செட்டிகுளத்தில் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்
வவுனியா, செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் கடந்த சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3சிறுவர்கள் மற்றும் 2பெண்கள் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இச்சம்பவத்தினால் அந்த முகாமில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த குறித்த 5பேரும் முகாமிலிருந்து விறகு சேகரிக்கச் சென்றபோதே இராணுவத்தினர் சுற்றிவளைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இராமநாதன் முகாமிலிருந்து சிலர் அடுத்துள்ள ஆனந்தகுமாரசாமி முகாமுக்கு செல்ல முற்பட்டபோது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு செல்ல முயன்றவர்களைப் படையினர் தடுத்தபோது, முகாமிலிருந்தவர்கள் படையினர்மீது கற்களை எறிந்தனர் எனவும், அதையடுத்துத் தற்பாதுகாப்புக்காக படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினரெனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். முன்பும் ஓர்முறை இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ்மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் படையினர் செய்யும் போது அதற்கான காரணங்கள் அடுக்கடுக்காக முன்வைக்கப்படும். ஆனால் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் படையினர் இவ்வாறான அதிகாரத்தைக் கையிலெடுத்து பொதுமக்கள் மீது சுடும் சூழல் நிலவுவதுமில்லை. அவ்வாறான சூழலில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளும் பாதுகாப்பு தரப்பினர் மீது பொதுமக்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் எடுக்கும் நடவடிக்கை கடுமையானதாக இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை ஆர்ப்பாட்டங்களின் போது ஊர்வலங்களின் போதும் தமிழ்ப் பிரதேசங்களிலேயே கண்மூடித் தனமான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
0 Response to "செட்டிகுளத்தில் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்"
แสดงความคิดเห็น