jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ரணில்விக்கிரமசிங்க แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ரணில்விக்கிரமசிங்க แสดงบทความทั้งหมด

குமரன் பத்மநாதன் விசும்பாவயில் வைக்கப்பட்டு, அவருடன் அரச தரப்பினர் விருந்து உண்கின்றனர்: ரணில்


இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது, வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்த தமிழீழ விடுதலைப்புலிகளை படையினர் சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்திய கே பி எனப்படும் குமரன் பத்மநாதனை விசும்பாயவில் வைத்துள்ளதாகவும், அவருடன் அரசதரப்பினர் ஒன்றாக இருந்து மது அருந்தி விருந்துண்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்களை படையினர் சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்தியுள்ள குமரன் பத்மநாதன் மீது அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது எனவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

படைத்தரப்பு காவலில் உள்ள கே பி தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரக்கால சட்டத்தின் கீழ் காவலில் உள்ள கே பியிடம் அரசாங்கம், விசாரணைகளை நடத்தமுடியும். பதிலாக அவர்கள் கே பியை விசும்பாயவில் வைத்துள்ளதாகவும் அவருடன் ஒன்றாக இருந்து மது அருந்துவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் வெள்ளைக்கொடிகளை ஏந்திவந்தார்கள் எனக்கூறிய இரண்டாவது மனிதர்தான் வெளியுறவுத்துறையின் முன்னாள் செயலாளர் பாலித கோஹன.

அவரிடமும் இது தொடர்பாக விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ளலாம் என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்தவர்கள், சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னர் பிரபாகரனை போல மரண விசாரணைகளை நடத்தியிருக்கலாம். ஆனால் அது இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புலிகளால் தோற்றேன்: ரணில்


இலங்கையில் 2005-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தாம் தோல்வியுற்றதற்கு விடுதலைப் புலிகளே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.


ஐரோப்பாவிலிருந்து இயங்கும் ஜி டி.விக்குப் பேட்டியளித்தபோது இதை அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா வெளியேறியதில் தமக்குப் பங்கிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் ரணில் மறுத்திருக்கிறார்.


கருணா பிரிந்தது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் ஏற்பட்ட பிரச்னை என்று குறிப்பிட்டுள்ள ரணில், அதற்காகத் தம்மீது குற்றம்சுமத்துவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மாவில் ஆறு பிரச்னையே விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்கான காரணமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாம் ஆட்சிக்கு வந்தால் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்போம் -எதிர்க்கட்சித் தலைவர!


நாம் ஆட்சிக்கு வந்தால் தோட்டத்தொழிலாளர் சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதோடு தோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற சம்பளத்தினைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜெனரல் பொன்சேகாவை ஆதரித்து நோர்வூட்டில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 500ரூபா சம்பள உயர்வுக்கோரி தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டம் குறித்து எமக்கு நன்கு தெரியும். ஆனாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட சம்பளம் கிடைக்கவில்லை. இவ்வாறானதொரு நிலையில் நாம் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினைப் பெற்றுக் கொடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து வருகின்றோம். இந்நிலையில் தோட்டப்பகுதிகளில் வீடில்லாத பிரச்சினை பெரும்பிரச்சினையாக உள்ளது. இதனை தீர்க்கின்ற பட்சத்திலேயே இம்மக்கள் நிம்மதியாக வாழமுடியும். இந்நிலையில் தோட்டப்பகுதிகளில் கல்விப்பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாதுள்ளன. இன்று அமைச்சர் சந்திரசேகரனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைவரில்லை. மாறாக பஷில் ராஜபக்ஷதான் தலைவராக இருக்கின்றார். பூசா முகாமில் சிறைப்படுத்தப்பட்ட மலையக இளைஞர் யுவதிகளை விடுதலை செய்வது தொடர்பில் கோத்தபாயவிடம் ஏச்சு வாங்கிய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு முன்வந்துள்ளார். அரசாங்கத்துடன் ஒட்டி உறவாடுகின்ற இந்தத் தலைவர்களால் இந்த மக்களுக்கு எவ்வித சேவையும் கிடைப்பதில்லை. நாம் ஆட்சியில் இருந்தபோது மலையகத்தமிழ் மக்களுக்கு பிராஜாவுரிமை வழங்குவதற்கு முன்வந்தபோது அப்போது பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அத்தகையவருக்கு எவ்வாறு மலையகத்தமிழ் மக்கள் வாக்களிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates