jkr
แสดงบทความที่มีป้ายกำกับ இந்தோனேஷியா แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ இந்தோனேஷியா แสดงบทความทั้งหมด

இந்தோனேசியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள், பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர்


முழுமையாக மூன்று மாதங்களை எட்ட இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இந்தோனேசியா, மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் அனுபவித்து வருகின்ற துன்பங்கள் வர்ணிக்கப்படமுடியாதவை.
குழந்தைகள், பெண்கள் உள்ளடங்கலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் அனைவரினதும் மருத்துவ தேவைகளையோ அல்லது அடிப்படை வசதிகளையோ பூர்த்தி செய்து
தரமுடியாது என்ற நிலையில் ஐ.ஓ.எம் நிறுவனம் செயற்பட்டு வருகின்றமை மனவருத்தத்திற்குரியது.

கப்பலில் உள்ள அதிகமானவர்கள் சொறி, சிரங்கு மற்றும் போசக்கு குறைபாடு போன்றவற்றால் மிகக்கடுமையான தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்கள். இவர்களுக்கான மருத்துவ தேவைகள் கோரப்பட்டும் ஐ.ஓ.எம் நிறுவன அதிகாரிகளினால் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்கின்றது.

நோயாளிகளை வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லாமல் துறைமுகச் சோதனை சாவடியில் வைத்து இரத்த பரிசோதனை செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள். அம்பியுலன்ஸ் வண்டிக்கு மாற்றாக சாதரண வாடகை வண்டியே அனுப்பப்படுகின்றமையும் ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை.

எந்த நோயாளியாக இருந்தாலும் 750 மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றே மருத்துவ தேவையை தெரிவிக்க வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. மருத்துவ உதவியை பெற முற்பதிவு செய்யவேண்டும் என்று எண்ணிலடங்காத விதிமுறைகள். இப்படியாக கப்பலில் உள்ளவர்கள் ஓர் குற்றவாளிகளைப்போன்றே நடத்தப்படுவதாகவே உணர்கின்றோம்.

உலக நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை என்பனவும் எங்கள் மீது தங்கள் கருணைப் பார்வையினை இன்னமும் ஏன் செலுத்தவில்லை என்ற ஆதங்கமும் ஏற்பட்டிருக்கின்றது.

இலங்கையில் எங்கள் வாழ்வியல் மறுதலிக்கப்பட்ட நிலையிலேயே இப்படியான அகதி தஞ்சம் கோரி புறப்பட்டோம் என்ற உண்மையினை உலக நாடுகள் உள்ளடங்கலாக ஐக்கிய நாடுகள் சபை உணர்ந்து ஏற்றுக்கொண்டு எங்களையும் மனிதர்களாக நடத்த வேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொள்கின்றோம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்தோனேஷியக் கடலில் 3 மாதங்களாகப் படகில் பரிதவிக்கும் 250 தமிழர்கள் தொற்றுநோய்ப் பிடியில்!


இந்தோனேஷியாவின் மெராக் துறைமுகத்தில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுடன் சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகில் இருப்பவர்களுக்குத் தொற்றுநோய் பரவத் தொடங்கியுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அவுஸ்;திரேலியாவிற்குச் செல்லும் வழியில் இலங்கையர்களுடன் பிடிபட்ட படகை இந்தோனேஷிய அதிகாரிகள் கடந்த மூன்று மாதங்களாகப் கடலிலேயே தடுத்து வைத்துள்ளனர். இந்தப் படகிலிருந்த இலங்கையர் ஒருவர் கடந்த வாரம் நோய்வாய்ப்பட்டு மரணித்திருந்தார். இந்த நிலையில் படகில் உள்ள மேலும் பல இலங்கையர்கள் தொற்றுநோய்த் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

தொடர்ச்சியாக இரத்த வாந்தி எடுத்ததைத் தொடர்ந்து வினுஜா எனும் ஏழு வயதுச் சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளை, 43 வயது நபர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது. மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகின் நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது எனத் தெரிவித்துள்ள அகதிகள் பலர், தாங்கள் நோய் வாய்ப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். படகில் தொற்றுநோய் பரவியுள்ளதா என்பதை அறிவதற்கு வைத்தியர் ஒருவரை அனுப்புமாறும் அவர்கள் கோரியுள்ளனர் என்று கூறப்பட்டது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

படகிலுள்ள இலங்கை அகதிகள் 250பேரும் போராட்டத்தைக் கைவிட்டு தரையிறங்குமாறு அலெக்ஸின் தாயார் கோரிக்கை!

indonesiaalex-asylumஇந்தோனேஷியாவின் மரிக்துறை முகத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டிருக்கும் படகில் தங்கியுள்ள 250 இலங்கை அகதிகளை போராட்டத்தைக் கைவிட்டு இந்தோனேஷியாவில் தரையிறங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை மேற்படி அகதிகள் குழுவின் தலைவர் எனக்கூறப்படும் அலெக்ஸ் என்ற சஞ்சித் குகேந்திரராஜாவின் தாயார் சத்தியா ராஜரட்ணம் முன்வைத்துள்ளார். இலங்கை அகதிகள் 250பேரும் தொடர்ந்து படகில் தங்கியிருப்பதில் எந்தப் பயனுமில்லை. இந்தோனேஷியக் கடற்துறை அதிகாரிகளின் கருத்துக்கு இணங்கி படகிலிருந்து வெளியேறி இந்தோனேஷியாவில் தரையிறங்குமாறு அவர்கள் அனைவரிடமும் நான் கோரிக்கை விடுக்கின்றேன். இதேவேளை அவ்வாறு வெளியேறு வோர் இந்தோனேஷியாவில் தொடர்ந்து தங்கவைக்கப்பட மாட்டார்கள் என்பதனை உறுதி செய்யவேண்டும். இந்தோனேஷிய அதிகாரிகளிடமிருந்து இந்த உறுதிப்பாடு கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் படகிலிருந்து வெளியேறுவார்கள் என நான் நம்புகிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் The Canadian mother of a Sri Lankan asylum seeker has urged her son and his 246 fellow Tamil shipmates to abandon hopes of reaching Australia and to disembark in Indonesia from the moored freighter where they have languished for almost two months.

The Tamils' bid to reach Australia by sea was thwarted in October when Australian Prime Minister Kevin Rudd personally telephoned Indonesian President Susilo Bambang Yudhoyono and asked him to stop them.

They would have been one of the largest shipments of asylum seekers to ever reach Australian waters, heaping political pressure on Rudd's government to stem a growing flow of refugees.

Most of the Tamils have capitalized on their public profile by refusing to leave their wooden ship at the port of Merak, 120 kilometres west of Jakarta, unless Australia accepts them. Australia denies any responsibility.

Sathia Rajaratnam, a 46-year-old electronics businesswoman from Vancouver, said Thursday that she came to Indonesia just over a week ago in the hope of ending the stalemate.

After failing to broker a deal for her son, 27-year-old Sanjeev "Alex" Kuhendrarajah, during meetings with officials from the Indonesian government, United Nations High Commissioner for Refugees and the Canadian Embassy, Rajaratnam said she had urged him to leave the boat unconditionally.

"I'm very sad and very upset, but there's nothing we can do," Rajaratnam told The Associated Press by phone from Merak.

"If someone guaranteed them that they are allowed to access communication tools and live in a decent place, then they will consider that, but no one will" give such guarantees, she added.

Her son, who was raised in Canada but deported in 2003 after serving a prison sentence, said the asylum seekers would reject any deal offered by the Indonesians to leave the boat.

"The Indonesian government is not trustworthy," Kuhendrarajah told AP by phone.

Merak immigration official Harry Purwanto said that the local detention centre was full, but the government would confine them to rented accommodation if they left the boat.

"We won't force them to leave," Purwanto said.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அகதிகளை இந்தோனேஷிய முகாமில் ஒப்படைக்கத் தீர்மானம் : ஸ்டீபன் ஸ்மித்


படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த வேளையில், இந்தோனேஷியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 78 இலங்கையர்களைச் சிங்கப்பூருக்கு அருகிலுள்ள இந்தோனேஷியத் தடுப்பு முகாமொன்றில் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்தோனேஷியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இலங்கைத் தமிழர்களை மனித நேய அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இந்தோனேஷிய அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்தோ. மாகாண ஆளுநர் மறுப்பு

அதே வேளை, இந்தோனேஷிய, ரியோ தீவுகள் மாகாண ஆளுநர் இஸ்மெத் அப்துல்லா இலங்கையரை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளதாக பிறிதொரு செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

படகை தீ வைத்து எரிக்கப்போவதாக இலங்கை அகதிகள் அச்சுறுத்தல்


இந்தோனேஷியாவில் மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை படகு மக்கள் தாங்கள் கிறிஸ்மஸ் தீவுக்குச் செல்ல அனுமதிக்கப்படாத பட்சத்தில் தங்கள் படகை தீ வைத்து கொளுத்தப் போவதாக எச்சரித்துள்ளனர் என இந்தேõனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல அனுமதி கிட்டுமா? கிட்டாதா என்ற காரணத்தினால் ஆத்திரமடைந்துள்ள இவர்கள் தற்பொழுது தங்களுக்கு அனுமதி கிடைக்காது போனால் படகை கொளுத்துவதைத் தவிர வேறு வழி இல்லையென கூறியுள்ளதாக மனித உரிமை அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவிலிருந்தும், கிறிஸ்மஸ் தீவை நோக்கி 30 அடி நீளமான மரக் கப்பலொன்றில் இம்மாத ஆரம்பத்தில் சுமார் 260 அகதிகள் சென்று கொண்டிருந்த நிலையில் இந்தோனேஷிய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் அவர்களின் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், மெராக் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இவர்களுக்குத் தேவையான உணவுகள், மருந்து வகைகள் என்பன சர்வதேச அமைப்பொன்றினால் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, குறித்த படகு மக்கள் படகை கைவிட்டு தற்காலிக குடியிருப்புகளுக்கு வருவதற்கு சம்மதிப்பார்களேயாயின் அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுமென சட்ட மற்றும் மனித உரிமைகள் திணைக்களத்தின் அதிகாரி பொப்பி புடியஸ்வத்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, படகிலுள்ள பெரும்பாலானவர்கள் சுவாசித்தல் மற்றும் தோல் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் படகுக்குள் சனநெரிசல் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அகதிகள் இந்தோனேஷியா கடற்கரைப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் குறித்து இந்தோனேஷியாவே கவலை கொள்ள வேண்டுமென அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சட்டவிரோதக் குடியேற்றம் - இன்ரபோலின் உதவி கோரப்பட்டுள்ளது.


இந்தோனேஷியாவிலும் கனடாவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தொடர்பாக இன்ரர்போல் உதவியுடன் விசாரணை நடத்த இலங்கை தயாராகியுள்ளது.

இன்ரபோல் எனப்படும் சர்வதேசப் பொலிசாருடன் இணைந்து இலங்கை குற்றப் புலனாய்வுப் பொலிசார் இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தொடர்பான தகவல்களை இன்ரர்போலூடாகப் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் இயங்கும் 'சட்டவிரோதக் குடியேற்றவாசிகளைத் தடுக்கும் பிரிவு' தெரிவித்துள்ளது.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கு சர்வதேச ரீதியில் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இவ்வாறான சட்டவிரோதக் குடியேற்றத்துக்கு முயற்சித்த 265 பேர் இந்தோனேஷியாவிலும், 76 பேர் கனடாவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்தோனேஷியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர் மத்தியில் சட்ட விரோத ஆட்கடத்தலில் ஈடுபடும் பிரபலமானவர் ஒருவர் இருப்பதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

கப்டன் ப்ராம் என அறியப்படும் ஏப்ரகாம் லோஹெனாஸ்பெஸி என்பவர் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுடன் படகில் இருப்பதாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்தார்.

இவர் முன்னர் சட்டவிரோத ஆட்கடத்தலுக்காக இந்தோனேஷியாவில் தண்டனை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அவுஸ்திரிலியாவிற்கு இலங்கை தமிழ் அகதிகள் அனுப்பப்பட்டு இந்தோனேசியாவில் பிடிபட்ட கப்பல் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்..


மலேசியாவில் இருந்து செயற்படும் புலி உறுப்பினர்களால் கடந்த வாரம் மலேசியாவில் இருந்து அவுஸ்திரிலியாவிற்கு இலங்கை தமிழ் அகதிகள் அனுப்பப்பட்டு இந்தோனேசியாவில் பிடிபட்ட கப்பல் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளன புலிகளின் மறைந்த தலைவர் வே. பிரபாகரனின் நேரடி கண்கானிப்பின் கீழ் செயற்பட்ட புலிகளின் கப்பல்களுக்கு பொறுப்பான பிரித்தானியா பிரஜையான சங்கர் மற்றும் நோர்வே பிரஜையும் இலங்கை தமிழருமான ஸ்டிபன் ராஜா என்று அழைக்கபடும் சோதி மற்றும் ஜேர்மனிய பாபு பிரித்தானியாவில் வசிக்கும் புலிகளின் உறுப்பினரான மோகன் மற்றும் மலேசியாவில் உள்ள கண்ணன் மற்றும் டேனியல் புலிகளின் செயற்பாட்டாளாரும் மலேசியாவில் வசிப்பவருமான ரொனால்ட் அல்லது சுகு இந்தோனிசியாவில் உள்ள பாபு மற்றும் மதி ஆகியோர் இக்கப்பல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. மோகன் தற்போது இந்தோனிசியாவில் பதுங்கியுள்ளதாக தெரிய வருகிறது ஏனையோர் மலேசியாவில் வசித்து வருவதாகவும் இதில் ரொனால்ட் அல்லது சுகு என்பவர் சர்வேதேசரீதியாக புலிகளின் பணத்தினை கையாள்பவர் எனவும் இவர் மலேசியாவில் ஆடம்பர மாளிகை ஒன்றில் புலிகளின் பணத்தில் வாழ்ந்து வருபவர் எனவும் மலோசியாவில் அதிவிலைகூடிய பெறுமதிமிக்க வாகனத்தில் வலம் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கபடுகிறது.

இதில் சோதியும் ரொனால்ட் அல்லது சுகு வன்னிமுகாமில் உள்ள புலி உறுப்பினர்களை அவுஸ்திரேலியாவிற்க்கு அனுப்புவதற்க்கு கப்பல் வாங்க வேண்டும் என கனடாவில் மூன்று லட்சம் டொலர்களை சேகரித்து அதில் 35.000 டொலர்களுக்கு பாவனைக்கு உதவாத படகு ஒன்றினை வாங்கி அதில் 30 புலிஉறுப்பினர்களையும் அத்தோடு ஏனைய 230பேரிடம் 15.000 டொலர்கள் வீதம் பெற்றுக் கொண்டு அப்படகில் அனுப்பி வைத்த படகை தற்போது இந்தோனிசியா கடற்படையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடதக்கது. இதன் ஊடாக அம்மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொள்ளாது செயற்பட்டதன் மூலம் அம்மக்களை பலிகொடுக்கவும் துணிந்துள்ளனர்.

ரொனாலட் சோதி போன்றோர் மலேசியாவில் பயங்கரவாத பாதளாகுழுக்கள் போன்று செயற்படுவதாகவும் மலேசியாவிக்கு செல்லுகின்ற தமிழ் செல்வந்தர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களை கடத்தியும் மிரட்டியும் பணம்பெறும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெரிய வருகிறது அண்மையில் தமிழ் வர்த்தகர் ஒருவரின் மகனை கடத்தி மூன்று மில்லியன் டொலர்களை வழங்கியபின் அவர் விடுவிக்கபட்ட சம்பவமும் குறிப்பிடதக்கது.

இக்குழுவினர் சட்டத்திற்கு முரணான வகையில் புலிகளின் பெயரை அல்லது தமிழ் மக்களின் பெயரை பயன்படுத்தி பலகோடி டாலர்களை கொள்ளைலாபமாக பெற்று வருகின்ற போதிலும் அப்பணத்தினை பாதிக்கப்பட்ட புலிஉறுப்பினர்களின் குடும்பத்தினருக்கோ அல்லது போராட்டத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கோ செலவழிப்பதுமில்லை மாறாக தாங்களின் தனிப்பட்ட உல்லாச வாழக்கைக்கே செலவழிக்கபடுகிறது என்பதும் குறிப்பிடதக்கது இவர்களின் நிழற்படங்களை இணையதளம் வெகுவிரைவில் வெளியிட உள்ளது.
நன்றி.. ரிபிசி வானொலி செய்திப் பிரிவு –லண்டன்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்தோனேஷியக் கப்பலில் இலங்கைத் தமிழர் தொடர்ந்தும் உண்ணாவிரதம்:இருவர் வைத்தியசாலையில்


இந்தோனேஷியக் கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கப்பலில் இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கப்பலில் உள்ள 250க்கும் அதிகமான தமிழர்கள் புகலிடம் கோரி ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினாலும் அவர்களை ஏற்க ஆஸ்திரேலிய மறுத்து வருகின்ற நிலையில் இந்த உண்ணாவிரதம் தொடர்கிறது.

பிந்திக் கிடைத்த செய்தி

உண்ணாவிரதப் போராட்டத்தில், ஈடுபட்டுள்ள இலங்கையர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்று முன் கிடைத்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் பின்னர், அவர்களுடன் இணக்கப்பாடு ஒன்றை காண்பது தொடர்பில் இந்தோனேஷிய கடற்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இதற்கிடையில் கப்பலில் உள்ள அகதிகள் தற்போது இரண்டாகப் பிரிந்துள்ளதாக இந்தோனேஷியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எங்கேனும் ஓர் இடத்தில் குடியமரும் திட்டத்துடன் ஒரு குழுவும், வாக்குவாதங்களில் ஈடுபட்டு அவுஸ்திரேலியா செல்லும் திட்டத்தைத் தொடர விரும்பும் இன்னொரு குழுவுமாக அவர்கள் பிரிந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் உள்ள குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கி வருவதாக இந்தோனேஷியாவின் பான்டென் மாகாணத்தின் குடிவரவுத் துறை தலைமை அதிகாரி ஹரி புருவான்டோ தெரிவித்துள்ளார்.

அகதிகளுக்கு ஆஸி. .தஞ்சமளிக்க வேண்டும் : ஐநாஅகதிகள் பேரவை

தமது நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அகதிகளை ஏற்றுக்கொள்ளாமை தொடர்பில் ஒரு நாடு என்ற அடிப்படையில் அவுஸ்திரேலியாவுக்கு மன்னிப்பு வழங்க முடியாது என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான பேரவை தெரிவித்துள்ளது.

தற்போது இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 260 இலங்கையர்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் இதனை தெரிவித்துள்ளது.

அதன் பிரதிநிதி ரிச்சட்டவல் கூறுகையில்,

"இந்தோனேஷிய அரசாங்கம் தடுத்து வைத்துள்ள இலங்கையர்களின் விபரங்களைத் திரட்டுமானால் அவர்களுக்கு உதவி செய்ய ஐக்கிய நாடுகள் தயாராக இருக்கின்றது.

அகதிகள் கோரும் பட்சத்தில் அவர்களை மீள குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும். அவுஸ்திரேலியாவிடம் அவர்களில் சிலரை ஏற்க கோரப்படும்.

அதேவேளை, குடிவரவு கொள்கையின் தெளிவின்மை மற்றும் இலகு தன்மை என்பன அகதிகளின் வருகையை அதிகரிக்கலாம்.

அவுஸ்திரேலியாவே அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்குச் சரியான பாதுகாப்பு கொடுக்கும் நாடாக நான் கருதுகிறேன். எனினும் அரசியல் தஞ்சம் வழங்கும்போது அவதானமாக இருக்கவேண்டும்.

தற்போது இந்தோனேஷிய கடற்கரையில் நங்கூரமிட்டிருக்கும் கப்பலிலுள்ள இலங்கையர்களுக்கு மன்னிப்பு வழங்குவதே பொருத்தமானதாக இருக்கும். அதுவே அவர்களுக்கான பாதுகாப்பாகவும் இருக்கும்" என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்


earthquake_300இந்தோனேஷிய, சுமத்ராவில் சற்று முன்னர் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரிச்டர் அளவில் இது 7.9 ஆகப் பதியப்பட்டுள்ளது.

இது மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நில நடுக்கத்தை அடுத்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சேத விவரங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க சமாவோ தீவில் இன்று காலை ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் 100 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates