ஐயப்பாட்டில் நகர்ந்து கொண்டிருக்கும் நாடுகடந்த அரசு
ஐயப்பாட்டில் நகர்ந்து கொண்டிருக்கும் நாடுகடந்த அரசு… போலிப்பிரச்சாரமாக மக்கள் கருதி விடக்கூடாது என்பதற்காகவே இதனை விபரிக்க வேண்டியுள்ளது. சாதாரணமாக போடப்படுகின்ற கணக்கிற்கும், கணிப்பீட்டில் போடப்படுகின்ற கணக்கிற்கும் பலத்த வேறுபாடு காணப்படுகின்ற போதிலும், அது சமம் என்றே நாடுகடந்த அறிவுடைய செயற்குழு தெரிவிக்கின்றது.
நாடுகடந்தும் செயற்படுவதற்கு பல லட்சக்கணக்கான வேலைத்திட்டங்கள் இருக்க, என்ன செய்வதென்றே முழியைப்பிதுக்கிக் கொண்டு இருக்கின்றார்கள் இந்த செயற்குழுவினர். கணிப்பீட்டின்போது 300 000 தமிழர்கள் கனடாவில் இருக்கின்றார்கள் என்று வாய்ஜாலம் காட்டிவிட்டு, இப்போது, 50ஆயிரம் வாக்காளர்கள் தொகையில் பலத்த வீழ்ச்சியைக்காட்டி அதுதான் மொத்த தொகை என்று வெளிப்படுத்துவது மக்களை முட்டாள்பட்டம் கட்டுவதாக இருக்கின்றது.
எது வாக்கெடுப்பின் சரியான கணிப்பீடுகள்… நாடுகடந்த அரசு மக்களை ஏமாற்றும் வேலையா???
ஆரம்பத்தில் புலத்தில் மக்கள் அதிகமாக இருப்பதாக மார்தட்டிவிட்டு நாடுகடந்த அரசின் வாக்கெடுப்பில் மட்டும் மக்கள் தொகையின் அளவை குறைத்துக்காட்டுவது ஏன் என்று புரியவில்லை.
உண்மையில் கனடாவில் ஈழத்தமிழர்களின் மொத்தத்தொகை அதிலும் 16 வயதிற்கு மேற்பட்ட தமிழர்களின் தொகைதான் என்ன? அதேபோன்று பிரான்சில், மற்றும் நோர்வேயில் உண்மையான மக்கள் தெகை எவ்வளவு என்ற வினா எழத்தான் செய்கின்றன.
“தமிழர்களுக்கு சுபீட்ஷமான வாழ்வு, மக்களை மக்களால் ஆழுகின்ற ஆட்சி அதிலும் தமிழர்களை தமிழர்களால் ஆழுகின்ற ஆட்சியை நூற்றுக்கு நூறுவீத தமிழர்கள் ஏற்றுத்தான் கொண்டுள்ளார்கள் இதற்கொரு தேர்தல் கூத்து அவசியமற்றது.”
இத்தேர்தல், தாம் தமது அமைப்பை வெளிப்படுத்தவேயொழிய, தமிழ் மக்களை நோக்கியல்ல என்பது தெட்டத்தெளிவாக புரிந்து கொள்ளமுடிகின்றது.
இதுதொடர்பான ஆக்கங்களை யாரும் விமர்சிக்கக்கூடாது அவ்வாறு விமர்சித்தால் அவர்கள் யாராக இருந்தாலும் அது மாற்றுக்கருத்துடையோர்கள் என்ற பட்டம். இதில் பிரபாகரனும் விலக்கல்ல… அதனால்தான் இப்போது பிரபா குழு யார், தமிழர்களின் உண்மையான விடிவுநோக்கிச் செல்லும் குழு யார் என்று புரியாது மக்கள் திண்டாடுகின்றார்கள்.
எனக்கு ஒரு தேவை இருக்கிறது, அதுகூட நாடுகடந்த அரசால் மேற்கொள்ள வேண்டிய தேவை என்று அச்செயற்குழு அறிவித்திருந்த மின்னஞ்சல் முகவரிக்கு மனுசெய்தேன். அந்த மனு அவர்களிடம் போய்ச்சேர்ந்ததா இல்லையா என்றே தெரியவில்லை!!!
இப்படி மக்களின் தேவைகளை அறிய முடியாத அல்லது ஏற்றுக்கொள்ளாத அமைப்பு எதைச்சாதிக்கப்போகின்றது இத்தேர்தலால் என்ன நடக்கப்போகுது என்பதே எனக்கும் புரியவில்லை.
புலிகளின் ஒரு கட்டுனக்குள் இருந்த அமைப்பு இப்போது கட்டுக்கலைந்து சின்னாபின்னளமாகிவிட்டபோதிலும் “மீசையில் மண்ஒட்டவில்லை” என்பது, கேவலமாக இருக்கின்றது. மீசையில் மண் ஒட்டித்தான் விட்டது அதைத்தட்டிவிட்டு, அடுத்த கட்டத்திற்குள் நாம் செல்ல வேண்டாமா?
புலிகளுக்கு ஆதரவாளர்களா, எதிர்ப்பாளர்களா என்பதல்ல இப்போதைய அவசியம்!!! தமிழர்களுக்கு ஆதரவாளர்களா, தமிழர்களுக்காக தம்மை ஈடுபடுத்துபவர்களா என்பதைத்தான் நாம் இப்போது கவனிக்க வேண்டிய விடயம் என்பதனை, மரமண்டைகளுக்கு உறைக்கும்படி யாராவது மணிகட்டிய மாடு முட்டிச்சொன்னால்தான் புரியும் போலிருக்கின்றது.
புலிகள் மீண்டும் ஒரு செயலில் இறங்கத்தான் போகின்றார்கள். அது சொல்லி இறங்குகின்ற வேலையல்ல. அப்படிச்சொல்லி இறங்குகின்றவர்கள் புலிகளும் அல்ல. தலைவரின் அடிகளின் சிறப்பே அதுதான். இதுகூடத்தெரியாதவர்கள் புலிகளைப்பற்றி மெருமை கொள்கின்றார்கள். அவ்வாறானவர்கள் உங்கள் வாய்களை மூடி நடப்பதை மட்டும் பாருங்கள்.
இதற்கிடையில் புலத்தில் நிதிகளை புலிகள் பெயரில் திரட்டியவர்கள், மற்றும் நாடுகடந்த அமைப்பு அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், கரிதாஸ் அமைப்பு தமிழர்களின் அபிவிருத்திக்காக உதவியினைக்கோரியுள்ளது.
எனவே தங்களிடம் முடக்கப்பட்டிருக்கும் நிதிகளை அரசுக்கு கொடுக்காமல் கரிதாஸ் அமைப்பிற்குக் கொடுத்து தமிழர்களுக்கு உதவுங்கள். மீண்டும் எமது எழுற்சி போராட்டம் பலத்தோடு தொடங்கும் அப்போது, இதைவிட மேலான பங்களிப்பை வழங்குங்கள்… ஒதுங்கி பதுங்காதீர்கள். தமிழர்களுக்கு உதவுவதே உங்கள் குறிக்கோள் அது யார் மூலமாகப்போனாலும் அது வெற்றியே!!! முன்பு வணங்கா மண்ணுக்குச் சொன்னது போல் அது போனாலும் வெற்றி போகாட்டியும் வெற்றி என்று முட்டாள்தனமாக வாக்குறுதிகளை வழங்காதீர்கள். அது உங்கள் தரத்தைக்குறைத்துவிடும். தக்க பதிலுக்குக்காத்திருக்கின்றேன். நன்றி
0 Response to "ஐயப்பாட்டில் நகர்ந்து கொண்டிருக்கும் நாடுகடந்த அரசு"
แสดงความคิดเห็น