jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ஜனாதிபதி தேர்தல் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ஜனாதிபதி தேர்தல் แสดงบทความทั้งหมด

கடந்த கால தேர்தல்களை விடவும் இம்முறை வன்முறைகள் அதிகரிப்பு ஆசிய தேர்தல் அதிகார அமையம்


கடந்த கால தேர்தல்களை விடவும் இம்முறை தேர்தலில் வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ள ஆசிய தேர்தல் அதிகார அமையம் வாக்களிப்பு நிலையங்களையும் வாக்கெண்ணும் நிலையங்களையும் நாம் கண்காணிப்போம் என்றும் தெரிவித்துள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகளை சகல மாவட்டங்களிலும் மேற்கொள்வோம் எனினும் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுக்கும் செல்லமுடியாது என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக வருகைதந்துள்ள 13 நாடுகளை சேர்ந்த 40 கண்காணிப்பாளர்கள் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

தாய்வான் தேர்தல் ஆணையாளர் கலாநிதி பன் வெல்டா தலைமையில் செயற்படுகின்ற ஆசிய தேர்தல் அதிகார அமையத்தில் ஆப்கானிஸ்தானில் இருவர், பங்களாதேஷிலிருந்து நால்வரும்,பூட்டானிலிருந்து மூவரும், கம்போடியாவிலிருந்து மூவரும் இந்தியாவிலிருந்து நால்வரும், இந்தோனேசியாவிலிருந்து ஒருவரும், கஸகஸ்தானிலிருந்து மூவரும் கொரியாவிலிருந்து மூவரும், மலேசியாவிலிருந்து இருவரும், நேபாளிலிருந்து மூவரும், பாகிஸ்தானிலிருந்து நால்வரும், தாய்வானிலிருந்து ஐவரும், பப்புவா நியுகினியனிலிருந்து இருவருமாக உயர்மட்ட அதிகாரிகள் அடங்குகின்றனர்.

ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு அமையத்தின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில்,

சுயாதீனமான நிறுவனங்களாகவே ஆசிய தேர்தல் அதிகார அமையம் செயற்படுகின்றது. அமையத்தில் அங்கம் வகிக்கின்றவர்கள் கடந்த 18 ஆம் திகதி முதல் வருகைதந்தனர். 25 மாவட்டங்களுக்கும் நாளை( இன்று சனிக்கிழமை) செல்லவுள்ளனர். கடந்த காலங்களை விடவும் இந்த தேர்தலில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றாலும் வெளிப்படையாகவே நாம் செயற்படுவோம்.

வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்கெண்ணும் நிலையங்களிலும் என்ன? நடைபெறுகின்றது என்பதனை கண்டறிவதற்கே நாம் வருகைதந்துள்ளோம் ஏனைய விடயங்கள் எமக்கு தெரியாது. அதற்கு நாம் பொறுப்பல்ல. ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் செல்வோம் ஆனால் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுக்கும் எம்மால் செல்லமுடியாது என்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சர்வதேச கண்காணிப்புக் குழுவினர் ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்க நடவடிக்கை


தேர்தல் ஆணையாளரின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள சர்வதேச கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் 21 ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட மட்டத்திலான முகவர்களையும் சந்திக்கவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், வேட்பாளர்களின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கவென சர்வதேச கண்காணிப்புக் குழுக்களுக்கு தேர்தல் ஆணையாளர் அழைப்பு விடுத்திருந்தார்.

ஐக்கிய நாடுகளின் அமைப்பு, பொது நலவாய நாடுகளின் சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகள் சங்கம் என்பவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இவற்றில் ஐக்கிய நாடுகளின் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இலங்கைக்கு வரமுடியாது என்பதை காரணங்களுடன் தெரிவித்துள்ளன. இரண்டு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் தேர்தல் முடிவின் பின்னர் 28ம் திகதி தங்களது அறிக்கையை தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கும் என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

பொதுநலவாய நாடுகளின் சபை மற்றும் ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகளின் சங்கம் என்பன இந்தத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

பொதுநலவாய நாடுகளின் சபையின் கண்காணிப்புக் குழுக்கள், அந்த நிறுவனங்களினாலேயே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டமொன்றின் கீழ் காண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளன. ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகளின் ஒன்றியம் தேர்தல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவு நேரடி ஒலிபரப்பு இல்லை:தேர்தல் ஆணையாளர்


இம்முறை ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவு பிரகடனம் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படமாட்டாது எனவும் பதிவு செய்யப்பட்டு பின்னரே அறிவிக்கப்படுமெனவும் தேர்தல் ஆணையாளர் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தாய்வானிலிருந்து கண்காணிப்புக் குழு இன்று இலங்கை வருகை


எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிப்பதற்கென தாய்வான் நாட்டிலிருந்து. மூவர் அடங்கிய தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் இன்று காலை 8.15 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர்.

தேர்தல் குற்றச் செயல்கள் மற்றும் வன்முறை தொடர்பில் கண்காணிப்பதற்காகவே இக்குழுவினர் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அதிகரித்து வரும் ஜனாதிபதி தேர்தல் வன்முறைகள் : கஃபே கவலை


ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் கவலையளிக்கக்கூடிய வன்முறை இடம்பெற்று வருவதாகத் தேர்தலைக் கண்காணிக்கும் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் கண்காணிப்பாளர்கள் இதனை அறிவித்துக்கொண்டிருக்கும்போதே, வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே மத்திய இலங்கையில் மோதல்கள் நடந்துள்ளன.

எதிர்க்கட்சியின் பெண் ஆதரவாளர் ஒருவர் செவ்வாயன்று சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். தேர்தல் வன்முறைகள் என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கஃபே கூறுகிறது.

பிபிசி செய்தியாளர் மீது தாக்குதல்

இலங்கையின் கிழக்கே பொலன்னறுவை நகரில் பணிபுரியும் பிபிசி சிங்கள சேவையின் பெண் செய்தியாளர் தக்ஷிலா தில்ருக்ஷி ஜெயசேனா, தேர்தல் பிரசாரக் மோதல் பற்றி செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும்போது ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.

இந்தச் சம்பவம் குறித்து செய்தி சேகரித்துவிட்டு வெளியேறும் போது, ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் என்று கூறப்படும் சிலரால் தஷிலா தாக்கப்பட்டு, அவரது செய்தி சேகரிக்கும் கருவி மற்றும் அவர் அணிந்திருந்த நகைகள் பிடுங்கப்பட்டதாக பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு பொலிஸ் பிரிவு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates