jkr
แสดงบทความที่มีป้ายกำกับ லண்டன் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ லண்டன் แสดงบทความทั้งหมด

மனித குண்டாக விரும்பும் சிறுவர்கள்! : லண்டனில் அதிர்ச்சித் தகவல்


இங்கிலாந்தில் வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எனவே, இவை எங்கிருந்து உருவாகின்றன என்று இங்கிலாந்து பொலிசார் ஆய்வு நடத்தினர்.

அதன்போது, இங்கிலாந்தில் ஒரு பிரிவைச் சேர்ந்த சிறுவர் கள் மனித குண்டுகளாக மாற விரும்புவது தெரிய வந்தது. அவர்கள் 7 முதல் 10 வயதினர். இது லண்டனைப் பெரும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

இவர்கள் ஆரம்பப் பள்ளிகளில் கல்வி பயின்று வருபவர்கள். குறிப்பிட்ட சில இணையத்தளங்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் இவர்கள் மூளைச் சலவை செய்யப்படுவதும் தற்போது தெரிய வந்துள்ளது.

பாடப் புத்தகங்களில், "நான் மனித குண்டாக மாற விரும்புகிறேன்..." என்று இவர்கள் எழுதி வைக்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இது குறித்து இவர்களின் பள்ளி ஆசிரியர்களே வருத்தப்படுகின்றனர்.

இந்தத் தகவலை 'தி டெலி கிராப்' என்ற ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இதை தொடர்ந்து வன்முறை எண்ணம் கொண்ட 228 இளைஞர்கள் மற்றும் 'டீன்ஏஜ்' வயதினரின் மனதை சீர்படுத்தி நல்வழிக்குத் திருப்பும் நடவடிக்கையில் இங்கிலாந்து அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

திருட்டில் ஈடுபட்ட இலங்கையர் மூவர் பிரித்தானியாவில் ஆயுதங்களுடன் கைது!


லண்டன் நோர்த்தம்ரன் டஸ்ரன்(Duston) Lodge Farm industrial estate பகுதியில் அமைந்திருந்த காஸன் கரி(cash and carry ) வர்த்தக நிலையத்தில் ஆயுதங்கள் சகிதம் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய செய்தி ஸ்தாபனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி வர்த்தக சந்தையின் மனேஜரை கைத்துப்பாக்கி காண்பித்து மிரட்டி பணம் பறிக்க முயன்றபோதும், திருடர்களின் கைவரிசை பலனிக்காத நிலையில் அங்கிருந்த கை தொலைபேசியை எடுத்துக்கொண்டு டஸ்ரன் பகுதியில் இருந்து தப்பி சென்றபோது மோட்டார் வே (நெடுஞ்சாலை) 15 ஏ சந்தி பகுதியில் வைத்து 3வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் ஹெலிகப்டரின் உதவியுடன் வெள்ளை வான் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்கள் மூவரும் இலங்கை பிரஜாவுரிமை கொண்டவர்கள் என்றும் பிரித்தானிய செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளதுடன். கொள்ளையர்கள் தற்போது நோர்த்தம்ஸ்ரன் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாகிவருவதாகவும் பிரித்தானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சைக்கிள் ரிக்ஷாவுக்கு பிரிட்டனில் மவுசு


லண்டன்:பிரிட்டனின் முக்கிய நகரங்களில் சமீபகாலமாக சைக்கிள் ரிக்ஷாக்களை அதிகமாக காண முடிகிறது. இதன்மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்வரை, சைக்கிள் ரிக்ஷா போக்குவரத்து அதிகம் இருந்தது. ஆட்டோ ரிக்ஷாக்கள் வந்தபின், இந்தியாவில் சைக்கிள் ரிக்ஷாக்களை அதிகம் காண முடிவது இல்லை.ஆனால், சமீபகாலமாக பிரிட்டனில் சைக்கிள் ரிக்ஷாக்களை அதிகமாக காண முடிகிறது. லண்டன், பிரைட்டன், வொர்செஸ்டெர்சைர், லைசெஸ்டர் உள்ளிட்ட நகரங்களின் தெருக்களில், சுற்றுலா பயணிகள் சைக்கிள் ரிக்ஷாக்களில் அமர்ந்து செல்வதை அதிகம் காண முடிகிறது.தற்போது பிரிட்டன் கடலோர பகுதியான கிரோட் யார்மவுத் நகரத்தில் மிக அதிக அளவில் சைக்கிள் ரிக்ஷாக் கள் உள்ளன. கிரேட் யார்மவுத்தை சேர்ந்த கைல் கியார்னி என்ற இளைஞர் கூறியதாவது:சில மாதங்களுக்கு முன், நான் வேலை பார்த்து வந்த நிறுவனம் என்னை வேலையை விட்டு நீக்கி விட்டது. அப்போது தான் சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் எண்ணம் வந்தது. ஒரு சைக்கிள் ரிக்ஷாவை வாங்கி ஓட்டினேன். குறைந்த கட்டணம் என்பதால், சுற்றுலா பயணிகள் விரும்பி வருகின்றனர். தற்போது பத்துக்கும் மேற்பட்ட சைக்கிள் ரிக்ஷாக்களை வாங்கி, பலருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளேன். சைக்கிள் ரிக்ஷா மூலம், கிரேட் யார்மவுத் நகரில் மட்டுமல்லாமல், பிரிட்டனின் மற்ற நகரங்களிலும் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்றும் உள்ளது. சைக்கிள் ரிக்ஷாவுக்கு பெட்ரோல் போன்ற எரிசக்தி எதுவும் தேவை இல்லை. இதனால், சுற்றுச் சூழலுக்கு மிகவும் உதவுகிறது. இவ்வாறு கியார்னி கூறினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இங்கிலாந்து பிரதமர் இல்லத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாட்டம்

<, - இங்கிலாந்து பிரதமர் இல்லத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாடப்பட்டது.

நேற்று மாலை லண்டனில் உள்ள 10, டவுனிங் தெருவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கொண்டாட்டத்தின்போது வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பிரதமர் கோர்டான் பிரவுன் குத்துவிளக்கேற்றினார்.

'இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி. இனி வருடந்தோறும் பிரதமர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடப்படும்' என்று கோர்டான் பிரவுன் குறிப்பிட்டார்.

அப்போது இந்தியர்கள் சார்பில் இங்கிலாந்து பிரதமருக்கு வடக்கு லண்டனில் உள்ள சுவாமி நாராயண் கோயிலின் உருவப் பொம்மை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இந்தியத் தூதர் நளின் சூரி, லண்டன் வாழ் இந்தியத் தொழிலதிபர் சுவராஜ் பால், ஓவியர் எம்.எஃப். ஹூசைன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

லண்டன் உண்ணாவிரதப் போராட்டத்தில் மோசடி : பரமேஸ்வரன் மறுப்பு


இலங்கையில் யுத்தம் உச்சகட்டத்தை எட்டியிருந்த சமயத்தில், உடனடியாக போர்நிறுத்தம் வேண்டும் என்று கோரி லண்டனில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய பரமேஸ்வரன், மெக் டோனால்ட்ஸ் பன்களை சாப்பிட்டதாக பிரிட்டிஷ் ஆங்கிலப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இதனை பரமேஸ்வரன் மறுத்துள்ளார்.

இது ஒரு திட்டமிட்ட சதி என்றும் இந்த செய்திகளை வெளியிட்ட இரண்டு நாளிதழ்களுக்கு எதிராக தான் வழக்குத் தொடரப் போவதாகவும் உண்ணாவிரத சர்ச்சையில் சிக்கியுள்ள பரமேஸ்வரன் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் பன் சாப்பிட்டதைப் ரகசியப் பொலிஸ் கெமராக்கள் படம்பிடித்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்களை மேற்கொள்காட்டி மேற்படி பிரிட்டிஷ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

லண்டனில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பெரிய அளவிலான போராட்டங்கள் நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு முன்பாக நடைபெற்றன.

இந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாகவே பரமேஸ்வரனி உண்ணா விரதப் போராட்டமும் இடம்பெற்றது.

இந்தப் போராட்டங்களுக்குப் பாதுகாப்பளிக்க பிரிட்டிஷ் பொலிசார் சுமார் 7 மில்லியன் பவுண்டுகளைச் செலவிட்டதாகக் கூறப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜட்டியுடன் பிட்சா வாங்க டாக்சி பிடித்த மாஜி அதிபர்

லண்டன் : ரஷ்ய அதிபர்களில் மொடாக்குடியர், மறைந்த போரிஸ் எல்சின்; அமெரிக்க அதிபர் மாளிகையில் விருந்தினராக தங்கியபோது, நள்ளிரவில் ஜட்டியுடன் கிளம்பி, பிட்சா வாங்கிச் சாப்பிட டாக்சி பிடிக்கப் போய்விட்டார்.


அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளின்டனின் நண்பர், வரலாற்று ஆய் வாளர் டெய்லர் பிராஞ்ச்; கிளின்டனுடன் நடந்த சந் திப்புகள், பேச் சுக்களை, 79 முறை "டேப்' செய்து வைத்துள்ளார். அதை இப்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார். கிளின்டன் காதலித்த மோனிகா லெவன்ஸ்கி விவகாரத்தில் ஆரம் பித்து, பல சம்பவங்களை, டெய் லர் தன் புத்தகத்தில் விவரித்துள்ளார். எல்சினின் மதுப்பழக்கம் பற்றிய ஒரு சம்பவத்தை அவர் கூறியுள்ளார்.


எல்சின் மொடாக்குடியர்; தினமும் குடிக்காமல் இருக்க மாட்டார். எப்போதும் போதையில் தள்ளாடியபடி தான் இருந்திருக்கிறார். கடந்த 1995ல், அமெரிக்க அதிபர் கிளின்டனை சந்தித்தார். அதிபர் மாளிகையில் விருந்தினராக அவர் தங்கினார். போதையில் நள்ளிரவில் எழுந்து கொண்டார். அப்போது அவர் வெறும் ஜட்டி அணிந்திருந்தார். மேல் சட்டை யை போட்டுக்கொண்ட அவர், பாதுகாவலர்களுக்கு எப்படியோ "டிமிக்கி' கொடுத்து விட்டு, சாலையில் நடந்தார்.சில நிமிடங்களில் இதை அறிந்த பாதுகாவலர்கள் தேடிய போது, சாலையில், டாக்சியை வழிமறித்து டிரைவருடன் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவரிடம் சென்று கேட்டபோது குழறியபடி, "எனக்கு பிட்சா வேணும். அதனால்தான் போய்க் கொண்டிருக்கிறேன்' என்று, ரஷ்ய மொழியில் கூறினார்.அவரை ஒரு வழியாகச் சமாதானப்படுத்தி, அதிபர் மாளிகைக்கு அழைத்து வந்தனர் பாதுகாவலர்கள். மறுநாள் காலையில், இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல, கோட்டு சூட்டுடன் கிளின்டனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது, பலரையும் வியக்க வைத்தது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates