ஜெனரல் சரத்பொன்சேகா பங்குபற்றும் பொதுக்கூட்டம் கல்முனையில்-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
எதிர்வரும் 24ம் திகதி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா பங்கேற்கும் பொதுக்கூட்டம் அம்பாறை மாவட்டம் கல்முனையில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சாரக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் தாம் திருப்தியடைந்துள்ளதாகவும் ஹக்கீம் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
0 Response to "ஜெனரல் சரத்பொன்சேகா பங்குபற்றும் பொதுக்கூட்டம் கல்முனையில்-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-"
แสดงความคิดเห็น