jkr
แสดงบทความที่มีป้ายกำกับ சுவிஸில் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ சுவிஸில் แสดงบทความทั้งหมด

வட்டுக்கோட்டை (தமிழீழ?) தீர்மானத்தை முன்வைத்து ஐரோப்பிய நாடுகளில் தேர்தலும், இலங்கைத் தூதுவராலயங்களின் நடவடிக்கைகளும்.. (சுவிஸில் நடப்பதென்ன??)


வட்டுக்கோட்டை தீர்மானம் என்னும் தமிழீழத் தீர்மானத்துக்கான கோரிக்கையினை முன்வைத்து எதிர்வரும் 23ம் மற்றும் 24ம் திகதிகளில் சுவிஸ்லாந்தின் சகல மாநிலங்களிலும் தேர்தல் ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும், அதேபோன்று ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் குறித்த தேர்தல் நடத்தப்படவிருப்பதாகவும் தெரிய வருகின்றது. இதேவேளை மேற்படி தேர்தலில் கலந்து கொள்வோர் தேர்தலுக்கான பங்களிப்புக்களைச் செய்வோர் மற்றும் வாக்களிக்கச் செல்வோர் உள்ளிட்ட அனைவரையும் வீடியோ ஒளிப்பதிவு செய்யவும், புகைப்படம் எடுக்கவும் அந்தந்த நாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவராலயங்களின் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிரடிக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிரடி இணையத்துடன் நெருங்கிய தொடர்பினைப் பேணிவரும் சுவிஸ்லாந்திலுள்ள மாற்றுத்தமிழ் அமைப்பொன்றின் முக்கியஸ்தரிடம் வினவிய போது,

இவ்விடயம் தொடர்பில் தாமும் அறிந்துள்ளதாகவும், தம்மிடமும் இதுகுறித்து சிலர் கேட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் மேலும் தகவல் தருகையில், குறித்த வாக்கெடுப்பு குறித்த எந்த விடயத்திலும் தலையிடவோ அதுகுறித்து அலட்டிக் கொள்ளவோ நாம் விரும்பவில்லை. ஏனெனில் இலங்கையில் புலிகள் ஒழிக்கப்பட்டதும் புலிகளின் போராட்டமும் ஓய்ந்து விட்டது. வெளிநாடுகளில் உள்ள ஒரு சிலரின் நடவடிக்கைகளால் அங்கு எந்த நன்மையும் எமது மக்களுக்கு ஏற்படப் போவதில்லை. வெளிநாடுகளிலிருந்து புலிகள் இயக்கத்தை தவறாக வழிநடத்திய இவர்கள் தமது இருப்பினை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் தமிழீழம் என்ற மாயைக்குள் இருந்து வெளியேவர முடியாத மனநிலையைக் கொண்டும் இருக்கின்றனர். இவர்களால் மக்களுக்காக எதனையுமே செய்ய முடியாது. எம்மைப் பொறுத்த மட்டில் அந்த மக்களுக்காக ஏதாவது நல்லதைச் செய்ய விரும்புகிறோமேயொழிய இதுபோன்று அர்த்தமற்ற அடைய முடியாத மாயைக்குள் உள்ளோர் பற்றி கவனத்தில் எடுத்துக் கொள்ளவும் போவதில்லை. இனிவரும் காலங்களிலும் புலிகளின் பெயரால் செய்யப்படும் இவ்வாறான வேலைகளைப் பற்றி கதைத்து மக்களின் உரிமைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிறிதொரு தகவலின்படி கடந்த தைமாதம் ஜெனீவாவில் புலிகளால் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒருவர் கடந்தமாத இறுதியில் விடுமுறைக்காக இலங்கை சென்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இரகசியப் பொலீசாரினால் “சுவிஸில் புலிகளின் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் என்பற்றில் புலிக்கொடியுடன் முன்னின்று இலங்கை அரசுக்கெதிராக செயற்பட்டதாக” குற்றம் சாட்டி விசாரணைக்காக கைது செய்யப்பட்டு பின்னர் அவர் சுவீஸிலுள்ள மாற்றுத் தமிழ்க்கட்சி அமைப்பொன்றின் முக்கியஸ்தரின் வேண்டுகோளுக்கிணங்க விசாரணையின் முடிவில் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டதாக தெரிய வந்தது.

இதுகுறித்தும் எமது இணையம் குறித்த தமிழ் அமைப்பின் முக்கியஸ்தரிடம் வினவிய போது, அந்த சம்பவம் உண்மையே. ஆயினும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர் புலி உறுப்பினரோ அன்றில் புலி ஆதரவாளரோ அல்ல. வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது மக்கள் கொல்லப்படுவதை கருத்திற் கொண்டே அவர் குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் எமது நல்லநண்பர் என்ற ரீதியிலும் அவர் புலிகளின் வன்முறைகளுக்கோ பாசிசத்துக்கோ துணைபோகக் கூடியவரோ அல்லவென்ற ரீதியிலும் அவருக்கான உத்தரவாதத்தை வழங்கி அவரின் விடுதலைக்கான எமது கூடுதல் பங்களிப்பினை செலுத்தினோம் என்று தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புலிகளின் “புதிய” சுவிஸ் கிளையினரால் நடத்தப்பட்ட மாவீரர்தின நிகழ்வில் கண்ணீர்புகை பிரயோகம், இளைஞர்மீது கண்மூடித்தனமான தாக்குதல்..

Flag Switzerland animated gif 240x180சுவிஸ்லாந்தின் ப்ரீபேர்க் என்னுமிடத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான மண்டபத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை (27.11.2009) அன்று புலிகள் இயக்கத்தின் “புதிய” சுவிஸ் கிளையினரால் நடத்தப்பட்ட மாவீரர்தின நிகழ்வுகளில் பாம்பு குறூப் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்ளும் தெருச்சண்டியர் குழுவிற்கும், இளைஞர் குழுவொன்றுக்குமிடையில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால் அங்கு கண்ணீர்ப்புகை ஒன்று பிரயோகம் செய்யப்பட்டதுடன், இதன்காரணமாக அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் குழப்ப நிலையும் ஏற்பட்டிருந்தது. இதன்போது ஏற்பட்ட கைகலப்பு மற்றும் மோதல்களின் போது புலிகளினாலும், மற்றும் பெருமளவு பொதுமக்களினாலும், பாம்புகுறூப் என்னும் தெருச்சண்டியர்களான “சி”, “க” போன்ற ரவுடிகளாலும் (தற்போது சுவிஸ் பொலிசாரின் விசாரணையில் உள்ளதால் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளது) குறித்த இளைஞர்மீது பலத்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதுடன், போத்தல்கள், கத்தி, கற்கள் மற்றும் இரும்பு கதிரை போன்றவற்றினாலும் அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக தற்போது அவ்விளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதனையடுத்து இன்று விசாரணைகளை மேற்கொண்ட சுவீஸ் பொலீசார் குறித்த நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ கமெராவின் பதிவுகளைக் கொண்டு நடந்த சம்பவத்தை அவதானித்ததன் ஊடாக தாக்குதல் நடத்தியவர்களில் பெரும்பாலானோரை இனங்கண்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள சுவிஸ் பொலீசார், இனிவரும் காலங்களில் இதுபோன்ற மாவீரர்தினம் போன்ற நிகழ்வுகளைத் தடை செய்வதற்கு ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதேநேரம் மேற்படி சம்பவம் குறித்து தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவ்விளைஞரிடம் “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த பிரிவினர் நடத்திய மாவீரர்தின நிகழ்வின் போது இடம்பெற்ற கண்ணீர்ப் புகைப்பிரயோக சம்பவத்திற்கும் தனக்கும் எதுவித சம்பந்தமும் இல்லையென்றும், தனக்கும் தனது நண்பர்களுக்கும், பாம்புகுறுப் என்கிற தெருச்சண்டியர் குழுவுக்குமிடையில் இருந்த முன்விரோதம் காரணமாகவே தன்மீதான இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப் பட்டிருப்பதாகவும், இது குறித்து பொலீசாரிடம் முறையிட்டுள்ள நிலையில் பொலீசார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும், மிகவிரைவில் அவர்கள் நல்லதொரு சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழ்-முஸ்லிம் கட்சித் தலைவர்களின் மாநாடு சுவிஸில் நேற்று ஆரம்பம்


தமிழ்ப் பேசும் மக்கள் தொடர்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று சுவிட்சர்லாந்தில் நடைபெறுகிறது.

தமிழ்-முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் இக்கலந்துரையாடல் நேற்று முதல் நாளை வரை மூன்று நாட்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெறுகின்றது.

லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தமிழர் தகவல் மையம் என்ற தன்னார்வ தொண்டர் அமைப்பே இந்த சந்திப்புக்கும் கலந்துரையாடலுக்குமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இனங்களிடையே ஒற்றுமை, எதிர்கால அரசியல் தீர்வு யோசனைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்துக் கருத்துக்கள் இந்த சந்திப்பிலும் ஒன்று கூடலிலும் கலந்துரையாடப்படும் எனத் தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா (இலங்கை தமிழரசுக் கட்சி), சுரேஷ் பிரேமச்சந்திரன்(ஈ.பி.ஆர்.எல்.எப்.), கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்), ஹென்றி மகேந்திரன்(டெலோ) ஆகியோரும் ஏனைய தமிழ் கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பி செயலாளர்நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 'புளொட்'தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா அணி) தலைவர் கே.ஸ்ரீதரன்(சுகு),தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றுகின்றனர்.

முஸ்லிம் அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும்,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்,தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இக்கலந்துரையாடலில் சர்வதேச தரப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள், முக்கியஸ்தர்கள் ஆலோசகர்களாகக் கலந்து கொண்டு கருத்துரை வழங்குவார்கள என தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தற்போது சுவிற்சர்லாந்தில் தங்கியிருக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கட்சி ரீதியாகவும்,கூட்டாகவும் அந்நாட்டிலுள்ள புலம்பெயர் தமிழ்ப் பேசும் மக்கள் அமைப்புக்களுடன் பல்வேறு சந்திப்புகளிலும் ஒன்று கூடல்களிலும் கலந்து கொள்வர் எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates