jkr
แสดงบทความที่มีป้ายกำกับ பா.அரியநேத்திரன் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ பா.அரியநேத்திரன் แสดงบทความทั้งหมด

மட்டு. அம்பாறை எல்லையில் தொடரும் சட்டவிரோத சிங்கள குடியேற்றங்கள்: அரியநேத்திரன் பா.உ.


மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவிலியாமடுவில் வெளி மாவட்டத்தவர்களின் சட்ட விரோத சிங்கள குடியேற்றங்கள் மீண்டும் தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம், கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட குறித்த கிராமத்தில் ஏற்கனவே அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 170 சிங்கள குடும்பங்கள் சட்ட விரோதமாக அரச காணிகளில் குடியேறியிருந்தன.

இக் குடும்பங்கள் தற்போது 230 ஆக அதிகரித்துள்ளன எனக் கூறும் அரியநேத்திரன், மேற்படி குடும்பங்களில் 60 குடும்பங்களுக்கு குடியேற்ற அனுமதிப் பத்திரம் வழங்குமாறு அம்பாறை அரசாங்க அதிபர், கொக்கட்டிச்சோலை பிரதேச செயலாளரைக் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் கவனத்திற்குத் தான் கொண்டு வந்துள்ள போதிலும் சாதகமான பதில்கள் எட்டவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்களின் கருத்துக்கள் பற்றி பா.அரியநேந்திரன் விளக்கம்


தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வெளியிடும் மாறுபட்ட கருத்துக்களாலும் செயற்பாடுகளினாலும் தமிழர்கள் குழப்பமடைந்திருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களினால் தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையானது பேரினவாத செயற்பாடுகளுக்கு தீனிபோடும் நடவடிக்கையாகவே கருத வேண்டியிருப்பதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி - 03, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் - 01, டெலோ - 04 , ஈ.பி.ஆர்.எல்.எப் - 02 என கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரும் கட்சிசாராத நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12பேரும் என மொத்தம் 22பேர் அங்கம் வகிக்கின்றனர். 2004 ஏப்ரல் முதல் இன்றுவரை குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடனும் ஒற்றுமையுடனும் செயல்பட்டு வந்தனர். தற்போது ஜனாதிபதித் தேர்தல் அறிவித்த நாளிலிருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் விதம், செயற்பாடுகள் தன்னிச்சையான முடிவுகளினால் குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன்காரணமாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஒருமித்த தீர்மானம் எடுக்க முடியாதநிலை ஏற்பட்டுவிடுமோ என குழப்பமானநிலை ஏற்பட்டுள்ளதை சகலரும் புரிந்துகொள்ள வேண்டும். ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்லது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இருவரில் ஒருவர்தான் தெரிவாவார்கள் இருவரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பௌத்த சிங்களவர்கள். இந்நிலையில் வீணான வேண்டத்தகாத செயல்பாடுகளையும் கருத்து முரண்பாடுகளையும் விட்டு தமிழினத்தின் நிரந்தர அரசியல்தீர்வு மற்றும் அரசியல் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு ஒற்றுமையுடன் செயல்படுவதே இன்றைய தேவையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சிவாஜிலிங்கத்தின் முடிவு த.தே.கூ. உடன் தொடர்புடையதல்ல : அரியநேத்திரன்


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எடுத்துள்ள முடிவானது அவரது தனிப்பட்ட முடிவேயன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புடையதல்ல என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதில்லை என ஏற்கனவே தீர்மானித்துள்ள போதிலும் அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் (டெலோ) சுயேட்சையாகப் போட்டியிட தீர்மானித்து இன்று தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மாறுபட்ட கருத்துக்கள் தோன்றியுள்ள நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எடுத்துள்ள இந்த முடிவானது அவரது தனிப்பட்ட முடிவேயன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புடையதல்ல என அரியநேத்திரன் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

ஏற்கனவே இதற்கு முன்னோடியாக டெலோ அமைப்பில் மத்திய குழு உறுப்பினர் பதவி உட்பட தான் வகித்து வந்த முக்கிய பதவிகளிலிருந்து விலகிக் கொள்வதாக அக்கட்சிக்கு நேற்று அவர் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

அதேவேளை இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் பிரசன்னா இந்திரகுமாரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இது தொடர்பாக நாளை தமது கட்சி கூடி ஆராயவிருப்பதாகப் பதிலளித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates