வரன் பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவி வகித்து வரும் இவர் எதிர்வரும் திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்கவிருக்கின்றார்.

ஏற்கனவே கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக சேவையாற்றிய எஸ்.வேதநாயகம் அவசரகால சட்ட விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எமல்டா சுகுமார் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபராகவும் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத் தக்கது.

அதேவேளை, இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த எம் தயாபரன் மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வுத் திட்டப் பணிப்பாளராகக் கடமையேற்றுள்ளார்.ஏற்கனவே இப்பதவியை வகித்த எஸ். சிவநாதன் மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக ரூபவதி கேதீஸ்வரன் நியமனம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates