jkr

இனி வேண்டாம்.. ஏகபிரதிநிதித்துவம் -சர்வாதிகாரம் -பிள்ளைபிடிப்பு -அகதிவாழ்க்கை..!!!!


அண்மையில் அதாவது, 16.12.2009 புதன்கிழமை வீரகேசரியில் ஒரு செய்தி பிரசுரமாகியிருந்தது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி அமைப்பு என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக ஸ்ரீதரன் என்பவர் உள்ளதாகவும், அத்துடன் வட மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் அரியரத்தினம், கரச்சி பிரதேசசபை விசேட ஆணையாளர் பொன். நித்தியானந்தன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் யோகநாதன், தர்மரத்தினம், வேழமாலிகிதன. அமல் போன்றோர் கலந்து கொண்டதாகவும், அச்செய்தி தொடர்கிறது..
யார் இந்த ஸ்ரீதரன்?.. பிரபாகரனின், கல்வி நடவடிக்கைகளின் இணைப்பாளர் கேணல் தீபனின் சகோதரியின் கணவரான இவர், இலங்கை அரசு ஆசிரியர் சேவையில் உள்ளவர். கிளிநொச்சி மத்திய கல்லூரியின் அதிபராக யோகநாதன் என்பவர் கடமையாற்றி வந்தார். இவர் புலிகளின் பிள்ளை பிடியிலிருந்து தனது பிள்ளைகளை களவாகக் கொழும்புக்கு அனுப்பியதன் காரணமாக அவரின் அதிபர் பதவி, ஸ்ரீதரனின் காட்டிக் கொடுப்பினால் புலிகளின் உத்தரவுக்கு அமைய பறிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, ஸ்ரீதரனின் கல்வித் தகைமைகளுக்கு மேலதிக கல்வித் தகைமைகள், அனுபவத்தில் உயர்தரம் கொண்ட ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 20 பேருக்கு மேற்பட்டோர் கிளிநொச்சியில் கடமையாற்றி வந்த வேளையில், அவர்களை புறந்தள்ளி பிரபாகரனின் உத்தரவின் படியும், தீபனின் ஆசிர்வாதத்துடனும் கிளிநொச்சி மத்திய கல்லூரியின் அதிபர் பதவியைப் பெற்றுக் கொண்டார்.

அதேவேளையில் கிளிநொச்சி செஞ்சிலுவை சங்கத்தின் தலைவராக இவரே புலிகளால் நியமிக்கப்பட்டிருந்தார். புலிகள் அழிந்த பின்னரும் அந்த இரண்டு பதவிகளையும் தற்போதும் வகித்து வரும் நிலையில், தற்போது “கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி அமைப்பு” என்ற அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகவும் முடிசூட்டிக் கொண்டுள்ளார். இவரிடமிருந்து உடனடியாக அந்தப் பதவிகளை அரசு பறிக்க வேண்டும். ஓரே நேரத்தில் இரு பதவிகளையும் இவர் வகிக்க முடியாது என்பதுடன், இப்பதவிகளுக்கு இவர் உரிய தகைமையுடையவர் அல்ல என்று கிளிநொச்சி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி செஞ்சிலுவை சங்கத்தில் பாரிய பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சக உறுப்பினர்கள் இவர் மீது குற்றஞ் சாட்டியுள்ளனர். இவர் பணத்தை புலிகளிடம் கொடுத்தாரா? அல்லது அவரே பதுக்கி வைத்துள்ளாரா? என்பது தொடர்பாக இலங்கை செஞ்சிலுவை சங்கம் உடனடி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சக உறுப்பினர்கள் குமுறுகின்றனர். அதிபர் போட்டிப் பரீட்சையில் இவர் உரியதகுதி அடையாத நிலையில், இவருக்கு பின்கதவால் தற்போதைய றோயல் கல்லூரி தமிழ் பிரிவு அதிபர் மார்டின் கணபதிப்பிள்ளை பல உதவிகளை ஸ்ரீதரனுக்கு வழங்கி, சில தகுதிகளைப் பெற்றுக் கொடுத்தும் உள்ளதாக அறிய முடிகிறது.

உண்மையிலேயே கணபதிப்பிள்ளை என்பவர் கிளிநொச்சி மாவட்டதைச் சேர்ந்தவர் அல்ல. இவர் சிறிது காலம் கிளிநொச்சியில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். இவர் ஏன் புலிகளின் பிரதிநிதி ஸ்ரீதரனுக்கு உதவி செய்ய வேண்டும்? அப்படியாயின் இவர் ஏற்கனவே ஸ்ரீதரன் ஊடாக மேலும் பல உதவிகளை புலிகளுக்கு செய்தாரா? என்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் கிளிநொச்சியில் ஒரு சர்வாதிகாரியாக செயற்பட்ட ஸ்ரீதரன் புலிகளின் பல்வேறு பிரச்சார பணிகளில் முக்கியமாக ஈடுபாடு கொண்டு செயற்பட்டவர். மிக முக்கியமாக கட்டாய பிள்ளைபிடித்தலை நியாயப்படுத்தி, பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், யுத்தம் கிளிநொச்சியைக் கடந்த போது, செஞ்சிலுகை சங்கம் ஊடாக வவுனியாவுக்கு தப்பி வந்து, வெளிநாட்டு புலிகளுடனான தொடர்ப்பை ஏற்படுத்தி செயற்பட்டு வருகிறார். தற்போது வெளிநாட்டிலுள்ள புலிகளின் ஆலோசனையின் பேரிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் புலிகளின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சொலமன் சிறிலின் பின்னணியிலும் இந்த அமைப்பினை உருவாக்கியுள்ளார். மேலும் புலிகளின் பிரதிநிதியாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் தேர்தலில் போட்டியிடப் போவதாக, ஸ்ரீதரன் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு கேணல் தீபனின் முயற்சியினால் மக்களின் வரிப் பணத்திலிருந்து வவுனியாவில் காணியும் வீடும் ஏற்கனவே வேண்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வீட்டில் தான் தற்போது வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், புலிகளின் பெருமளவு பணம் இவரிடம் இருப்பதாக அறிய முடிகின்ற அதேவேளையில், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி அமைப்பினை உருவாக்குவதற்கு வெளிநாட்டுப் புலிகளிடமிருந்து பெருமளவு பணம் இவருக்கு அனுப்பப் பட்டுள்ளதாக அறிய முடிகிறது. நாடுகடந்த தமிழ்ஈழ உறுப்பினர்களுடன் தொடர்பாடலில் ஈடுபட்டு வரும் இவர், மீளவும் புலிகளின் செயற்பாட்டுக்கு உதவியாக இந்த அமைப்பினை உருவாக்கியுள்ளதாக நம்பகரமாக அறிய முடிகிறது.

இவருடன் சேர்ந்து இயங்கும் வேழமாலிகிதன் என்பவர் போலி கல்வி சான்றிதழை வழங்கி, கிளிநொச்சியில் கிராம சேவையாளராகக் கடமையாற்றியவர். பின்னர் போலி அம்பலமாகியதால், பதவியை இழந்தவர். இவர் கிராம சேவையாளராக கடமையாற்றிய காலத்தில் பெண்களுடன் பாலியல் வக்கிரத்தில் ஈடுபட்டதுடன், உணவு முத்திரை மோசடியிலும் ஈடுபட்டுள்ளார். பலிகளின் அரசியல்பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச்செல்வனின் நெருங்கிய சகாவாக இருந்த காரணத்தினால், இவர் மீதான மக்களின் புகார்கள் காற்றில் பறக்க விடப்பட்டன. புலிகளின் விழாக்கள், அரசியல் கூட்டங்களின் தொகுப்பாளராகவும், பிரச்சாரப் பணியாளராகவும், அரசியல் பிரிவில் செயற்பட்டவர். மிக முக்கியமாக கட்டாயப் பிள்ளைபிடித்தலை நியாயப்படுத்தி பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வந்தவர். கடைசி வரையில் புலிகளுடன் முகாம்களிலேயே இருந்து செயற்பட்டு வந்த இவர், புலிகளின் தோல்வியை அடுத்து மக்களோடு மக்களாக வவுனியாவை வந்தடைந்து, இன்று ஸ்ரீதரனுடன் கைகோர்த்துள்ளார்.

இவர்கள் இருவருடனும் இந்த அமைப்பில் உள்ளவர்கள் பயத்தினால் ஈடுபாடு கொண்டுள்ளார்களா? ஆன்றில் ஏதாவது இலாபத்தை எதிர்பார்த்து இணைந்துள்ளார்களா? என்பது அறியப்பட வேண்டும். அதேவேளையில் இனியும் கிளிநொச்சி மக்கள் ஒரு கொலைக்களத்தை உருவாக்க இடமளிக்கக் கூடாது. கொலையாளிகளின் செயற்பாட்டுக்கு அடித்தளமிடும் இவர்களை உடனடியாகவே மக்கள் முன் குற்றவாளிகளாக நிறுத்த வேண்டும்.
இனி வேண்டாம்.. ஏகபிரதிநிதித்துவம் -சர்வாதிகாரம் -பிள்ளைபிடிப்பு -அகதிவாழ்க்கை..!!!!
-கிளிநொச்சி வாழ் நலன் விரும்பிகள் -24.12.2009
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இனி வேண்டாம்.. ஏகபிரதிநிதித்துவம் -சர்வாதிகாரம் -பிள்ளைபிடிப்பு -அகதிவாழ்க்கை..!!!!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates