jkr

செய்தியறிக்கை


ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

ஆப்கானில் அமெரிக்காவுக்கு பெரும் இழப்பு

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள தளம் ஒன்றின் மீது புதனன்று பிற்பகல் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்டதாக தெரியவந்துள்ளது.

கோஸ்ட் மாகாணத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் முழு நேரமாகவோ, அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ சி.ஐ.ஏவுக்காக பணியாற்றிய 8 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் 6 அமெரிக்கர்கள் இதில் காயமடைந்தனர்.

ஆப்கானிய இராணுவ அதிகாரியாக பணியாற்றிய தமது ஆளே அந்த தாக்குதலை நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.

பல சோதனைச் சாவடிகளின் ஊடாக கடந்து சென்று, அந்த நபர் உடற்பயிற்சி நிலையத்தில் அந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


இராக்கில் கடத்தப்பட்ட பிரித்தானியர்கள் தொடர்பில் குழப்பமான தகவல்கள்

இராக்கிய அரசாங்க அமைச்சில் இருந்து 2007 ஆம் ஆண்டில் 5 பிரிட்டிஷ்காரர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் இரானிய தொடர்பு குறித்து குழப்பமான தகவல்கள் வந்திருக்கின்றன.

இரானிய புரட்சிகர இராணுவத்தின் உத்தரவின் பேரில் அவர்களை தாம் கடத்தி வந்து இரானில் தடுத்து வைத்ததாக அந்த இரானிய புரட்சிகர இராணுவத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டி பிரிட்டிஷ் செய்தித்தாளான ''த கார்டியன்'' செய்தி வெளியிட்டுள்ளது.

பீட்டர் மூர்
பீட்டர் மூர்

ஆனால், அவர்களை விடுதலை செய்வதற்கான சமரச பேச்சுவார்த்தைகளில் உதவிய இராக்கிய அரசியல்வாதி ஒருவர் இரானுக்கு இந்த கடத்தல் விவகாரத்தில் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்று கூறியுள்ளார்.

இந்த ஐவரில் ஒருவரான பீட்டர் மூர் என்னும் கணினி நிபுணர் எதிர்பாராத வகையில் புதனன்று விடுதலை செய்யப்பட்டார்.

இவரது மூன்று மெய்ப்பாதுகாவலர்கள் கடத்தி வைக்கப்பட்டிருந்தபோது கொல்லப்பட்டு விட்டார்கள். நான்காவது நபரும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.


பின்லாந்த் தாக்குதல்தாரி தற்கொலை

பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கிக்கு வெளியே எஸ்போவில் 5 பேரைச் சுட்டுக்கொன்ற ஒரு ஆயுதபாணி தானும் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

ஒரு அங்காடியில் இவர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

இப்ராஹிம் ஸ்குபொல்லி
இப்ராஹிம் ஸ்குபொல்லி

அருகில் உள்ள ஒரு அடுக்குமாடிக்கட்டிடத்தில் ஐந்தாவது சடலத்தை பொலிஸார் பின்னர் மீட்டனர்.

அந்த அங்காடியில் வேலைபார்த்துவந்த அந்தப் பெண், அந்த துப்பாக்கிதாரியின் முன்னாள் தோழி என்று நம்பப்படுகின்றது.

அவர்தான் அந்த துப்பாக்கிதாரியின் முக்கிய இலக்கும் என்று பொலிஸார் விபரித்துள்ளனர்.

ஆயுதபாணியின் சடலம் மற்றுமொரு அடுக்குமாடி கட்டிடத்தில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ள அந்த நபர் 43 வயதான இப்ராஹிம் சுக்பொலி என அடையாளம் காணப்பட்டார்.

2007 மற்றும் 2008 இல் நடந்த பரவலான சூட்டுச் சம்பவங்களை அடுத்து துப்பாக்கிக்கான உரிம நிபந்தனைகளை பின்லாந்து பொலிஸார் கடுமையாக்கியயுள்ளனர்.


கடவுளை குறிக்க அல்லா என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம் மலேஷியா நீதிமன்றம் தீர்ப்பு

கடவுளைக் குறிக்கின்ற போது அல்லா என்ற சொல்லைபயன்படுத்த கிறிஸ்தவர்களுக்கு அரசியலமைப்பு அடிப்படையிலான உரிமை இருக்கிறது என்று மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முஸ்லிம்கள் அல்லாதவர்கள் இந்த சொல்லை பயன்படுத்துவதற்கான அரசாங்கத் தடையை இந்த தீர்ப்பு நிராகரிக்கிறது.

மலேஷியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினர்
மலேஷியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினர்

இது தொடர்பான வழக்கு றோமன் கத்தோலிக்க வார சஞ்சிகையான ஹெரோல்டினால் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இனத்தாலும், மதத்தாலும் பிரிக்கப்படாமல், ஒன்றுபட்ட மலேசியாவை விரும்பும் அனைவருக்கும் இது ஒரு வெற்றி என்று இந்த சஞ்சிகையின் ஆசிரியர் லோரண்ஸ் அண்ட்ரூ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க திருச்சபை முஸ்லிம் மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதை ஊக்குவிக்கின்றது என்று அங்குள்ள முஸ்லிம் குழுக்கள் சந்தேகிப்பதாக பிபிசியின் கோலாலம்பூர் நிருபர் கூறுகிறார்.

இத்தகைய மதமாற்ற நகர்வு மலேசியாவில் சட்ட விரோதமானதாகும்.

செய்தியரங்கம்
பாபா அணுசக்தி ஆய்வு மையம்
பாபா அணுசக்தி ஆய்வு மையம்

பாபா அணு ஆய்வக விபத்து- விடை தேடும் கேள்விகள்

இந்திய அணு சக்தித் துறையின் முக்கிய ஆய்வகங்கள் பல உள்ள மும்பை பாபா அணு ஆய்வு நிலைய வளாகத்துக்குள் இருந்த ஒரு சோதனைச் சாலையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து ஏன் ஏற்பட்டது, அங்கே பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்பது குறித்த உண்மையான தகவல்களை வெளியிட இந்திய அணு ஆராய்ச்சிக் கழகம் மறுப்பதாக விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அவர்களின் சந்தேகங்கள் குறித்தும், இந்திய அணு சக்தி ஆய்வ கங்களில் நடக்கும் விபத்துக்கள் குறித்த விவரங்களை வெளியி டுவதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் போதுமான வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்பதில்லை என்கிற புகார் குறித்தும் இந்திய அணுசக்தித்துறையின் முன்னாள் தலைவர் எம் ஆர் சீனிவாசன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை அரசு என்னை சித்திரவதை செய்யவில்லை—மருத்துவர் சிவபாலன்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் செயல்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றிய நான்கு அரச மருத்துவர்களும் அவர்களோடு சேர்ந்து மருத்துவ சேவையாற்றி வந்த சிவபாலன் என்ற மருத்துவரும் போரின் இறுதி நாட்களில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த போது கைது செய்யப்பட்டனர்.

அரச மருத்துவர்கள் நான்கு பேரும் அக்டோபர் மாதம் விடுவிக்கப் பட்டாலும், மருத்துவர் சிவபாலன் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த திங்களன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சிவபாலன், நிர்வாக நடைமுறைகளை முடித்துக் கொண்டு புதன்கிழமை இரவு வீடு திரும்புயுள்ளார்.

தாம் கைது செய்யப்பட்டது குறித்தும், காவலில் இருந்தபோது தாம் நடத்தப்பட்ட விதம் குறித்தும் தமிழோசைக்கு அவர் அளித்த பிரத்யேக செவ்வியில் விவரித்தார்.

காவலில் இருந்தபோது தாம் சித்திரவதை செய்யப்படவில்லை என்றும், தற்போது தாம் ஒருலட்ச ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் மாதம் ஒரு முறை காவல்துறையிடம் சென்று தான் கையொப்பமிடவேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் அந்த செவ்வியில் தெரிவித்தார். அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு வலுக்கிறது

வட சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு பொது மருத்துவ மனையில் நடைபெற்ற படப்பிடிப்பு காரணமாக அந்த மருத்துவ மனைக்கு வந்த நோயாளர்கள் பெரும் இன்னல்களை சந்தித்ததாக செய்திகள் வெளியான நிலையில், இனி ஸ்டான்லி மருத்துவ மனையில் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டாம் என்று சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருக்கும் அரசு கட்டிடங்கள், பூங்காக்கள், சாலை கள் உள்ளிட்ட பொது இடங்கள் மற்றும் கோவில்களில் திரைப்பட படப்பிடிப்பு நடத்துவதற்கு கட்டண அடிப்படையில் தமிழக அரசு அனுமதி அளிக்கிறது.

தமிழ்திரைப்பட படப்பிடிப்புக்கு எதிர்ப்பு
தமிழ் திரைப்பட படப்பிடிப்புக்கு எதிர்ப்பு

ஆனால் இத்தகைய படப்பிடிப்புகள் நடக்கும்போது குறிப்பிட்ட அந்த பகுதியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு கடும் அசவுகரியங்களை உண்டாக்குவதாக தொடர்ந்து புகார்கள் வெளியாகிவருகின்றன.

ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த இத்தகைய திரைப்பட படப்பிடிப்பு அங்கு சென்ற நோயாளர்களுக்கு கடும் அசவுகரியங் களை உண்டாக்கியதாக ஊடக செய்திகள் தெரிவித்தன.

இதையடுத்து ஸ்டான்லி மருத்துவ நிர்வாகம், இனிமேல் மருத்துவமனை வளாகத்தில் திரைப்பட படப்பிடிப்புக்களை அனுமதிக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

80 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டால் ஏகாதிபத்தியவாதத்திற்கு முடிவுகட்டலாம்- எதிரணியின் வேட்பாளர் சரத் பொன்சேகா


ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டு மக்களிடமிருந்து 80 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டால் ஊழல் மோசடி மிகுந்த ஏகாதிபத்தியவாதத்துக்கு முடிவு கட்டிவிடலாம். அத்துடன், ஆளும்தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் கட்டுப்பணமும் இல்லாமல் போகும். எனவே, நல்லாட்சியை நோக்கிய எமது பயணத்தை வெற்றிபெறச் செய்யும் வகையில் அன்னச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். மக்கள் எதிர்பார்த்த சுதந்திரத்தை நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம். ஆனால், நாட்டுக்கு தேவையான ஜனநாயகமும் சமாதானமும் உறுதிப்படுத்தப்படுவதற்கு பதிலாக துர்நாற்றம் வீசுகின்ற கழிவுகளே குன்றுகளாக குவிந்து கிடக்கின்றன. இந்த கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனை மேற்கொள்ளும்போது எனது கைகளும் சேறாகும் என்பதை உணர்ந்துள்ளேன். இருந்தும் அது குறித்து நான் கவலைப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சி மக்கள் பிரிவு அமைப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை ஜெனரல் பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜெனரல் சரத் பொன்சேகா இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பொறுப்பை நிறைவேற்றியுள்ளேன்

எனது 40 வருட இராணுவ சேவை காலத்தில் நான் அரசியலுக்குள் வருவேன் என்பதை சிந்தித்திருக்கவில்ல. சீருடை அணிந்த இராணுவ அதிகாரியாக அதுவும் அரச ஊழியராகவே இருந்து இறுதியில் மக்களின் எதிர்பார்ப்பான நாட்டின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு எனக்கு அளித்திருந்த பொறுப்பையும் நிறைவேற்றி இருக்கின்றேன். இவ்விடயங்களை மக்கள் நன்றாக அறிந்திருக்கின்றனர். எனினும், இந்நாட்டுக்கு தேவையான வேறுபல எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

வெளியாரை திருப்திப்படுத்தும்மீள்குடியேற்ற நடவடிக்கை

ஜனநாயகம், சமாதானம், சகவாழ்வு என்பவற்றுக்கான அடித்தளம் இடப்படவில்லை. அதுமட்டுமல்லாது யுத்தத்தினால் பாதிப்படைந்த வடக்கு கிழக்கைச் சேர்ந்த அப்பாவி தமிழ்மக்களின் நிலைமைகள் உணர்வு பூர்வமாக அணுகப்படவில்லை. அவர்களது மீள்குடியேற்ற நடவடிக்கை எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களுக்கான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அந்த மக்கள் பலவந்தமாகவும் அரசாங்கத்தின் தனிப்பட்ட தேவைக்காகவுமே மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவையனைத்தும் வெளியாரை திருப்திப்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தெளிவாகின்றது.

குடும்ப அபிவிருத்தியேபிரதானம் நாட்டின் அபிவிருத்தி குறித்து சிந்திக்காதவர்கள் குடும்ப அபிவிருத்தியையே பிரதானமாக கொண்டு தங்களது ஏகாதிபத்திய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த எமக்கு அபிவிருத்தி என்ற பேரில் பூச்சாண்டி காட்டினர். யுத்த நடவடிக்கைகளின் போது தம்மை அர்ப்பணித்து நாட்டுக்காக போராடிய வீரர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இருக்கின்ற இராணுவ வீரர்கள் அங்கவீனமுற்றோர் தொடர்பில் இன்றைய அரசாங்கம் எந்தவிதமான அக்கறையும் கொள்ளவில்லை. இவற்றையெல்லாம் சிந்திக்கவேண்டிய தேவை எமக்கு இருந்தது. எனினும், அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருக்கவில்லை.

என்னை அர்ப்பணித்துள்ளேன்

இந்த சந்தர்ப்பத்தில்தான் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. மனோ கணேசன் எம்.பி. மற்றும் ரவூப் ஹக்கீம் எம்.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வரிசையில் உள்ள 12க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஊழல் மோசடி மிக்க இந்த அரசாங்கத்திற்கு முடிவு கட்டுவதுடன் மக்களுக்கு என்னால் முடியுமான சேவையை செய்வதற்கு என்னை அர்ப்பணித்துள்ளேன்.

துர்நாற்றக் கழிவுக் குன்றுகள்

இந்த நாட்டில் கடந்த 4 வருடங்களாக சேர்க்கப்பட்ட துர்நாற்றக் கழிவுக் குன்றுகளை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இந்த பணியில் இறங்கியிருக்கும் என்மீது அரசாங்கம் சேறுபூசிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், ஆளும்கட்சி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தனது பிரசார மேடைகளில் எதிர்க்கட்சியினரால் தனக்கு சேறுபூசப்படுவதாக கத்திக் கொண்டிருக்கிறார். நாம் இதுவரையில் அவர் மீது சேறு எதுவும் பூசவில்லை. நாட்டில் நடக்கின்ற ஊழல் மோசடிகள், வீண்விரயங்கள் குறித்து பகிரங்கப்படுத்துவது எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமையாகும். அதனை மேற்கொள்ளும்போது தனக்கே சேறுபூசப்படுவதாக கூறிக்கொள்வதற்காக எம்மால் ஒன்றும் சொல்லமுடியாது.

அரசியல் பழிவாங்கல்

நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றுகின்ற ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை கடத்திச் சென்று பாதுகாப்பு செயலாளரின் முன்னால் நிறுத்தி அவரை அச்சுறுத்தியுள்ளமையானது மிகவும் மோசமான விடயமாகும். அதேபோல், எனது பிரசார மேடையில் தோன்றிய வண. தம்பர அமில தேரரை கைது செய்திருப்பது அரசியல் பழிவாங்கல் ஆகும். இது இவ்வாறிருக்க இன்னும் பத்து ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான அச்சுறுத்தல்கள் அநாகரிகமான நடவடிக்கைகளை மேற்கொள்வது நியாயமான தேர்தலுக்கு செல்வதற்காக அல்ல என்பது நிரூபணமாகின்றது. அதுமட்டுமல்லாது தேர்தல்களை நிறுத்தி பலவந்தமாக பதவியை அடைவதற்கே ஆளும்தரப்பு வேட்பாளர் முயற்சிக்கின்றார்.

மங்கள தோல்வியடையவில்லை

அரசாங்கத்தின் இந்த அநியாயங்களை பொறுத்துக் கொள்ள முடியாதமையாலேயே மங்கள சமரவீர எம்.பி. தனது பதவியையும் துறந்து கட்சியில் இருந்து வெளியேறினார். இவர்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு பாடுபட்டவர். இதனை மறந்த மஹிந்த ராஜபக்ஷ, மங்கள சமரவீர எம்.பி.யை துச்சமாக நினைத்து அவரை வெளியேற்றி விட்டார். மங்கள எம்.பி.யினால் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு தேர்தலும் தோல்வியடையவில்லை. வெற்றி மாத்திரமே அவருக்கு கிடைத்தது. அந்த வகையில் அவர் இன்று என்னுடன் இணைந்திருப்பது எனது வெற்றியையும் உறுதிபடுத்தியிருக்கின்றது. மங்கள எம்.பி.யை வெளியேற்றிய ராஜபக்ஷ நிருவாகம் போதைவஸ்து வியாபாரிகளையும் ஊழல் மோசடிக்காரர்களையுமே இன்றும் அருகில் வைத்து கொண்டு செயற்படுகின்றது. இதற்கு முடிவு கட்டப்படவேண்டும்.

தொலைகாட்சியில் மாத்திரமே அதிகாரி

என்மீது சேறுபூசியும் விமர்சனங்களை முன்வைத்தும் வருகின்ற ஆளும்கட்சி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, எனக்கு அரசியல் அனுபவம் இல்லை என்பதை தொடர்ச்சியாக கூறி வருகிறார். அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் எனக்கு இராணுவத்தை வழிநடத்தக் கூடிய தலைமைத்துவம் இருக்கின்றது என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளேன். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவினால் தொலைக்காட்சி நாடகத்தில் மாத்திரமே இராணுவ அதிகாரியாக தோன்ற முடியும் என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டமைக்கு நாமே காரணம். ஆனால், அந்த வெற்றி தனக்கே உரித்தானது என மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார். இது குறித்து மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.

சிறுபான்மையினரை வென்றுவிட்டோம்

எமது பயணத்தின் குறுகிய காலத்திற்குள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுக்கொண்டு விட்டோம். அவர்களது ஒட்டுமொத்த வாக்குகளும் எமக்கே என்பது இப்போதே உறுதியாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி மாத்திரமே சேவையில் இருக்கும் பின்தங்கிய பிரதேசங்கள் மற்றும் கிராமங்களுக்கு எமது பிரசார நடவடிக்கைகள் சென்றடையவில்லை என்றும் அதனால், கிராமத்தவர்களின் வாக்குகள் எமக்கு கிடைக்கப்போவதில்ல என்றும் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எமது பிரசார பயணம் கிராமங்களுக்கும் செல்லும் என்பதையும் அவர்களின் மனங்களையும் வெல்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும், எமது பிரசாரங்கள் கிராமங்களுக்கு சென்றடைய இங்கே கூடியிருக்கும் ஒவ்வொருவரும் உதவி புரிவர் என நம்புகின்றேன். இன்று நாம் நாட்டின் அநேகமான பகுதிகளை வென்றுவிட்டோம் என்றே கூறவேண்டும்.

வெற்றி நிச்சயம்

வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள வாக்காளர்களில் 80 வீதமானோர் வாக்களிப்பார்களேயானால் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்பதுடன் மோசடி மிக்க ஏகாதிபத்திய அதிகாரத்தையும் இல்லாதொழிக்க முடியும். அத்துடன், ஏகாதிபத்தியத்திற்கு சொந்தமான ராஜபக்ஷவின் கட்டுப்பணத்தையும் அவர் மீளப் பெற்றுக்கொள்ள முடியாதவாறு செய்ய முடியும்.

நல்லெண்ணம் கிடையாது

எந்தவொரு நல்ல அரச தலைவரும் நாட்டு மக்களிடமிருந்து 80 வீதமான வாக்களிப்பை மிகவும் விரும்புவõர். மகிழ்ச்சியடைவார். ஆனால், இன்றைய அரச தலைவருக்கு 80 வீதமான வாக்குகளை மக்கள் அளிக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கிடையாது. அச்சுறுத்தல்களையும் அடக்குமுறைகளையும் பயன்படுத்தி வாக்கு வீதத்தை தடுப்பதற்கு நினைப்பதானது ஒரு நாட்டின் அரச தலைவருக்கு பொருத்தமானது அல்ல. எனவே, இந்நாட்டுக்கு தகுதியான தலைவர் யார் என்பதை இந்நாட்டு மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மட்டக்களப்பில் பிரசாரம் நடத்த மாநகர முதல்வர் அனுமதி


எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டக்களப்பு நகரில் மைதானம் வழங்க ஏற்கனவே மறுப்புத் தெரிவித்திருந்த மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் தற்போது அனுமதியளித்துள்ளார்.

எதிர்வரும் 5 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சுங்க வீதியிலுள்ள காந்தி சிலை சதுக்கத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரம் பெற்ற தேர்தல் முகவர் சேகுதாவுத் பஷீர் (மாகாண சபை உறுப்பினர்) மாநகர ஆணையாளரிடம் எழுத்து மூலம் விண்ணப்பம் செய்திருந்தார்.

மாநகர ஆணையாளரிடம் இதற்கான விண்ணப்பம் செய்திருந்த போதிலும் அதற்கான பதிலை மாநகர முதல்வரே தங்களுக்கு எழுத்து மூலம் வழங்கியுள்ளதாக சேகு தாவூத் பஷீர் தெரிவிக்கின்றார்.

"குறிப்பிட்ட இடத்தில் முன் கூட்டியே நிகழ்வுகள் நடை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன் " என மாநகர முதல்வர் தனது பதிலில் தெரிவித்திருந்தார்."

இருப்பினும் இதற்கான அனுமதி நேற்று தங்களுக்கு கிடைத்துள்ளதாக ஐ.தே.க. வின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான அப்துல் லத்தீப் எமது செய்திச் சேவைக்கு தெரிவிததார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கூட்டமைப்பு எம்.பி.க்கள் அமைச்சர்களாக மாறவேண்டும்: ஜனாதிபதி அழைப்பு


எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் அமைச்சர்களாக மாற வேண்டும். அதற்கேற்ற வகையில் செயற்பட அரசாங்கம் தயாராகவுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரை சந்தித்து பேசிய போதே ஜனாதிபதி அமைச்சர்களாக மாறும்மாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இருவரும், நாம் பதவி பட்டங்களுக்காக அரசியலில் ஈடுபடவில்லை.

தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே நாம் செயற்படுகின்றோம் என்று கூறியுள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அவுஸ்திரேலியாவை உலுக்கிய இரு இலங்கைத் தமிழர்களின் வங்கிக் காசட்டை மோசடி


இங்கிலாந்தைச் சேர்ந்த 36 வயதுடைய இளங்கோவன் கணேஷமூர்த்தி மற்றும் கணடாவைச் சேர்ந்த 31 வயதுடைய ருக்ஷாந் செல்வராஜா ஆகிய இருவருமே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டவர்களாவர்.

மேற்கு அவுஸ்த்திரேலிய மாநிலமான பேர்த்திலுள்ள சுமார் 20 இற்கும் மேற்பட்ட மக்டொனால்ட் உணவு விடுதிகளில் "டிரைவ் இன்" பகுதியால் உள்நுழைந்து பணியாளர் வேறு வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் தறுணத்தைப் பார்த்திருந்து தமது மோசடி "எfட்பொஸ்" இயந்திரத்தை அங்கிருக்கும் இயந்திரத்திற்காகப் பிரதியீடு செய்த இவர்கள், பின்னர் "புளூ டூத்" பொறிமுறை மூலம் தமது மோசடி இயந்திரத்தில் உரசப்படும் காசட்டைகளின் விவரங்களை தமது பிரத்தியேகக் கணணிக்கு தரவிறக்கம் செய்துவிடுகிறார்கள்.

இவ்வாறு தரவிறக்கம் செய்யப்படும் அப்பாவிகளின் காசட்டை இலக்கம் மற்றும் இரகசிய குறியீட்டு எண் என்பவற்றைப் பாவித்து போலியான வங்கிக் காசட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. பின்னர் இக் காசட்டைகளைக் கொண்டு உலகெங்குமுள்ள "ஏ.டி.எம்" இலத்திரணியல் காசு இயந்திரங்களினூடாகப் பெருமளவு பணம் எடுக்கப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்பட்ட பணத்தின் அளவு சுமார் 5 மில்லியன் அவுஸ்த்திரேலிய டாலர்களைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தனியொரு வன்கிக் காசட்டை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட அதிகூடிய பனத்தினளவு சுமார் 7000 அவுஸ்த்திரேலிய டாலர்கள் என்று போலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதே வகையிலான மோசடி ஒன்று பிரபல வங்கி ஒன்றின் "ஏ.டி.எம்" ஊடாகவும் நிகழ்ந்திருக்கிறது. அந்த இலத்திரனியல் காசு இயந்திரம் இயக்கப்படும் ஒவ்வொரு தறுவாயும் அதில் பதியப்படும் இலக்கங்கள் மற்றும் கடனட்டை இலக்கங்கள் ரகசியமாகத் தரவிறக்கப்பட்டு பின்னர் வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் பெறப்பட்டுள்ளத்து. வங்கி இயந்திர தட்டச்ச்ய் பட்டையை ஒத்ததாக இருக்கும் இந்த மோசடிக் கும்பலின் தட்டச்சு மட்டையும் இலகுவாக பணியாளர்கள் மற்றும் கஷ்டமர்களின் கண்களில் மண்ணைத் தூவி விடுகின்றன. இதனால் அண்மைக்காலத்தில் இந்த குறிப்பிட்ட வங்கி "ஏ.டி.எம்" கலைப் பாவித்த ந்வாடிக்கையாளர்களைத் தமது வங்கி நிதி அறிக்கையை சரிபார்க்கும்படி போலிசாரால் கேட்க்பட்டுள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன் மாரடைப்பால் காலமானார்


சமூக அநீதி ஒழிப்புத்துறை அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெரியசாமி சந்திரசேகரன் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 52 ஆகும்.

இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அமைச்சரை உடனடியாக கொழும்பின் நவலோக வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும் அங்கு அவர் உயிர்பிரி;ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மலையகத்தில் பிரபல அரசியல்வாதியாக திகழ்ந்த அவர்,பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவராவார்.

1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி பிறந்த சந்திரசேகரன், முதன்முதலாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூலம் அரசியலுக்கு பிரவேசித்தார்.

இதற்கு முன்னர் அவர் வகித்து வந்த சமாதான நீதிவான் பதவியே அவரை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு கொண்டு சென்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகிய அவர் மலையக மக்கள் முன்னணியை தோற்றுவித்து, புளொட் அமைப்புடன் இணைந்து முதலாவது மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.

இதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவரின் ஆசனம் மூலமே 2001 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கம் ஆட்சி அமைக்க கூடியதாக இருந்தது.

இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிவந்த அவர், தற்போது அரசாங்கத்தின் அமைச்சராக இருந்து வந்தார்.

இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சந்திரசேகரன் உலகளாவிய ரீதியில் தமிழ் தலைவராக மதிக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பிரதிநிதியாகவும் செயற்பட்டு வந்தார்.மலையகத்தில் தனி அலகு கொள்கையை இவரின் கட்சி கொண்டிருந்ததுடன் மலையகத்தின் பிரச்சினைகளை வெளயுலகிற்கும் கொண்டு சென்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அன்னை தெரேசா படத்துடன் முத்திரை வெளியீடு : அமெரிக்கா முடிவு


அன்னை தெரேசா படத்துடன் முத்திரை வெளியிட அமெரிக்கத் தபால்துறை முடிவு செய்துள்ளது.

அமெரிக்கத் தபால்துறை ஆண்டுதோறும் பல்வேறு தலைவர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றைக் கௌரவிக்கும் விதமாக முத்திரை வெளியிடுவது வழக்கம்.

இதுபோன்று வெளியிடப்படும் முத்திரைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டாலும், பரவலாக ஏராளமானவர்கள் இவற்றை ஆர்வமுடன் வாங்கி சேமித்து வைப்பார்கள்.

அந்த வரிசையில் அடுத்தாண்டின் முத்திரை வெளியீட்டுக்காக நோபல் பரிசு வென்ற அன்னை தெரசா, ஆஸ்கார் நடிகை கேத்ரினா ஹெப்பர்ன் உள்ளிட்டோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்களின் படங்களுடன் முத்திரை வெளியிட அமெரிக்கத் தபால்துறை முடிவு செய்துள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இன்று வருடத்தின் இறுதி நாளில் நீல பூரணைத் தினம்`: நள்ளிரவில் சந்திரகிரகணம்

2009 ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்று இரவு வழமைக்கு மாறான இரவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீல பூரணைதினம் தென்படுவதே இதற்கான காரணமாகும். டிசம்பர் 31 ஆம் திகதியான இன்று, இந்த மாதத்தின் இரண்டாவது பூரணைத்தினம் வந்துள்ளது.

இந்த நிலையில் இதனை வானிலையாளர்கள், நீலப்பூரணை என அழைக்கின்றனர். இன்று நள்ளிரவுக்கு பின்னர்,புதிய வருடம் பிறந்த பின்னர் பகுதியளவான சந்திரக்கிரகணத்தை பார்க்கமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக,வருடத்திற்கு 12 பூரணை தினங்கள் வருகின்றன.13ஆவது பூரணைத்தினம் அபூர்வமாகவே வருகின்றது. இந்த மாதத்தின் முதலாவது பூரணைத்தினம் கடந்த 2 ஆம் திகதி வந்தது.

ஒரு பூரணைத்தினம், இருபத்தொன்பதரை நாளில் வரும் போது அதன் மேலதிக நாட்கள், மூன்று வருடத்திற்கு ஒருமுறை பூரணைத்தினத்திற்கு வழி வகுக்கிறது.

நீல பூரணைத்தினம் 3 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் போது, இரண்டு நீல பூரணைத்தினங்கள் 18 அல்லது 19 வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்கின்றன. கடைசியாக 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நீலப்பூரணைத்தினம் நிகழ்ந்தது.

இந்த நிலையில் அடுத்த புதுவருட நீலப்பூரணைத்தினம் 2028 ஆம் ஆண்டு நிகழவுள்ளதாக வானிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

முன்னாள் தாய்லாந்து பிரதமரை, பொருளாதார ஆலோசகராக நியமிக்க இலங்கை தயாராவதாக தகவல்!


தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சின்வாத்ராவை, பொருளாதார ஆலோசகராக நியமிக்க இலங்கை அரசாங்கம், தயாராகி வருவதாக பேங்கொக் போஸ்ட் தெரிவித்துள்ளது. தக்சின் சின்வாத்ரா இலங்கையில் அரசியல் அடைக்கலம் கோரவுள்ளார் என வெளியான தகவலின் பின்னரே இந்த பொருளாதார ஆலோசகர் பதவி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தக்சின் சின்வாத்ரா ஏற்கனவே கம்போடியாவுக்கான பொருளாதார ஆலோசகராகப் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தக்சின் சின்வாத்ரா, நிலவழக்கு ஒன்றில் இருவருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விஜயம் செய்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். 2001ம் ஆண்டுமுதல் 2006ம் ஆண்டுவரை தாய்லாந்தில் பிரதமராக இருந்த வர்த்தகரான சின்வாத்ரா, இராணுவப் புரட்சியின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார். சின்வாத்ராவின் அரசாங்கம் ஊழல், மனிதஉரிமை மீறல் மற்றும் வன்முறைகளுக்குப் பெயர்போன அரசாங்கமாக விளங்கியது. இந்நிலையில், இலங்கை அரசாங்கம் அவரை பொருளாதார ஆலோசகராக ஏற்றுக் கொள்ளப் போகிறதா? எனப் பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகமவை கேட்டபோது, அவ்வாறான முனைப்புக் குறித்து தமக்குத் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

150 மில். ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கடலில் வீசப்பட்டதாக கே.பியை மேற்கோள் காட்டி திவயின தகவல்


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கோரிய 150 மில்லியன் ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கடலில் வீசப்பட்டதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
உலங்கு வானுர்தியின் உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட 53 வகையான ஆயுதங்களை பிரபாகரன் கோரியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஆயுதக் கப்பல் காலம் தாழ்த்தி முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் சென்றதாகவும் இதனால் அவற்றை கடலில் வீசிய எறிய நேர்ந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

குறித்த ஆயுதங்ளை கொள்வனவு செய்வதற்காக பணம் மலேசியா வங்கி ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவினர் நடத்தி வரும் விசாரணைகளின் போது அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சம்பந்தன் - ஜனாதிபதி நேற்றிரவு அலரி மாளிகையில் சந்திப்பு


தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் நேற்றிரவு அலரி மாளிகையில் சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறும் வகையில் இதற்கான அழைப்பு ஜனாதிபதியினால் விடுக்கப்படடிருந்ததாக தெரிய வருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கு மட்டும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் அவருடன் சென்றிருந்தார்.

குறிப்பாக இச்சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு அதரவு வழங்குமாறு கோரியதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாட்டை அக்கட்சியைச் சார்ந்தவர்கள் எடுத்துக் கூறியதாகவும் தெரியவருகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வவுனியா கூமாங்குளத்தில் வீடொன்றில் மாதா உருவப்படத்தில் திடீரென இரண்டு கைகள் தோன்றியுள்ளன


வவுனியா கூமாங்குளத்தில் வீடொன்றில் மாதா உருவப்படத்தில் திடீரென இரண்டு கைகள் தோன்றியுள்ளன. மாதாவின் உருவத்தை ஏந்தியிருப்பது போன்ற வகையில் இக்கைகள் இரண்டும் காணப்படுகின்றன. இரு தினங்களுக்கு முன்னர் இந்த அதிசயம் ஏற்பட்டுள்ளதாக அந்த வீட்டுக்காரராகிய அகிலன் கவிதா என்ற குடும்பப்பெண் தெரிவித்துள்ளார். கூமாங்குளத்தில் உள்ள சாயிசிறுவர் இல்லத்திற்கருகில் இந்தப்பெண் வசித்து வருகின்றார். இரண்டு குழந்தைகளின் தாயாராகிய அவர் நேர்த்திக்கடன் ஒன்றை நிறைவேற்றுவதற்காகக் கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் மடுக்கோவிலுக்குச் சென்றபோது, மாதாவின் இரண்டு உருவப்படங்களை வாங்கி வந்ததாகவும், அவற்றில் ஒன்றிலேயே இவ்வாறு இரண்டுகைகள் தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாதா படத்தில் தோன்றியுள்ள இந்த அதிசயக் கைகளை தரிசிப்பதற்காக தினசரி பெருமளவிலான மக்கள் அவரது வீட்டிற்குச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. அதேவேளை இது போன்று மடுஅன்னையின் திருவுருவப் படத்திலிருந்து அதிசயக் கரங்கள் இம்மாதம் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியிலுள்ள ஒரு வீட்டிலும், கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஒரு வீட்டிலும், திருமலை என்.சி.வீதியிலுள்ள ஒரு வீட்டிலும் தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் ஒளி விழா!


சாவகச்சேரி பிரதேசத்திற்குட்பட்ட கிறிஸ்தவ மக்களும் இராணுவத்தினரும் இணைந்து மிக பிரமாண்டமான ஒளி விழா நிகழ்வொன்று புனித லிகோரியார் ஆலயத்தில் நேற்று முன் தினம் (29) நடைபெற்றுள்ளது.

நத்தார் தின பண்டிகை கொண்டாட்டங்களை முன்னிட்டு 52வது படைப் பிரிவினரும் சாவகச்சேரி பிரதேச மக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ் ஒளி விழா நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் ஒளியேற்றலுடன் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு வந்த இவ் ஒளிவிழாவில் ஒளிவழிபாடு நடைபெற்றதுடன் பாலன் பாடலினை தொடர்ந்து பங்குத் தந்தையின் ஆசியுரை நடைபெற்றது. தெடர்ந்து தமிழ் மக்களின் கலாச்சாரத்தை ஒட்டியதான கும்மி கோலாட்டம் தும்பு நடனம் உட்பட பிரதேச ஆலய மாணவர்கள் மறையாசிரியர்களின் நாடகம் நடனம் கவிதை போன்ற இன்னோரண்ன நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இராணுவத்தினரின் சிங்கள கிறிஸ்மஸ் கரோல் கீத இசை நிகழ்ச்சி மக்களை இனிமைப்பட வைத்தது. அத்துடன் கிறிஸ்மஸ் நிகழ்வுகளை சிறப்பிக்கும் வகையில் படையினரால் பரிசில் பொதிகளும் தீன் பண்டங்களும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் பங்குத் தந்தை தயாகரன் அடிகள் 52வது படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சேனநாயக்கா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட பிரதி அமைப்பாளர் சூசைமுத்து அலெக்ஸ்சாண்டர் சாள்ஸ் சாவகச்சேரி வர்த்தக சங்க தலைவர் பாலா சாவகச்சேரி றிபேக் கல்லூரி பிரதி அதிபர் உட்பட பல்வேறு சமய சமூக பிரமுகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.











  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

செய்தியறிக்கை

செய்தியறிக்கை
பீட்டர் மூர்
பீட்டர் மூர்

இராக்கில் பிரிட்டிஷ் பிணைக்கைதி விடுவிக்கப்பட்டார்

ஈராக்கில் இரண்டரை ஆண்டுகளுக்கும் அதிகமாக பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பீட்டர் மூர் என்ற அந்த நபர் ஒரு கணினி நிபுணராவார். புதன்கிழமை காலை இவர் விடுவிக்கப்பட்டதாகவும் பிறகு அவர் பாக்தாத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பிரிட்டிஷ் வெளியுறவுத் துறைச் செயலர் உறுதிப்படுத்தியுள்ளார்.

விடுவிக்கப்பட்ட மூர் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் மிலிபாண்ட் கூறியுள்ளார்.

வன்முறையை விட்டு விலகத் தயாரான ஆயுதக் குழுக்களுடன் இராக்கிய அரசு மேற்கொண்டுவரும் சமரச நடவடிக்கைகள் கராணமாக மூரை விடுவிப்பது சாத்தியமானதாக மிலிபாண்ட் மேலும் தெரிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டில் இராக்கிய நிதி அமைச்சகத்தில் இருந்து மூரும் அவருடன் இருந்த அவரின் நான்கு மெய் காப்பாளர்களும் கடத்தப்பட்டனர்.


இராக் தற்கொலைத் தாக்குதலில் 23 பேர் பலி

இராக்கின் ரமாடி நகரில் இடம்பெற்ற இரட்டை தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் சில காவற்துறை அதிகாரிகளும் அடங்குவர்.

இந்தத் தாக்குதலில் அறுபது பேர் வரை காயமடைந்தனர். அதில் அல் அன்பார் பிரதேசத்தின் ஆளுநர் காசிம் முகமதும் காயமடைந்துள்ளார். அவரது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முதல் தாக்குதல் பாதுகாப்பு வலயப்பகுதி ஒன்றினுள் இடம்பெற்றுள்ளது. இதற்கு சிறிது நேரத்தின் பிறகு, அந்த ஆளுநரை சூழ்ந்து கொண்டிருந்த ஒரு கூட்டத்துக்குள் சென்ற தற்கொலை குண்டுதாரி ஒருவர் தன்னைத் தானே வெடிக்கச் செய்தார்.

அல் அன்பார் மாகாணம் ஒரு காலத்தில் தீவிரவாதிகளின் பலமான ஒரு தளமாக இருந்தது. எனினும் உள்ளூர் சுனி இன மக்கள் ஆயுததாரிகளுக்கு எதிராக திரும்பியதை அடுத்து அந்தப் பகுதி ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்தது.

இராக்கில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்தல்களை நடத்த நாடு ஆயுத்தமாகி வரும் நேரத்தில் இம்மாதிரியான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன என்று பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.


இரானில் அரச ஆதரவு ஆர்ப்பாட்டங்கள்

ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஆர்ப்பாட்டக்காரர்கள்
இரானில் அரசுக்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்கள் அண்மையில் நடைபெற்று வருகின்ற நிலையில், அவற்றுக்கு எதிராக, அரச ஆதரவு போராட்டங்களும் நாட்டின் பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன.

ஆனால் அரசுக்கு ஆதரவான இந்தப் பேரணிகளில் எவ்வளவு பேர் கலந்து கொண்டர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, நாட்டின் தலைநகர் தெஹ்ரானின் சாலைகளில் பெரும் திரளளான மக்கள் இருந்ததை அரச தொலைக்காட்சி காண்பித்தது.

நாட்டில் எதிர்கட்சிகளால் நடத்தப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் மேற்குலகின் தூண்டுதலின் பேரிலேயே நடைபெற்று வருகின்றன என்று இரானிய அதிகாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

கடந்த ஞாயிறன்று எதிர்கட்சியினரால் தலைநகர் தெஹ்ரானில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது எட்டு பேர் உயிரிழக்க நேரிட்டது.

எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டங்கள் வெறுக்கத்தக்கவை என்றும், அவை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படுகின்றன என்றும் இரானிய அதிபர் அஹ்மடி நிஜாட் வர்ணித்துள்ளார்.


ஆந்திர மாநில வேலை நிறுத்தத்தால் இயல்புநிலை பாதிப்பு

தெலங்கானா ஆதரவு போராட்டம்
தெலங்கானா ஆதரவு போராட்டம்
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் தெலங்கானாப் பகுதியில் நடைபெற்ற வேலை நிறுத்தம் அங்கு இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

நாட்டின் பல பாங்களையும் தலைநகர் ஹைதராபாத்துடன் இணைக்கும் சாலைகள் போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டுள்ளன.

தெலங்கானாப் பகுதியில் வன்முறை ஏற்படக் கூடும் என்கிற அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான பேருந்துகளும், 165 க்கும் அதிகமான ரயில் சேவைகளும் அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வேலை நிறுத்தம் தொடர்பில் சுமார் 350 பேர் வரை தற்காப்பு நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் துறையின் உள்ளூர் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்திலித்திருந்து தெலங்கானா எனும் தனி மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்று கோரி இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதது.

இந்தப் போராட்டத்துக்கு தடை செய்யப்பட்டுள்ள மாவோயியவாதிகள் இயக்கமும் சில மாணவர்கள் இயக்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

செய்தியரங்கம்
ஆர். யோகராஜன்
ஆர். யோகராஜன்

யோகராஜனும் சச்சிதானந்தமும் ஐ.தே.கவில் இணைகின்றனர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த உப தலைவரான ஆர். யோகராஜன் அவர்கள், அந்தக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்வதாக அறிவித்துள்ளார்.

தற்போது துணை அமைச்சராக இருக்கும் எம். சச்சிதானந்தமும் அவருடன் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்திருக்கிறார்.

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியில் இடம்பெறுகின்ற இ.தொ.க, மலையக பெருந்தோட்ட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்ற காரணத்தினாலேயே தான் அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாகவும் யோகராஜன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை தான் ஆதரிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் குறித்து யோகராஜன் அவர்களின் செவ்வியையும், அவர்களது விலகல் குறித்து இ.தொ.காவின் தலைவர் முத்து சிவலிங்கம் அவர்களின் செவ்வியையும் நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இடம்பெயர்ந்த சிறார்களை பராமரிப்பதற்கான ஏற்பாடு

பராமரிப்புத் தேவைப்படும் சிறார்கள்
பராமரிப்புத் தேவைப்படும் சிறார்கள்
இலங்கையின் வடக்கே இடம்பெயர்ந்தவர்களுக்கான வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களில் உள்ள வலது குறைந்த மற்றும் பராமரிப்பு தேவைப்படுகின்ற குழந்தைகள் 500 பேரை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றிற்கு அனுப்பி பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

நீதி அமைச்சு மற்றும், பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் அனுமதியுடன், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் ஊடாக இந்தச் சிறுவர்கள் இன்று கடவுளின் சொந்தக் குழந்தைகள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் இன்று கையளிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

மனிக்பாம் முகாமில் நடைபெற்ற இந்தக் கையளிப்பு வைபவத்தில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.

இந்தக் குழந்தைகளின் முதல் தொகுதியாக 170 பேர் இன்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கடவுளின் சொந்தக் குழந்தைகள் என்ற அமைப்பின் தலைவராகிய டாக்டர் பாலசுந்தரம் அனந்த்குமார் தெரிவித்தார். யாழ்ப்பாணம் புலோலி தெற்கில் உள்ள உபய கதிர்காமம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் கிராமத்தில் வைத்து இந்தச் சிறுவர்கள் பராமரிக்கப்படவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆஸ்திரேலியாவுக்கு கல்வி கற்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது

மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டம்
மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டம்
வெளிநாடு சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா மிகவும் பிரபலமான இடமாக இருந்துவந்தது.

கடந்த 7 வருடங்களில் அங்கு சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் 41 வீதத்தால் அதிகரித்து வந்தது.

ஆனால், கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்கள் இந்தப் போக்கை தலைகீழாக மாற்றிவிட்டது.

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மாணவர்களின் கூட்டமைப்பின் தலைவர் கௌதம் குப்தா. இந்திய மாணவர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் சில இனவாத தாக்குதலாக பார்க்கப்பட்டதாக கூறுகிறார்.

இந்திய ஊடகங்களில் இந்தத்தாக்குதல்கள் குறித்து பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவை இனவாத தாக்குதல்கள் என்ற வகையில் ஊடகங்கள் அவற்றைக் கையாண்டதால், அது, இந்தியாவில் ஆஸ்திரேலியாவின் அந்தஸ்துக்கு ஒரு பெரிய அடியாக அமைந்துவிட்டது.

இந்திய மாணவர்களால் ஆஸ்திரேலியாவுக்கு வருகின்ற வருமானம் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியமானதாகும்.

கடந்த மாதம் சந்தைப்படுத்தலை நோக்கமாகக் கொண்டு ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் அவர்கள் இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அவர் அங்கு மேற்கொண்ட பல விடயங்களில் இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு கல்வி கற்க வருவதை ஊக்கப்படுத்துவதும் ஒன்றாக இருந்தது.

அனைத்து மாணவர்களின் பாதுகாப்புக்கும் தான் பொறுப்பு என்று பிரதமர் கூறினார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்தோனேஷியக் கடலில் 3 மாதங்களாகப் படகில் பரிதவிக்கும் 250 தமிழர்கள் தொற்றுநோய்ப் பிடியில்!


இந்தோனேஷியாவின் மெராக் துறைமுகத்தில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுடன் சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகில் இருப்பவர்களுக்குத் தொற்றுநோய் பரவத் தொடங்கியுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அவுஸ்;திரேலியாவிற்குச் செல்லும் வழியில் இலங்கையர்களுடன் பிடிபட்ட படகை இந்தோனேஷிய அதிகாரிகள் கடந்த மூன்று மாதங்களாகப் கடலிலேயே தடுத்து வைத்துள்ளனர். இந்தப் படகிலிருந்த இலங்கையர் ஒருவர் கடந்த வாரம் நோய்வாய்ப்பட்டு மரணித்திருந்தார். இந்த நிலையில் படகில் உள்ள மேலும் பல இலங்கையர்கள் தொற்றுநோய்த் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

தொடர்ச்சியாக இரத்த வாந்தி எடுத்ததைத் தொடர்ந்து வினுஜா எனும் ஏழு வயதுச் சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளை, 43 வயது நபர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது. மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகின் நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது எனத் தெரிவித்துள்ள அகதிகள் பலர், தாங்கள் நோய் வாய்ப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். படகில் தொற்றுநோய் பரவியுள்ளதா என்பதை அறிவதற்கு வைத்தியர் ஒருவரை அனுப்புமாறும் அவர்கள் கோரியுள்ளனர் என்று கூறப்பட்டது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

லாப் சமையல் எரிவாயு 60 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.


லாப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

எனினும் செல் சமையல் வாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும், செல் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று தொடர்ந்தும் 1550 ரூபாவுக்கு விற்கப்படும் எனவும் அறிவி;க்கப்படுகின்றது.

செல் சமையல் எரிவாயுவை 280 ரூபாவினாலும் லாப் சமையல் எரிவாயுவை 84 ரூபாவினாலும் அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபையினரிடம் குறிப்பிட்ட நிறுவனங்கள் கோரிக்கை விடுத்த போதிலும் விலைச் சூத்திரத்தின்படி இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

திருட்டில் ஈடுபட்ட இலங்கையர் மூவர் பிரித்தானியாவில் ஆயுதங்களுடன் கைது!


லண்டன் நோர்த்தம்ரன் டஸ்ரன்(Duston) Lodge Farm industrial estate பகுதியில் அமைந்திருந்த காஸன் கரி(cash and carry ) வர்த்தக நிலையத்தில் ஆயுதங்கள் சகிதம் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய செய்தி ஸ்தாபனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி வர்த்தக சந்தையின் மனேஜரை கைத்துப்பாக்கி காண்பித்து மிரட்டி பணம் பறிக்க முயன்றபோதும், திருடர்களின் கைவரிசை பலனிக்காத நிலையில் அங்கிருந்த கை தொலைபேசியை எடுத்துக்கொண்டு டஸ்ரன் பகுதியில் இருந்து தப்பி சென்றபோது மோட்டார் வே (நெடுஞ்சாலை) 15 ஏ சந்தி பகுதியில் வைத்து 3வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் ஹெலிகப்டரின் உதவியுடன் வெள்ளை வான் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்கள் மூவரும் இலங்கை பிரஜாவுரிமை கொண்டவர்கள் என்றும் பிரித்தானிய செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளதுடன். கொள்ளையர்கள் தற்போது நோர்த்தம்ஸ்ரன் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாகிவருவதாகவும் பிரித்தானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கடவுளின் குழந்தைகள் நிறுவனத்தினர் விஷேட தேவையுடைய ஒரு தொகுதிப் பிள்ளைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!




கடவுளின் குழந்தைகள் நிறுவனத்தினால் இடம்பெயர்ந்து செட்டிகுளம் மெனிக்பாம் முகாமிலிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த விஷேட தேவையுடைய ஒரு தொகுதிப் பிள்ளைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கடவுளின் குழந்தைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி ஆனந்தகுமார் வடமராட்சியிலுள்ள பிரபல பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்ததுடன் அவர்களிற்கான கல்வி வசதி அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாகவும் இப்பிள்ளைகள் முதற்கட்டமாக புலோலியில் தங்கவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் இப்பிள்ளைகளின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும் என பெற்றோர்களிடம் தெரிவித்ததுடன் கடவுளின் குழந்தைகள் நிறுவனத்தில் ஒப்படைத்தாலும் தாம் அடிக்கடி புலோலிக்குச் சென்று பிள்ளைகளைப் பார்வையிடவுள்ளதாகவும் தெரிவித்தார். இப்பிள்ளைகள் எதிர்காலக் கல்வியிலும் உடல்நிலையிலும் சிறந்து விளங்குவதைத் தாம் கவனத்தில் எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை இப்பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதியளித்ததற்கு இணங்க பெற்றோர்கள் கடவுளின் குழந்தைகள் நிறுவனத்தினருடன் தமது பிள்ளைகளை அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நடவடிக்கை காரணமாக தீவுப்பிரதேசங்களுக்கான சகல பிரயாண சோதனை நடவடிக்கைகளும் கடற்றொழில் அனுமதி வழங்கும் நடவடிக்கைகளும் நீக்கப்பட்டன.


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து யாழிலிருந்து தீவுப்பகுதிகளுக்குச் செல்லும் அல்லைப்பிட்டி மற்றும் பொன்னாலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சகல சோதனை நடவடிக்கைகளும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதுடன் தீவுப்பகுதிக்கான கடற்றொழில் பாஸ் அனுமதியும் அகற்றப்பட்டுள்ளது.

கடந்த கால யுத்த நடவடிக்கைகளால் யாழிலிருந்து பண்ணை ஊடாக தீவுப்பகுதிகளுக்கும் பொன்னாலை ஊடாக காரைநகருக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த சோதனைச்சாவடிகளில் இன்றுமுதல் பிரயாணம் செய்யும் பொதுமக்களுக்கான சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் முற்றாக நீக்கப்பட்டுள்ளன.

யுத்த நடவடிக்கைகளால் யாழ். குடாநாட்டில் மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்படாதிருக்கும் பிரதேசங்கள் பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் தடைகள் மற்றும் வீதி சோதனைகள் உட்பட பொதுமக்களுக்கு இடையூறாகவுள்ள காவலரண்கள் என்பன அண்மை நாட்களாக அமைச்சர் தேவானந்தா அவர்கள் உரிய அதிகாரிகளுடன் நடத்திவரும் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை அடுத்து அகற்றப்பட்டு வருவது தெரிந்ததே. அண்மையில் கீரிமலைக்கு அண்மையிலுள்ள இராணுவ தடுப்புச் சாவடியும் பருத்தித்துறை உயர் பாதுகாப்பு வலயமும் அகற்றப்பட்டு பொது மக்களுக்கு ஏற்ற வகையில் இலகுபடுத்தப்பட்டிருந்திருந்தது.

இதன் மற்றுமோர் கட்டமாக கடந்தவாரம் தீவுப்பிரதேசங்களுக்கும் பொன்னாலை பிரதேசத்திற்கும் விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் பொது மக்களுக்கு இடையூறாகவுள்ள மக்கள் பாவனையற்ற முக்கிய பிரதேசங்கள் பாதுகாப்பு தடைகள் என்பவற்றை நேரடியாக சென்று அவதானித்ததுடன் இவை தொடர்பாக தீவக மற்றும் பொன்னாலை பிரதேச கடற்படை கட்டளை அதிகாரிகளுடனும் பேச்சு வார்த்தை நடாத்தியிருந்தனர்.
இந் நிலையில் இன்றையதினம் முதல் யாழிலிருந்து காரைநகர் மற்றும் யாழிலிருந்து பண்ணை ஊடான சகல தீவுப்பகுதிகளுக்கும் செல்லும் அல்லைப்பிட்டி உட்பட சகல சோதனை நடவடிக்கைகளும் முற்றாக நீக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக இன்றையதினம் தீவுப்பகுதிகளுக்கான போக்குவரத்தை மேற்கொண்ட இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ்களில் பயணம் மேற்கொண்ட பயணிகள் எவ்வித சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமலும் வாகனங்களில் இருந்து இறக்கப்படாமலும் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர். மேலும் வேலணை ஊர்காவற்றுறை பிரதேசங்களில் கடற்றொழில் மேற்கொள்ள விசேட பாஸ் அனுமதி எதுவும் இன்றி குடாநாட்டின் ஏனைய பிரதேசங்களைப் போன்று கடற்றொழல் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்டுவரும் தொடர் நடவடிக்கை காரணமாக அடுத்து வரும் சில தினங்களில் யுத்த நடவடிக்கைகளால் ஏற்படுத்தப்பட்டிருந்த மீதமிருக்கும் பல்வேறு தடைகளும் கட்டங்கட்டமாக அகற்றப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates