jkr
แสดงบทความที่มีป้ายกำกับ வவுனியா இடைத்தங்கல் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ வவுனியா இடைத்தங்கல் แสดงบทความทั้งหมด

அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களினால் ஆயுதங்களை ஏந்தி உயிரை மாய்த்துக்கொள்ள இருந்த எம்மைப் பாதுகாத்து அச்சமின்றி வாழும் சூழலை ஏற்படுத்தியவா; ஜனாதிபதியே


நிவாரண கிராமங்களிலுள்ளோர் விபரிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே தமது உயிரும், பிள்ளைகளும் பாதுகாக்கப்பட்டதுடன் தற்பொழுது அச்சமின்றி வாழும் சூழல் ஏற்பட்டுள்ளதாக இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்கள் தெரிவித்தனர்.

வெறுமனே உடுத்த உடையுடன் அச்சத்துக்கு மத்தியில் வந்த எமக்கு இன்று அரசாங்கம் சகல வசதிகளையும் செய்து தந்துள்ளது. இதற்காக நாங்கள் ஜனாதிபதிக்கு என்றும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர்கள் கூறினார்கள்.

அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களினால் ஆயுதங்களை ஏந்தி உயிரை மாய்த்துக்கொள்ள இருந்த எம்மைப் பாதுகாத்து புனர்வாழ்வு வழங்கி சிறந்த எதிர்காலத்தை காண்பித்த ஒரே தலைவர் ஜனாதிபதி என்று பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வரும் 18 வயதுடைய கந்தையா சசிகுமார் தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களுக்கும், புனர்வாழ்வு நிலையங்களுக்கும் கொழும்பிலிருந்து ஊடகவியலாளர் குழுவொன்று கடந்த வாரம் அழைத்துச் செல்லப்பட்டது. இதன் போதே நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களும், புனர்வாழ்வு பெற்று வரும் இளைஞர், யுவதிகளும் இந்த கருத்துக்களை தெரிவித்தனர்.

கிளிநொச்சி, பூநகரியைச் சேர்ந்த 31 வயதுடைய செல்லையா விசியேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், உயிரையும், ஒரு சில உடுதுணிகளையும் தவிர சகலதையும் இழந்து வந்த எமக்கு இன்று எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

ஆறு மாத காலமாக எனது மனைவி, இரு குழந்தைகளுடன் இந்த கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளேன். எந்த பிரச்சினைகளும் இன்றி வாழ்கின்றோம். எம்மில் பலர் தற்பொழுதுதான் மிகவும் சிரித்த முகத் துடனும் சந்தோசத்துடனும் காணப்படு கின்றனர்.

இதற்கு பிரதான காரணம் தங்களது பிள்ளைகளை பிடித்துச் செல்ல எவரும் வரமாட்டார்கள். எமது பிள்ளைகள் எம் முடனேயே இருக்கின்றனர் என்பதனாலாகும் என்றார். புனர்வாழ்வு பெற்று வரும் கந்தையா சசிகுமார் கருத்துத் தெரிவிக்கையில், விளையாடுவதற்காக கிரிக்கெட் மட்டையை கையில் எடுக்க வேண்டிய நாம் இதுவரை துப்பாக்கிகளை ஏந்தி இருந்தோம்.

உலகில் எத்தனையோ விடயங்களை அனுபவிக்க வேண்டிய நாங்கள் உலகமே தெரியாதவர்களாகவும், எமது உறவுகளை பறிகொடுத்தவர்களாகவும் இருந்தோம். இன்று கணனி உட்பட தொழில் துறைக்கு தேவையான பல்வேறு பயிற்சிகள் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் எமக்கு சிறந்த எதிர்காலம் உண்டு என்றும் குறிப்பிட்டார்.

புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு கணனி, தையல், மேசன், தொழிற் பயிற்சி போன்ற பயிற்சிகளும், குறைந்த வயதுள்ளவர்களுக்கும் கற்றல் வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டுள்ளன
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

செட்டிகுளத்தில் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்


வவுனியா, செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் கடந்த சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3சிறுவர்கள் மற்றும் 2பெண்கள் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இச்சம்பவத்தினால் அந்த முகாமில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த குறித்த 5பேரும் முகாமிலிருந்து விறகு சேகரிக்கச் சென்றபோதே இராணுவத்தினர் சுற்றிவளைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இராமநாதன் முகாமிலிருந்து சிலர் அடுத்துள்ள ஆனந்தகுமாரசாமி முகாமுக்கு செல்ல முற்பட்டபோது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு செல்ல முயன்றவர்களைப் படையினர் தடுத்தபோது, முகாமிலிருந்தவர்கள் படையினர்மீது கற்களை எறிந்தனர் எனவும், அதையடுத்துத் தற்பாதுகாப்புக்காக படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினரெனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். முன்பும் ஓர்முறை இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ்மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் படையினர் செய்யும் போது அதற்கான காரணங்கள் அடுக்கடுக்காக முன்வைக்கப்படும். ஆனால் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் படையினர் இவ்வாறான அதிகாரத்தைக் கையிலெடுத்து பொதுமக்கள் மீது சுடும் சூழல் நிலவுவதுமில்லை. அவ்வாறான சூழலில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளும் பாதுகாப்பு தரப்பினர் மீது பொதுமக்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் எடுக்கும் நடவடிக்கை கடுமையானதாக இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை ஆர்ப்பாட்டங்களின் போது ஊர்வலங்களின் போதும் தமிழ்ப் பிரதேசங்களிலேயே கண்மூடித் தனமான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வவுனியா நிவாரண கிராமங்களிலிருந்து 6222 சா.தர பரீட்சார்த்திகள் தோற்றம்


க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருந்து இம்முறை 6222 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அவர்களுக்கென 51 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இப்பரீட்சைக்கு நிவாரணக் கிராமங்களிலிருந்து 1310 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உட்பட 6222 பேர் தோற்றுகின்றனர். இது தவிர வவுனியா மாவட்ட பாடசாலைகளில் 5611 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

இவர்களுக்கென 51 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தமக்குரிய அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறு வவுனியா வலயக் கல்வி பணிப்பாளர் ரஞ்ஜனி ஒஸ்வேர்ல்ட் தெரிவித்துள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வவுனியா முகாம்களில் இன்று முதல் சுதந்திரமான நடமாட்டம்


வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் இன்று முதல், சுதந்திரமான முறையில் செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் அந்த மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படும் போது படையினர் எவ்வாறான கட்டுப்பாடுகளை விதிப்பர் என்ற விடயங்கள் தெரியவரவில்லை.

குறித்த மக்கள், தமது முகாமில் இருந்து ஏனைய முகாம்களுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவார்களா? அல்லது, ஏனைய வெளிப்பிரதேசங்களுக்கு அனுமதிக்கப்படுவார்களா? என்ற விடயங்கள் தெரியவரவில்லை.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இராணுவத்தினரால் வவுனியாவில் தமிழ்ச் சிறுமிகள் கற்பழிப்பு


வவுனியா தடுப்பு முகாம்களில் பணியாற்றுகின்ற இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர், தமிழ்ச் சிறுமிகள் பலரை கற்பழித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
14, 15, மற்றும் 16 வயதான மூன்று தமிழ்ச் சிறுமிகள் தாங்கள் கற்பழிக்கப்பட்டதை வவுனியா நீதிபதி முன் கடந்த அக்டோபர் மாதம் கூறியுள்ளனர்.

பல கற்பழிப்புகள் தடுப்பு முகாம்களின் வலயம் 2 மற்றும் வலயம் 3 ஆகியவற்றில் நடந்தாலும், வவுனியா மருத்துவமனையில் வைத்து 14 வயதான மனநிலை குன்றிய சிறுமி ஒருவரையும் ராணுவம் கற்பழித்துள்ள விடயம் தெரியவந்துள்ளது.

புலிகள் இயக்கத்தில் இருந்ததாக கூறப்பட்ட 17 வயதான சிறுமி ஒருவரை புலனாய்வு பிரிவினர் கற்பழித்துள்ளதோடு, அச்சிறுமியை புலிகளை அடைத்து வைத்துள்ள சிறைக்கு அனுப்புவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

பின்னர் அச்சிறுமி தடுப்பு முகாமுக்கு அனுப்பட்டார். அந்த தடுப்பு முகாம்களில் உள்ள 17 மற்றும் 19 வயதான சிறுமிகளும் ராணுவ அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும், கடந்த ஜூலை மாதத்தில் காயப்பட்ட பெண்கள் பதவியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்த பெண்களை சிங்கள ராணுவத்தினர் பார்க்க வேண்டும் என்பதற்காக, சிங்கள் தாதியர் அப்பெண்களை நிர்வாணமாக்கி ஹோஸ் பைப்புகளைப் பயன்படுத்தி குளிப்பாட்டியதாக நேரில் கண்ட சாட்சியின் மூலம் தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமது கணவன்மாரை ராணுவம் எங்கே தடுத்து வைத்துள்ளார்கள் எனத் தெரியாமல் இன்னல் பட்டுக்கொண்டிருந்த பல பெண்களை, மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டிருந்த உயர் பணியாளர் ஒருவர் தகாத முறையில் பயன்படுத்தியதாகவும் பல தகவல்கள் கூறுகின்றன.

கடந்த மே மாதத்தில் தடுப்பு முகாமுக்கு அருகே கண்டெடுக்கப்பட்ட மூன்று தமிழ்ப்பெண்களின் உடல்கள் வவுனியா மருத்துவமனையில் கையளிக்கப்பட்டன. அந்த உடல்களில் கடித்ததற்கான காயங்களும், பாலியல் துன்புறுத்தலுக்கான அறிகுறிகளும் இருந்ததாக சாட்சிகள் கூறியுள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தென்னாபிரிக்க அமைச்சர் செட்டிகுளம் விஜயம்


இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் மயிட் நோகோனா மஷபான், செட்டிகுளம் நிவாரணக்கிராமத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்தார்.

வவுனியா அரச அதிபர் பீ எம் எஸ் சாள்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் தென்னாபிரிக்க அமைச்சரை வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் வன்னிப் பாதுகாப்புப் படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும் கலந்துகொண்டார்.

நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களை மீளக் குடியமர்த்தல் மற்றும் அவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் குறித்து வவுனியா அரச அதிபர் பீ எம் எஸ் சாள்ஸ் தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சருக்குத் தெளிவுபடுத்தினார்.

இதேவேளை மலேஷியாவிலிருந்து வந்திருந்த விசேட தூதுக் குழுவினரும் நேற்று மாலை செட்டிகுளம் இடம்பெயர்ந்தோர் முகாமைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அடைமழை காரணமாக முகாம்களில் இயல்புநிலை பாதிப்பு


தற்போது பெய்துவருகின்ற அடை மழை காரணமாக வவுனியா மனிக்பாம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்ததாலும், தூவானம் காரணமாகவும் கூடாரங்களில் இருக்கவோ படுக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பெரும்பாலான மக்கள் முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கல்விக்கூடங்கள், பொது மண்டபங்கள் என்பவற்றில் பொழுதைக் கழிக்க நேர்ந்துள்ளதாக அங்கிருந்து மீள்குடியேற்றத்திற்காக வருகின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

முகாம்களில் இருந்து மீள்குடியேற்றத்திற்காக மழையென்றும் பாராமல் இரவோடு இரவாக மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்குரிய மாவட்டங்களின் பொது இடங்களில் இறக்கி விடப்படுகி்ன்றனர். இதன்போது மழை காரணமாக பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூட்டை முடிச்சுகளுடன் வரும் இவர்கள் உரிய பயண முன்னேற்பாடுகள் இல்லாததனாலும், பலருக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கு உறவினர்கள் உரிய நேரத்தில் வரமுடியாதிருப்பதனாலும் சிரமங்களையும் கஷ்டங்களையும் எதிர்நோக்க வேண்டியிருப்பதாக முகாம்களில் இருந்து வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

போரில் அப்பாவை இழந்தேன், ஆனாலும் முகாமில் இருந்து படித்து பரீட்சையில் வெற்றி பெற்றேன்


போரில் அப்பாவை இழந்தேன், எனது குடும்பம் எல்லாவற்றையும் இழந்தது வன்னியில் இருந்து உட்த்த உடுப்போடு வந்தோம்.ஆனாலும் முகாமில் இருந்து படித்து பரீட்சையில் வெற்றி பெற்றேன் இவ்வாறு தனது பிஞ்சு மனது எதிர்கொண்ட மிகப்பேரழிவு அனுபவத்தை கூறுகின்றார் கிளிநொச்சி மாவட்டத்தில் 164 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடம்பெற்ற தவபாலன் அறிவன்.
அவர் மேலும் கூறுகையில் ;புலமைப் பரிசில் பரீட்சைக்காக நாம் முகாமில் இருந்த மின்கம்பத்தின் கீழ் இருந்துதான் படித்தோம். முகாமில் 50 மீற்றர் தொடக்கம் 100 மீற்றர் இடைவெளிகளில் மின்கம்பங்களில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டிருந்தன. தொண்டு நிறுவனம் விளக்கு ஒன்றைத் தந்தபோதும் மண்ணெண்ணெயின் விலை 200 ரூபாவாக இருந்தது. ஆகையால் நாம் தொடர்ந்து மின்கம்பங்களை நாடிச்சென்றே படித்தோம். என்றாலும் என்னுடைய அம்மா கஷ்டத்திலும் முகாமில் 200 ரூபா கொடுத்து ரியூசனுக்கு அனுப்பினார். முகாமிலும் ஆரம்பத்தில் அவர்கள் உணவு தந்தார்கள். அது எங்களுக்கு ஒத்து வரவில்லை. அதனால் வயிற்றோட்டம் ஏற்பட்டது. எங்களுக்கு முகாமில் கற்பித்த ஆசிரியர்கள் கூறுவது ஒன்றைத்தான் "உடுத்த உடுப்புடன் வந்த எங்களுக்கு கல்வி ஒன்றுதான் அழியாச் செல்வம்" என்றார்கள். இதுவே எங்களுக்குக்கல்வி கற்க ஊக்கமாக அமைந்தது.இவ்வாறு குறிப்பிட்டார் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 164 புள்ளிகளைப் பெற்று மாவட்டமட்டத்தில் மூன்றாம் இடம் பெற்ற மாணவன் தவபாலன் அறிவன்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நிவாரணக் கிராமங்களில் எந்தவித தொற்று நோய்களும் இல்லை: வவுனியா அரச அதிபர்


நிவாரணக் கிராமங்களில் எந்தவித தொற்று நோய்களும் இல்லையெனவும் நோய் பரவாமல் தடுக்க சகல முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரச அதிபர் தெரிவித்தார்.

நலன்புரி நிலையங்களுக்கு வரும்போதே பல்வேறு தொற்று நோய்களுடன் வந்தவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்த மக்களிடையே மஞ்சட்காமாலை, தோல் நோய் மற்றும் பொக்குளிப்பான் போன்ற நோய்கள் இருந்தன. இவற்றைக் குணப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறான நோய்களைக் கொண்டோர் வேறாக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதேநேரம் இத்தகைய தொற்றுக்கள் ஏனையோருக்கு பரவாமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மழை காலங்களில் நோய்கள் பரவாமலிருப்பதற்காக சுற்றுச் சூழல்கள் துப்புரவு செய்யப்பட்டதுடன் நீர்தேங்கி நிற்பதைத் தடுக்கும் வகையில் வடிகான்கள் புனரமைக்கப்பட்டன. அத்துடன் மக்கள் தங்கியுள்ள கூடாரங்கள் திருத்தியமைக்கப்பட்டன.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தொற்று நோய் பரவுவது தடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்திலும் நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மட்டக்களப்பை சேர்ந்த இடம்பெயர்ந்தோரை அழைத்துவர குழுவொன்று வவுனியா பயணம்

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் தங்கியிருப்பதாக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எஞ்சிய குடும்பங்களை அடையாளம் கண்டு அழைத்து வருவதற்காக மாவட்ட புனர்வாழ்வு திட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஷரீப் மற்றும் 10 கிராம சேவை அலுவலகர்கள் உள்ளடக்கிய குழுவொன்று இன்று வவுனியா சென்றுள்ளது.

வவுனியா இடைத்தங்கல் முகாம்களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 847 குடும்பங்கள் 2349 பேர் நேற்று வரை 4 தொகுதிகளில் மீள் குடியேற்றத்திற்காக மட்டக்களப்புக்கு அழைத்து வரப்பட்டு சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று அழைத்து வரப்பட்ட 298 குடும்பங்களைச் சேர்ந்த 787 பேர் இறுதி தொகுதியினராகக் கருதப்பட்டாலும் இம்மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 34 குடும்பங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்தே குறிப்பிட்ட அதிகாரிகள் குழு அவர்களை அடையாளம் கண்டு அழைத்து வர சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

நேற்று அழைத்து வரப்பட்ட குடும்பங்களில் 3 பெண்கள் உட்பட 6 பேர் தவிர்ந்த ஏனையோர் அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட 6 பேரையும் வவுனியாவுக்கு அனுப்பி வைப்பது குறித்து பாதுகாப்பு தரப்பு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

அதேவேளை, கடந்த திங்கட்கிழமையும்,நேற்றும் மட்டக்களப்புக்கு அழைத்து வரப்பட்ட குடும்பங்களை தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் சிங்கள மகா வித்தியாலயத்தில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களையும் அக் குடும்பங்களிடம் அவர் கையளித்தார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates