jkr
แสดงบทความที่มีป้ายกำกับ நியூசிலாந்து แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ நியூசிலாந்து แสดงบทความทั้งหมด

நியூசிலாந்தில் இந்திய டாக்சி டிரைவர் குத்திக் கொலை


நியூசிலாந்தில் இந்தியாவைச் சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தப் போவதாக நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ கூறியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஹிரென் மோகின் (39), 6 ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார். ஆக்லாந்து பகுதியில் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

டாக்சி டிரைவராக வேலை செய்துவந்த இவர், மவுன்ட் ஈடன் பகுதியில் நேற்று காலை குத்திக் கொலை செய்யப்பட்டார். கட்டணம் தொடர்பாக பயணியுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டதாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கழுத்து மற்றும் உடலின் பல பகுதிகளில் கத்தியால் குத்திய மர்ம நபர், ஹிரெனின் காரை அருகில் உள்ள மரத்தில் மோதவிட்டு விபத்து போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தார்.

பொலிசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியைத் தேடி வருகின்றனர். இதற்கிடையே இச்சம்பவத்துக்கு நியூசிலாந்தின் டாக்சி உரிமையாளர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டாக்சி டிரைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், டாக்சிகளில் பாதுகாப்பு கெமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து பிரதமர் ஜான் கீ கூறுகையில்,

"கடந்த 14 மாதங்களில் டாக்சி டிரைவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் 2 முறை நடந்துவிட்டன. அரசு இதை கண்டுகொள்ளாமல் இருந்துவிடாது. டாக்சிகளுக்கான கட்டாய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு நிச்சயம் பரிசீலிக்கும்' எனக் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் நியூசிலாந்திலும் இச்சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஆஸி. கப்பலிலிருந்த இலங்கையரை ஏற்க நியூஸி. இணக்கம்


அவுஸ்திரேலிய ஓஷியானிக் வைக்கிங் கப்பலில் இருந்த 78 இலங்கைத் தமிழர்களில் எஞ்சியிருந்த 13 பேரையும் மீள்குடியேறலுக்காக ஏற்றுக் கொள்ள நியூசிலாந்து அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியக் கப்பலான ஓஷியானிக் வைக்கிங் கப்பல் மூலம் இந்த குடியேறிகள் காப்பாற்றப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த 78 பேரில் ஏற்கனவே 50க்கும் மேற்பட்டோர் அவுஸ்திரேலியாவிலும் கனடாவிலும், குடியேற்றப்பட்டுள்ளனர்.

எஞ்சியிருந்த 13 பேருக்கே நியூசிலாந்து குடியேற்ற அனுமதியை வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியா பிரதமருக்கும் நியூஸிலாந்து பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த இணக்கத்தை நியூஸிலாந்து வெளியிட்டுள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நியூஸிலாந்து அருகே கடலுக்கடியில் பூகம்பம்


வெலிங்டன்: நியூஸிலாந்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுக்கு அருகே கடலுக்கடியில் இன்று காலை பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதாரங்கள் எதுவுமில்லை.

உள்ளூர் நேரப்படி, காலை 11.47 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் , ஆக்லாந்தில் இருந்து வடகிழக்கில் 730 கி.மீ தூரத்திலும், ரவுல் தீவிலிருந்து தென்மேற்கே 350 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டிருந்ததாக நியூஸிலாந்து புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அகதிகளுக்கு நியூசிலாந்து உதவவேண்டும் என கோரிக்கை


இந்தோனேசிய கடற்பரப்பில் 78 இலங்கை அகதிகளுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள கப்பலை ஏற்க நியூசிலாந்து அரசாங்கம் மறுத்துள்ள நிலையில்,ஆபத்தான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு நியூசிலாந்து அரசாங்கம் உதவவேண்டும் என அந்நாட்டின் அகதிகளுக்கான பேரவையின் தலைவர் நாகலிங்கம் இராசலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அகதிகள் தொடர்பாக அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு இராசலிங்கம் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் அகதிகளுக்கான பாதுகாப்பை நியூசிலாந்து அரசாங்கத்துக்கு வழங்க முடியும் என்றும் ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அகதிகள் தொடர்பாக முறையான கொள்கையை நியூசிலாந்து பேணி வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், அவுஸ்திரேலியா இதற்கு தீர்வினை முன்வைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அகதிகளை பொறுப்பேற்க மறுக்கும் நியூஸிலாந்து


இந்தோனேசிய கடற்பரப்பில் ஓசன் வைக்கிங் எனப்படும் சுங்க கப்பலில் உள்ள இலங்கை அகதிகள் 78 பேரையும் அவுஸ்திரேலிய வேண்டுகோளுக்கிணங்க தன்னால் பொறுப் பேற்க முடியாதென நியூஸிலாந்து தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினை குறித்து தங்கள் அரசாங்கத்துடன் அவுஸ்திரேலியா பேசியதை உறுதிப்படுத்திய நியூஸிலாந்து குடிவரவு அமைச்சர் ஜோநாதன் கோல்மன், ஏற்கெனவே நியூஸிலாந்துக்குள் நுழைய முறைதவறி பாய்வதற்கு முயற்சி செய்வோரை சமாளிப்பதில் போதும் போதும் என்றாகிவிட்டது என்று கூறினார். அவுஸ்திரேலியாவை நோக்கி சென்று கொண்டிருக்கையில் கடலில் மூழ்கிய படகு ஒன்றிலிருந்து காப்பாற்றப்பட்டு 3 வாரங்களின் பின்னர் கரையிறங்க மறுக்கும் அகதிகள் இந்தோனேசிய தடுப்புக் காவல் முகாம் ஒன்றிலேயே விசாரிக்கப்பட வேண்டும். ஆனால், ஓசானிக் வைக்கிங் அகதிகளுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதன் கடற்பரப்பிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அச்சொட்டாக ஆயிரக்கணக்கான அகதிகள் தரித்து நிற்கிறார்கள் என்று கோல்மன் தெரிவித்தார். ஓசானிக் வைக்கிங் கப்பலைப் போன்று ஒவ்வொரு சம்பவத்தையும் தனித்தனியாக அணுகுவதனால் உரிய பயன் கிடைக்கும் என்று நியூஸிலாந்து அரசாங்கம் நம்பவில்லை என்றும் அவர் கூறினார்.

இவ்வாறு நடந்து கொள்வது எதிர்காலத்தில் எழக்கூடிய இது போன்ற சம்பவங்களுக்கு தீர்வுகாண உதவமாட்டாது என்றும் நியூஸிலாந்து அமைச்சர் கோல்மன் தெரிவித்தார். நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, இலங்கை மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்திலுள்ள 39 நாடுகள் கைச்சாத்திட்ட பல்தர திட்டமான பாளி முறைமையே, மக்கள் சட்டவிரோதமாக வேற்று நாடுகளுக்கு கடத்தப்படுவது மற்றும் படகு மக்கள் போன்ற பரந்த அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சிறந்த வழியாகும் என்று தமது அரசாங்கம் நம்புவதாகவும் கோல்மன் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates