jkr
แสดงบทความที่มีป้ายกำกับ கல்முனை แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ கல்முனை แสดงบทความทั้งหมด

ஜெனரல் சரத்பொன்சேகா பங்குபற்றும் பொதுக்கூட்டம் கல்முனையில்-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-


எதிர்வரும் 24ம் திகதி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா பங்கேற்கும் பொதுக்கூட்டம் அம்பாறை மாவட்டம் கல்முனையில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சாரக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் தாம் திருப்தியடைந்துள்ளதாகவும் ஹக்கீம் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கல்முனையில் ரூ. 44 லட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுக்கள் பறிமுதல்

கொழும்பிலிருந்து சட்டவிரோதமாக கல்முனைப் பிரதேசத்திற்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 44 லட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களைப் பொலிஸார் இன்று காலை 9.00 மணியளவில் கைப்பற்றியுள்ளனர்.

மினுவாங்கொடை வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான லொறி ஒன்றில் கோழித்தீன் ஏற்றிவந்த சாக்குகளுக்கு இடையில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே, கல்முனை தரவைக் கோயில் சந்தியில் வைத்து லொறியைத் தாம் இடைமறித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை பொலிஸ் நிலையத் தலைமைப் பரிசோதகர் பி.ஏ.எஸ். சிரான் பெரேரா தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்தச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

லொறி சாரதியும் உதவிக்கு வந்த நபர் ஒருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக சிரான் பெரேரா மேலும் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அம்பாறை மாவட்டம் கல்முனை மருதமுனைப் பகுதியில் முதலை


அம்பாறை மாவட்டம் கல்முனை மருதமுனைப் பகுதியில் முதலை ஒன்றினை பிரதேச மக்கள் பிடித்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள குளமொன்றிலிருந்து மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதிக்கு வந்தபோதே இன்று அதிகாலையில் குறித்த முதலையினைப் பிரதேச மக்கள் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முதலையானது பிரதேசத்திலுள்ள மக்களைத் தாக்க முற்பட்ட போதே மடக்கிப் பிடிக்கப்பட்டதோடு பின்னர் விலங்குகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கல்முனை, காரைதீவு பிரதேச சபைக்கும் இடைப்பட்ட வீதியில் மழை நீர் தேங்கியுள்ளமையால் பாதிப்பு


கல்முனை மாநகர சபைக்கும், காரைதீவு பிரதேச சபைக்கும் இடைப்பட்ட மாளிகா வீதி முறையான வடிகால் வசதியின்றி மழைநீர் வெள்ளமாக தேங்கி நிற்கின்றது.

இதனால் இவ்வீதியால் போக்குவரத்து செய்வதில் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

இவ்வீதியின் அருகில் வைத்தியசாலை, பாடசாலை என்பனவும் அமைந்திருக்கின்றன. சம்மந்தப்பட்டவர்கள் இவ்வீதியின் பிரச்சினையை தீற்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates